Joe Biden mispronounces Rishi Sunak's name Twitter
உலகம்

ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரித்த ஜோ பைடன் - நெட்டிசன்களின் ரியாக்ஷன் என்ன?

Priyadharshini R

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரித்ததையடுத்து நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் தீபாவளி விமர்சையாக கொண்டாடப்பட்டது, அமெரிக்கா வெள்ளை மாளிகையிலும் தீபாவளி கொண்டாடப்பட்டது

Joe Biden

அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி கிடைத்தது. உடனே அதை மேடையிலேயே ஜோ பைடன் பகிர்ந்து கொண்டார்.

ஆனால், 79 வயதான ஜோ பைடன், ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரித்தார்.

அதாவது ரிஷி என்பதை 'ரஷீத்' என்றும், சுனக் என்பதை 'சனூக்' என்றும் மாற்றி உச்சரித்தார் ஜோ பைடன்.

Rishi Sunak

''ரஷீத் சனூக் இப்போது பிரதமர் என்று செய்தி கிடைத்திருக்கிறது'' என்று ஜோ பைடன் கூறினார்.

இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ஜோ பைடன் நெட்டிசன்களின் கேலிகளுக்கு ஆளானார்.

அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

ரிஷி சுனக் பெயரை ஜோ பைடன் கொலை செய்வதை பாருங்கள்'' என்று கிண்டலடித்தனர்.

டிவிட்டர் பக்கத்தில் ஒருவர், ''ரஷீத் சனூக் பிரதமரானது சாதனை என்று ஜோ பைடன் கூறுகிறார்.

அவரது பெயரை கற்றுக்கொள்வது பற்றி கவலைப்படாததுதான் மிகப்பெரிய சாதனை'' என்று கேலி செய்துள்ளார்.

'ரஷீத் சனூக்' என்று பெயருடன் ரிஷி சுனக் பாரம்பரிய அரபு உடையில் இருப்பது போல் சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தையும் சிலர் வெளியிட்டுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?