Turkish girl pulled out of rubble alive more than 12 hours after devastating earthquake Twitter
உலகம்

துருக்கி: 12 மணி நேரத்திற்கு பிறகு இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி| Video

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்குள் இருந்த சிறுமியை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர். அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Priyadharshini R

பிப்ரவரி 6 ஆம் தேதி காலை துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் காஜியன்டப் நகரில் அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதில் துருக்கியின் 10 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் துருக்கியில் 7000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

15,000க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட நகரங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சிரியாவில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்னரே துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பேரழிவாக கருதப்படுகிறது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறுமி ஒருவரை உயிருடன் மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்குள் இருந்த சிறுமியை இந்த மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சர்வதேச அளவில் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்தியா உட்பட பல நாடுகள் உதவி மற்றும் மீட்புப் பணியாளர்களை அனுப்ப முன் வந்துள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?