Ukraine NewsSense
உலகம்

போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்கள் பட்டியலை வெளியிட்ட உக்ரைன் - எத்தனை பேர் தெரியுமா?

NewsSense Editorial Team

போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்கள் பட்டியலை வெளியிட்ட உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 59-வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இந்தப் போரால் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் முயற்சி செய்தும் போரை நிறுத்த முடியாமல் உள்ளது. இந்தப் போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்கள் குறித்து உக்ரைன் தகவல் வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், `போரால் உக்ரைனில் இருந்து 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர். ரஷ்யத் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் ரஷ்ய வீரர்கள் 21, 200 பேர் உயிரிழந்துளனர். ராணுவ இழப்பைப் பொறுத்தவரை 2,162 ராணுவ வாகனங்கள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள், 83 டாங்கிகள், 1,523 இதர வாகனங்களை ரஷ்யா இழந்திருக்கிறது. போர் கப்பல், ஏவுகணைகள் அமைப்பு உள்ளிட்ட ராணுவ தளவாடங்களையும் ரஷ்யா இழந்திருக்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Amit shah

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை

நாளை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள அரவிந்தரின் 150 -வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் பாண்டிச்சேரி வருகிறார். அதற்கான பயணத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, இனறு மாலை சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வரும் அமித் ஷா ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப் அலுவலகத்தில் தங்குகிறார். நாளை காலை பாண்டிச்சேரி செல்கிறார்.

ஹஜ் கமிட்டி: முதன் முறையாக துணைத் தலைவர்களாக இரண்டு பெண்கள் நியமனம்!

ஹஜ் கமிட்டியின் புதிய தலைவராக ஏ.பி.அப்துல்லா குட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான இவர், பாஜகவின் தேசிய துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் முதல் முறையாக ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக முன்னாவாரி பேகம், மபூஜா கதுன் என இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், முன்னாவாரி பேகம் மத்திய வக்பு வாரிய உறுப்பினராகவும், மபூஜா கதுன் மேற்கு வங்கத்தின் மாநில பாஜக துணைத் தலைவராகவும் உள்ளனர்.

`உர்ஜா பிரவாஹா' - இந்தியக் கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்ட புதிய கப்பல்!

இந்தியக் கடலோர காவல்படையில் புதிதாக 'உர்ஜா பிரவாஹா' என்ற கப்பல் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. கொச்சியில் அமைந்துள்ள இந்திய கடலோர காவல்படையில் இந்தக் கப்பலானது சேர்க்கப்படுகிறது. உர்ஜா பிரவாஹா 36 மீட்டர் நீளம் கொண்டது. சரக்கு கப்பலுக்கான எரிபொருள், விமான எரிபொருள் மற்றும் நன்னீர் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் வகையில் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல், கடலில் இந்திய கடலோர காவல்படையின் செயல்பாட்டுத் திறனை நிச்சயமாக மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர் ரஷ்யா பயணம்: போரை நிறுத்தக் கோரி அதிபர் புதினுடன் சந்திப்பு!

உக்ரைன் மீதான போரை கைவிடக் கோரி உலக நாடுகள் பலவும ரஷ்யாவிடம் கூறி வருகின்றன. இந்நிலையில் 59 நாளாக ரஷ்யா போரை நிறுத்தாமல் உக்ரைனை மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 26-ம் தேதி ரஷ்யா செல்லவிருக்கிறார். அங்கு ரஷ்ய அதிபர் புதின், வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோவைச் சந்திக்கவிருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் புதினிடம் ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன மற்றொரு போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?