யாசர் அராஃபத் Newssense
உலகம்

பாகிஸ்தான்: ஒரு உச்சி மாநாடும், அடுத்தடுத்து தலைவர்களின் மரணங்களும் - உலகை உலுக்கிய கதை

அந்த ஒரு கூட்டத்துக்குப் பிறகு, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல தலைவர்கள் அடுத்தடுத்து தலைப்புச் செய்திகளாயினர்.

NewsSense Editorial Team

1974 பிப்ரவரி 22 அன்று பாகிஸ்தானில் உள்ள லாஹூர் நகரத்தில் அரபுலகத்தின் மிக முக்கிய தலைவர்கள் “ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோஆபரேஷன்” உச்சிமாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

அன்று பாகிஸ்தான் நாட்டின் நாயகனாக இருந்த சுல்ஃபிகர் அலி புட்டோ உச்சி மாநாட்டை தலைமை தாங்கி நடத்தினார். அந்த ஒரு கூட்டத்துக்குப் பிறகு, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல தலைவர்கள் அடுத்தடுத்து தலைப்புச் செய்திகளாயினர்.

ஷா ஃபைசல் தன் சகோதரரால் கொலை செய்யப்பட்டார்

செளதி அரேபியாவைச் சேர்ந்த ஷா ஃபைசலிடம் இருந்து இந்த மரண சம்பவங்கள் தொடங்கின. லாஹூரில் நடந்த உச்சிமாநாட்டுக்குப் பிறகு, 1975 மார்ச் 25ஆம் தேதி ஷா ஃபைசல் குவைத்தில் இருந்து வந்திருந்த அரசு விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். அதில் அவருடைய சகோதரர் ஃபைசல் பின் முசைத்தும் இருந்தார். சொல்லப் போனால் அந்த சகோதரர் இளவரசர் காலித் பின் முசைத்துக்கும் சகோதரர் தான்.

ஃபைசல் பின் முசைத் அப்போது சில ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தார், அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஷா ஃபைசல் அவரை அணைக்கும் போது துப்பாக்கியால் அவரது தாடைப் பகுதியிலும், காதிலும் சுட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஷா ஃபைசல் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

1966ஆம் ஆண்டு காலித் பின் முசைத், ஷாவுக்கு எதிரான கலவரத்தில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, அவரது சகோதரர் ஃபைசல் பின் முசைத் பழிவாங்கியதாகச் நம்பப்படுகிறது. இந்த குற்றத்துக்காக ஷாவை கொலை செய்த நபருக்கு 1975ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பொதுவெளியில் வைத்து மரன தண்டணை நிறைவேற்றப்பட்டது.

வங்க தேச ராணுவத்தால் ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்டார்

வங்கதேசத்தின் நிறுவனராகக் கருதப்படும் ஷேக் முஹிபுர் ரஹ்மான், தனது சொந்த நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். 1974ஆம் ஆண்டு ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோஆபரேஷன் அமைப்பில் உறுப்பு நாடாகச் சேர விண்ணப்பித்திருந்த ஷேக் முஜிபுர், அதே ஆண்டு லாஹூரில் நடந்த உச்சிமாநாடுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அது வங்க தேசம் & பாகிஸ்தானுக்கு இடையிலான பிரச்னையின் வீரியத்தைக் ஓரளவுக்குக் குறைத்தது.

1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, சில வங்க தேச ராணுவ வீரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானையும், அவரது குடும்பத்தில் பலரையும் சுட்டுக் கொன்றனர். இன்று வங்க தேச அதிபராக இருக்கும் ஷேக் ஹசீனா வஜித் மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா ஆகிய ஒரு சிலர் மட்டுமே அவர்கள் குடும்பத்தில் உயிர் தப்பினர். இந்த கொலையை அமெரிக்காவின் சி ஐ ஏதான் திட்டமிட்டதாக அப்போது முதல் இப்போது வரை பேசப்படுகிறது.

சுல்ஃபிகர் அலி புட்டோ - மரண தண்டணை கொடுத்த நீதிமன்றம்

1971ஆம் ஆண்டு இந்தியா உடனான போரில் தோல்வி, பாகிஸ்தானில் இருந்து வங்க தேசம் தனியாக பிரிந்துச் சென்று தனி நாடாக உருவானது… போன்ற பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி, சுல்ஃபிகர் அலி புட்டோ, ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோஆபரேஷன் உச்சி மாநாட்டை 1974ஆம் ஆண்டு லாஹூர் நகரத்தில் அரங்கேற்றிக் காட்டினார்.

சர்வதேச அரசியல் களமே பாகிஸ்தானை உற்று நோக்கத் தொடங்கியது. இஸ்லாமிய நாடுகளின் மையப் புள்ளியாக பாகிஸ்தான் அன்று அரசியல் வானில் ஜொலித்தது. இதற்கு சுல்ஃபிகர் அலி புட்டோவின் ராஜரீக ரீதியிலான காய் நகர்த்தல்கள் & சாதூரியமான அரசியல் தந்திரங்களே காரணம் என்றால் அது மிகையல்ல.

1977ஆம் ஆண்டு சுல்ஃபிகர் அலி புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி பொதுத் தேர்தலில் பெரிய வெற்றி கண்டது. ஆனால் கொஞ்ச காலத்திலேயே பாகிஸ்தான் ராணுவத்தின் ஜெனரல் ஜியா உல் ஹக் ஆட்சியைக் கவிழ்த்து, அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

சுல்ஃபிகர் அலி புட்டோ மீது, அவரது கட்சியைச் சேர்ந்த முஹம்மத் அலி கசுரி கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விசாரணை நடத்தப்பட்டது. வழக்கின் முடிவில், சுல்ஃபிகர் அலி புட்டோ கொலை செய்ததாக உறுதி செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி சுல்ஃபிகர் அலி புட்டோவின் மரண தண்டணை நிறைவேற்றப்பட்டது.

அன்வர் சதாத் கொலை

அன்வர் சதாத் கொலை

எகிப்து நாட்டின் அதிபராக இருந்த அன்வர் சதாத், ராணுவ பரேட் ஒன்றை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, காலித் இஸ்லாம்போலி என்கிற லெஃப்டினண்ட் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்டார். இவரும் லாஹூர் நகரத்தில் நடந்த ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோஆபரேஷன் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்.

யாசர் அராஃபத் விஷம் வைத்து கொல்லப்பட்டார்

பி எல் ஓ என்கிற அமைப்பின் தலைவராக இருந்த யாசர் அராஃபத் அவர்களும் 1974ஆம் ஆண்டு லாஹூரில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். பாலஸ்தீன - இஸ்ரேல் பிராந்தியத்தின் மிக முக்கிய தலைவராக இருந்த இவருக்கு, இஸ்ரேலிய உளவுத் துறை விஷம் கொடுத்ததாகச் சில வலைதளங்களில் கூறப்படுகிறது. 2004ஆம் ஆண்டு காலமான பிறகும், இன்று வரை இவரது மரணம் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அவருடைய ரத்தத்தில் ஹெச் ஐ வி வைரஸ் இருந்ததாகவும், ஆனால் அவரது மரணத்துக்கு காரணம் விஷம் தான் என்றும் உலக அளவில் நம்பப்படுகிறது.

முஅம்மர் கடாஃபி சாலைகளில் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்

லாஹூர் நகரத்தில் நடந்த ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோஆபரேஷன் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய இஸ்லாமிய தலைவர்களில் கடைசியாக மரணித்த தலைவர் முஅம்மர் கடாஃபி.

லிபியாவின் அதிபராக இருந்த இவர், உள்நாட்டுப் போர் காரணமாக தன் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஜரஃப் பள்ளத்தாக்குக்குத் தப்பிச் செல்லும் வழியில் நேட்டோ படைகளின் தாக்குதல் காரணமாக கழிவுநீர் செல்லும் பைப்புகளில் பதுங்கினார். அதைக் கண்டுபிடித்த புரட்சிப் படையினர், அவரை கடுமையாகத் தாக்கி, அவரை சிர்தே (Sirte) நகரச் சாலைகளை இழுத்துச் சென்றனர். 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி முஅம்மர் கடாஃபி உயிரிழந்தார்.

இந்த கட்டுரை துனியா நியூஸ்.டிவி என்கிற வலைதளத்தில் அலி வார்சி என்பவரால் எழுதப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?