பிஸ்கெட் vs சமோசா: 'டீ'-க்கு சரியான ஜோடி எது? - இங்கிலாந்தில் தூள்கிளப்பும் இந்திய உணவு! Twitter
உலகம்

பிஸ்கெட் vs சமோசா: 'டீ'-க்கு சரியான ஜோடி எது? - இங்கிலாந்தில் தூள்கிளப்பும் இந்திய உணவு!

இங்கிலாந்து இளைஞர்கள் பிஸ்கெட்களை விட அதிகமாக வயிறு நிரம்பக் கூடிய, சுவையான உணவுகளை டீயுடன் சாப்பிட விரும்புவதாக ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் சமோசா அங்கு பிரபலமாகி வருகிறது.

Antony Ajay R

டீக்கு இணை உணவாக பஜ்ஜி, வடை, பிஸ்கட் என விரும்புவதை வைத்துச் சாப்பிடுவோம்.

இந்தியா முழுவதும் டீயுடன் சரியாக ஜோடி சேரும் உணவு என்றால் அது சமோசா தான். அது தெரிந்தோ தெரியாமலோ நாட்டுக்கான அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

சமோசாவை இந்திய உணவு என்றே உலகம் கூறிவருகிறது. ஆனால் சமோசாவின் மூலம் ஈரானில் இருந்து வந்தது. சரி கதைக்கு வருவோம்,

இந்தியாவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் பட்டையைக் கிளப்பி வருகிறது சமோசா. பல இங்கிலாந்து இளைஞர்கள் குக்கீஸ், பிஸ்கெட்டுக்கு பதிலாக சமோசாவைத் தேர்ந்தெடுப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து டீ & இன்ஃப்யூஷன்ஸ் அசோசியேஷன் என்ற (United Kingdom Tea & Infusions Association) அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில் டீ உடன் சாப்பிடும் இணை உணவுக்கான விருப்பம் மாறிவருவது கண்டறியப்பட்டுள்ளது.

samosa

இங்கிலாந்து இளைஞர்கள் பிஸ்கெட்களை விட அதிகமாக வயிறு நிரம்பக் கூடிய, சுவையான உணவுகளை டீயுடன் சாப்பிட விரும்புவதாக ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் சமோசா அங்கு பிரபலமாகி வருகிறது.

கிரானோலா பார்கள் ( granola bars ) டீயுடன் சாப்பிடும் இணை உணவாக முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் சமோசா உள்ளது.

ஆய்வு நடத்தப்பட்ட இளைஞர்களில் 8% பேர் சமோசாவை விரும்பியுள்ளனர். ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கூட சமோசாவை விரும்பவில்லை.

இங்கிலாந்து டீ & இன்ஃப்யூஷன்ஸ் அசோசியேஷன் தலைவரான டாக்டர் ஷாரன் ஹால், "இளைஞர்கள் அதிகமாக பயணம் செய்வதனால் வித்தியாச உணவுகளை விரும்புகின்றனர்.

அவர்கள் பயண நினைவுகளை மீட்டுக்கொண்டுவரும் உணவுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.

டீ நம்மிடம் பாஸிட்டிவ் நினைவுகளை கிளரிவிடுவதானால் சமோசாவை அவர்கள் தேர்ங்க்தெடுக்கலாம்" எனக் கூறியுள்ளார்.

மின்டெல் உணவு மற்றும் பானங்கள் ( Mintel Food and Drink ) என்ற ஆய்வு நிருவனம், பிஸ்கெட் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

"ஜென் சி (Gen Z) தலைமுறையினர் பிஸ்கெட்களை விரும்புவதில்லை. டிக் டாக் அவர்களுக்கு எண்ணற்ற உணவுகளை அறிமுகப்படுத்துகிறது.

அதில் வரும் பல உணவுகளை அவர்கள் முயற்சி செய்கின்றனர். இதனால் வருங்காலத்தின் பிஸ்கெட் விற்பனை கவலைக்குறிய ஒன்றாக மாறும்" என மின்டெலின் துணை நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஜானி ஃபோர்சித் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?