Martin Cooper Twitter
உலகம்

முதல் Cellphone கால் பேசி 50 ஆண்டுகள் நிறைவு! யாருக்கு முதல் கால் செய்யப்பட்டது தெரியுமா?

இந்த வயர்லெஸ் செல்ஃபோன் ஒரு கிலோவுக்கு மேல் எடையும், அளவில் பெரியதாகவும் இருந்தது. இதன் பேட்டரி 25 நிமிடங்கள் வரை தாக்குப்பிடித்தது, ரீசார்ஜ் செய்ய 10 மணி நேரம் தேவைப்பட்டது.

Keerthanaa R
ஜோயல், நான் மார்ட்டி. நான் இப்போது உங்களுடன் கைப்பேசியில் இருந்து பேசுகிறேன். உண்மையான, கையில் எடுத்துச்செல்லக் கூடிய ஒரு செல்ஃபோனில் இருந்து...
மார்டின் கூப்பர்

முதல் ஃபோன் கால் செய்யப்பட்டு ஏப்ரல் 3ஆம் தேதியுடன் 50 ஆண்டுகள் முடிவடைந்திருக்கிறது.

செல்ஃபோன் இன்றைய தேதியில் இன்றியமையாத ஒரு கருவியாகும். அதன் தேவை மற்றும் அதிகரித்த பயன்பாடு சாதாரண பட்டன் ஃபோன் முதல் ஸ்மார்ட் ஃபோன்கள் வரை தயாரிக்க வழி வகுத்திருக்கிறது.

நாம் நினைத்த நேரத்தில் நினைத்தவருடன் பேச பல விதமான செயலிகள் பயன்படுத்த, விளையாட என கைப்பேசிகள் பயன்படுகிறது.

இந்த கைப்பேசியில் முதன் முதலில் கால் பேசியது எப்போது என்று நாம் யோசித்து பார்த்திருப்போமா? அப்படி யோசித்திருந்தாலோ, அல்லது யோசிக்காவிட்டாலோ இந்த பதிவு அதற்கான விடை!

முதல் கால்

1973ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி முதல் செல்ஃபோன் கால் செய்யப்பட்டது. இந்த முதல் காலை பேசியது பிரபல மொட்டொரோலா நிறுவனத்தின் பொறியாளரான மார்டின் கூப்பர்.

இந்த முதல் அழைப்பு நியூயார்க்கின் சிக்ஸ்த் அவன்யூவின் 53 - 54வது தெருக்களுக்கு இடையில் நடந்துகொண்டே அவர் செய்தார்.

 DynaTAC (Dynamic Adaptive Total Area Coverage) என்கிற பெயரில், கையில் அடக்கிக்கொள்ள கூடிய, எங்கும் எளிதாக எடுத்துச்செல்ல கூடிய ஃபோனை கண்டுபிடிக்கும் முயற்சி அது.

யாருக்கு முதல் கால்?

கைப்பேசியை கையில் எடுத்ததும் மார்ட்டின் கூப்பர் செய்த முதல் அழைப்பு யாருக்காயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

நமக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் அம்மாவிடமோ, அப்பாவிடமோ, பெஸ்ட் ஃபிரெண்டுக்கோ அல்லது காதலர்களுக்கோ செய்திருப்போம்.

ஆனால் மார்ட்டினின் முதல் அழைப்பு அவரது ‘எதிரிக்கு’ சென்றது. ஆம், எதிரியா என்று கேட்டால், மோட்டொரோலாவை போலவே கைக்கு அடக்கமான ஒரு தகவல் தொடர்பு கருவியை தயாரிக்க AT&T என்ற நிறுவனமும் முயற்சித்துக்கொண்டிருந்தது.

அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஜோயல் எஸ்.என்கெல் என்பவருக்கு தான் முதல் அழைப்பு சென்றது.

ஜோயலுக்கு அழைத்த மார்ட்டின் பேசியதாவது,

“ஜோயல், நான் மார்ட்டி. நான் இப்போது உங்களுடன் கைப்பேசியில் இருந்து பேசுகிறேன். உண்மையான, கையில் எடுத்துச்செல்லக் கூடிய ஒரு செல்ஃபோனில் இருந்து” என்றார்.

“அந்த பக்கம் அமைதியே நிலவியது. அவன் பல்லைக்கடித்து கொண்டிருந்திருப்பான் என நினைக்கிறேன்” என மார்ட்டின் 2011ல் பிபிசி செய்திதளத்திற்கு அளித்த பேட்டியில் நினைவுக்கூர்ந்தார்.

வடிவமைப்பு

இந்த வயர்லெஸ் செல்ஃபோன் ஒரு கிலோவுக்கு மேல் எடையும், அளவில் பெரியதாகவும் இருந்தது. இதன் பேட்டரி 25 நிமிடங்கள் வரை தாக்குப்பிடித்தது, ரீசார்ஜ் செய்ய 10 மணி நேரம் தேவைப்பட்டது.

அதன் எடை அதிகமாக இருந்ததால், வடிவமைப்பு பெரியதாக இருந்ததால், 25 நிமிடங்கள் வரை கையில் வைத்திருப்பது சிரமமாக இருந்தது.

சந்தைக்கு வர 10 ஆண்டுகள்

மோட்டொரோலா நிறுவனம் இந்த கைப்பேசியை சந்தைக்கு கொண்டுவர இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டது. ஏஎஃப்பி அறிக்கையின் படி, 1983ஆம் ஆண்டு DynaTAC 8000X என பெயரிடப்பட்ட கைப்பேசிகள் விற்பனைக்கு வந்தன.

அப்போது அந்த கைப்பேசியின் விலை 3,995 டாலர்கள். அந்த சமயத்தில் வாய்ஸ்மெயில்களும் பிரபலமாக இருந்தன.

அச்சமூட்டும் வளர்ச்சி

மெல்ல கைப்பெசிகள் எடை, அளவுகள் குறைந்தும், கைக்குள் அடங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டன. இன்டெர்னெட் என்ற ஒன்று வந்த பிறகு அது, 1ஜி-யில் தொடங்கி தற்போது 5ஜி வரை வளர்ந்திருக்கிறது.

அப்போது தகவல் தொடர்புக்காக இந்த செல்ஃபோன் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்றைய தேதியில் அதன் அசாதாரண வளர்ச்சி, சற்றே நெருடலாக தான் இருக்கிறது என்கிறார் கூப்பர்.

“ஒருவரிடம் நீங்கள் பேசவேண்டும் என நினைக்கிறீர்கள், அதற்கு ஒரு தட்டையான கருவியை நாடியிருக்கும் நிலை இருக்கிறது என்றால் அது இயற்கைக்கு மாறாக, அர்த்தமற்றதாக தோன்றுகிறது” என்கிறார்.

இந்த வளர்ச்சி ஒரு கட்டத்தில் மனிதனுக்கு வியாதிகளை விளைவித்துவிடும் என எச்சரிக்கிறார் அவர். எனினும், கைப்பேசிகள் மனிதத்தை நல்லவிதத்தில் தான் மாற்றியிருப்பதாக தான் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

மார்ட்டின் தற்போது லேட்டஸ்ட் ஐஃபோனை பயன்படுத்துகிறார். அவரிடம் ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் இருக்கிறது. தன் ஹியரிங் எய்டை ஐஃபோனுடன் இணைத்துக்கொண்டு அதனை பயன்படுத்தி வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?