Twitter Canva
உலகம்

திடீரென முடங்கிய ட்விட்டர் : அன்பே எலான் மஸ்க், இது தகுமோ? - பயனர்கள் அதிர்ச்சி

Keerthanaa R

இன்று காலை முதல் திடீரென ட்விட்டர் முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பல பகுதிகளில் திடீரென ட்விட்டர் முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ட்விட்டர் செயலிக்குள் நுழையும்போது தானாகவே கணக்குகள் லாக் அவுட் ஆகியிருந்ததாக கண்காணிப்பு தளங்களான டவுண்டிடெக்டர் டாட் காம் மற்றும் நெட்ப்ளாக்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், பல பயனர்கள் ட்விட்டருக்குள் நுழைய முற்பட்டபோது கருப்பு நிறத்தில் திரை தோன்றியதாகவும், எரர் மெஸ்சேஜ்கள் வந்ததாகவும் பயனர்கள் கூறியுள்ளனர்

சுமார் 10,000 பயனர்களுக்கு டெஸ்க்டாப்பில் ட்விட்டர் செயல்படவில்லை. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் பயனர்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. டவுண்டிடெக்டரின் படி, நேற்று மாலை 7 மணியளவிலிருந்தே ட்விட்டர் முடங்கியுள்ளது.

மேலும் அவர்களுக்கு ட்விட்டரில் வரும் நோட்டிஃபிகேஷன்களும் செயல்படவில்லை. ஆனால், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இந்த பிரச்னை குறையத் தொடங்கி, சுமார் 3700 பயனர்களுக்கு மட்டுமே ட்விட்டர் செயல்படாமல் இருந்துள்ளது.

பெரும்பாலும் பயனர்களுக்கு டெஸ்க்டாப்பில் ட்விட்டர் முடங்கியிருந்தது. நெட்ப்ளாக்ஸ் கண்காணிப்பு தளம், ஒரு சில ஆண்டிராய்டு பயனர்களும் இந்த பிரச்னையை எதிர்கொண்டதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

ஆனால், சுமார் 9 மணியளவில் இந்த பிரச்னை சரியாகத் தொடங்கியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று இன்னும் கண்டறியப்படவில்லை.

ட்விட்டர் தற்காலிகமாக செயலிழந்ததை அடுத்து, ட்விட்டர் டெஸ்க்டாப் என்ற ஹேஷ் டேக் டிரெண்டிங்கில் இருக்கிறது.

எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியது முதல் ஏதாவது ஒரு சர்ச்சையை சந்தித்துக்கொண்டே வருகிறது நிறுவனம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?