Ant Close up Shot Twitter
உலகம்

"இது ஹாரர் மூவி இல்லை!" - இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த எறும்பின் Closeup Shot!

Keerthanaa R

எறும்பின் முகத்தை மிக அருகில் துல்லியமாக புகைப்படம் எடுத்து நிகான் ஃபோட்டோகிராஃபி கான்டஸ்ட்டில் வென்றுள்ளார் லிதுவேனியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எறும்புகள் மிக சிறிய அளவிலான உயிரினங்களில் ஒன்று. இவை பார்ப்பதற்கே சிறியதாக இருக்கும் பட்சத்தில் இதன் உடல் உறுப்புகள் எப்படியிருக்கும் என்பதை நம்மில் பெரும்பாலானோர் கண்டிருக்கமாட்டோம். அதனடிப்படையில், லிதுவேனியா நாட்டை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் எறும்பை மிக மிக அருகில் புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் இருப்பது எறும்பின் முகம். பார்ப்பதற்கு நாம் சிறுவயதில் பார்த்த, கேட்ட கதைகளில் வரும் ராட்சத உயிரினம் போல இருக்கிறது அந்த எறும்பின் முகம். எறும்பின் கண்கள் தீப்பிழம்பாய் சிவப்பு நிறத்தில் இருக்க, அதன் வாய் பகுதியில் தங்க நிறத்தில் தகிக்கும் கோடுகளாக ரோமங்கள் இருக்கின்றன. இரு கண்களின் மேல் ஆன்டென்னாவும் இருக்கிறது.

யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ் என்ற புகைப்பட கலைஞர் தான் இந்த ஃபோட்டோவை எடுத்திருக்கிறார்.

2022ஆம் ஆண்டுக்கான நிகான் ஸ்மால் வேர்ல்டு ஃபோட்டோமைக்ரோகிராஃபி என்ற போட்டிக்காக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோஸ்கோப்பின் கீழ் 5 மடங்கு பெரிதுப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், போட்டியில் பரிசை தட்டி சென்றது.

மனிதர்கள் தங்களது சாதாரண கண்களில் பார்க்கமுடியாத விஷயங்களை புகைப்படம் எடுப்பது தான் இந்த போட்டி. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகைப்பட கலைஞர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தியிருந்தனர். மொத்தம் 57 புகைப்படங்கள் இமேஜஸ் ஆஃப் டிஸ்டின்க்ஷனுக்கு தேர்வாகியிருந்தது.

சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் நேற்று முதல் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. இதை பார்த்த இணையவாசிகள், இனி எறும்பை அலட்சியமாக நசுக்கி எறியும் முன் இந்த முகம் கண் முன் வரும் என தெரிவித்து வருகின்றனர்.

ஒருவர், இனி இரவு முழுவதும் இந்த முகம் உங்கள் நினைவில் நிற்கும் என தெரிவித்திருந்தார்.

மற்றொருவர் ஆங்கிலத்தில் ”giANTS!” என்று குறிப்பிட்டு தனது ஆச்சரியத்தைப் வெளிப்படுத்தினார். இணையவாசிகள் இந்தப் படத்தைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?