US : Twins born in 2022 and 2023 - they are only 6 minutes apart Twitter
உலகம்

2022 மற்றும் 2023ல் பிறந்த இரட்டை குழந்தைகள் : அமெரிக்காவில் ஒரு ருசிகர சம்பவம்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரட்டை குழந்தைகளை, வெவ்வேறு வருடத்தில் பெற்றெடுத்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Priyadharshini R

எதிர்பாராத சில ஆச்சரியமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டே தான் உள்ளன.

அதுவும் குழந்தை பெற்றெடுக்கும் விவகாரத்தில் பல வித்தியாசமான விஷயங்கள் நடக்கின்றன. கருவுற்றிருப்பது தெரியாமலே குழந்தை பெற்றெடுப்பது, பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு முட்டைகள் என பல விஷயங்கள் நடக்கின்றன.

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரட்டை குழந்தைகளை வெவ்வேறு ஆண்டுகளில் பெற்றெடுத்துள்ளார்.

வெவ்வேறு ஆண்டுகளில் ஆறு நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளை அமெரிக்க தம்பதியினர் வரவேற்றனர்.

டென்டனைச் சேர்ந்த 37 வயதான காளி ஜோ ஸ்காட் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு ஜனவரி 11 ஆம் தேதி சிசேரியன் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. 2023 இல் தனது இரட்டையர்கள் பிறப்பார்கள் என்று அவர் நினைத்தார்.

ஆனால் டிசம்பர் 29 அன்று பரிசோதனையின் போது அவருக்கு ரத்த அழுத்தம் இருந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு வலி ஏற்பட்டு டிசம்பர் 31 அன்று இரவு 11:55 மணிக்கு தனது முதல் மகளான அன்னி ஜோவைப் பெற்றெடுத்தார். ஆறு நிமிடங்களுக்குப் பிறகு, அன்னி ஜோவின் சகோதரி எஃபி ரோஸ் ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12:01 மணிக்குப் பிறந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?