பொதுவாக அருங்காட்சியகம் என்றாலே ஓவியங்கள், கலை பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடம் போன்ற காட்சிகள் தான் கண்முன் வரும். அப்படி தான் நாம் ஒரு அருங்காட்சியத்தை பார்த்திருப்போம்.
இதற்கு முன்பு கூட டெல்லியில் உள்ள கழிவறை அருங்காட்சியகம் மக்கள் மத்தியில் பிரபலமானது. இதை விட வித்தியாசமான அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. அது தான் ‘முடி அருங்காட்சி’. துருக்கியில் அமைந்துள்ள இந்த முடி அருங்காட்சியகம் பல்வேறு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
இந்த முடி அருங்காட்சியகத்திற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்ய கதையை இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.
துருக்கியின் சிறிய நகரங்களில் ஒன்று தான் இந்த அவனோஸ். இந்த நகரம் மட்பாண்டங்கள் மற்றும் செராமிக் பாண்டங்களுக்கு பிரபலமானது. இங்கு ஏராளமான கடைகளை காணலாம். ஒரு மட்பாண்ட கடையின் அடித்தளத்தில், ஒரு குகை போன்ற இடம் உள்ளது. அந்த குகை முடிகளால் நிறைந்துள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 16,000 க்கும் மேற்பட்ட பெண்களின் முடி துண்டுகள், அவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு தகவல் போன்ற குறிப்புகளுடன் காணப்படுகிறது. இதுதான் தற்போது முடி அருங்காட்சியகமாக மாறியிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்திற்கு பின்னணியில் ஒரு அழகிய கதை உள்ளது.
துருக்கிய குயவரான கலிப் கோருக்சு, அவனோஸ் வீதியில் ஒரு மட்பாண்ட கடை வைத்துள்ளார். அவருடைய நீண்ட நாள் தோழி அவனோஸ் நகரை விட்டு வெளியேறியுள்ளார். அந்த தோழி விட்டு செல்லும் போது கலிப்புக்கு தனது தலைமுடியை நினைவுப் பரிசாக கொடுத்து சென்றிருக்கிறார்.
அதை அவர் பத்திரமாக தனது கடைக்கு கீழே இருக்கும் சுரங்க குகைக்குள் வைத்துள்ளார். கடைக்கு வரும் தனது வாடிக்கையாளர்களிடம் இந்த கதையைக் கூறுவாராம்.
இந்த கதையால் மனமிளகி போன பெண்கள் சிலர் தங்களது தலைமுடியையும் அவருக்கு வழங்கினர். இப்படி 38 ஆண்டுகள் பல பெண்களின் தலை முடியை சேகரித்துள்ளார். தற்போது அது அருங்காட்சியகமாக மாறி பல வண்ண முடிகள் இருக்கும் இடமாக உருவாகியிருக்கிறது.
நீங்கள் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தவுடன், தரையைத் தவிர அனைத்து இடத்திலும் முடிகள் அதனுடன் சில குறிப்புகள் இருப்பதை காணலாம். இந்த அருங்காட்சியகம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. அதே போல இந்த இடம் மிகவும் பிரபலமானதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது தான் பம்பர் பரிசு.
ஜூன் மற்றும் டிசம்பர் என்று வருடத்திற்கு இரண்டு முறை, தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் காலிப் கடைக்குள் நுழையும் முதல் வாடிக்கையாளரை,அந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று, சுவரில் இருந்து 10 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க சொல்வார். அந்த 10 நபர்களுக்கு தனக்கு ஆதரவு தந்ததற்காக நன்றி தெரிவித்து, கப்படோசியா சுற்றி பார்க்கும் மொத்த செலவையும் அவரே ஏற்பார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust