Woman Delivers Baby In McDonald's Bathroom, Calls Child Her 'Little Nugget' Twitter
உலகம்

McDonald's குளியலறையில் பிறந்த பெண் குழந்தை - வினோதமாக பெயர் வைத்த பெற்றோர்!

Priyadharshini R

அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் குளியலறையில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தம்பதிகள் தங்கள் பெண் குழந்தைக்கு "லிட்டில் நக்கட்ஸ்" என்று பெயரிட்டனர்.

அலண்ட்ரியா வொர்த் என்ற கர்ப்பிணிப் பெண்ணை அவரது வருங்கால கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

McDonald's

அப்போது செல்லும் வழியில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் கழிவறையை பயன்படுத்திருக்கிறார் அந்த பெண்.

மெக்டொனால்ட்ஸ் ஊழியர் ஒருவர் கழிவறைக்குள் நுழைந்ததும் அதிர்ச்சியடைந்தார்.

அலண்ட்ரியா வொர்த் பனிக்குடம் உடைந்ததால் குளியலறையில் அழுது கொண்டிருந்ததாகவும், ”எனக்கு பிரசவ வலி வந்துவிட்டது, யாராவது என் கணவரை அழைக்கவும், அவர் காரில் வெளியே இருக்கிறார்” என அந்த பெண் கூறியதாக மேலாளர் தெரிவித்திருக்கிறார். மெக்டொனால்டு ஊழியர்கள் அந்தப் பெண்ணுக்கு உதவினார்.

குழந்தையின் தந்தை பிலிப்ஸ் கூறுகையில், மனைவியின் பிரசவத்திற்கு மெக்டொனால்ட்ஸில் வேலை பார்க்கும் பெண்கள் உதவி செய்தனர்.

அடுத்த 15 நிமிடத்தில் பெண் குழந்தை பிறந்தது. அவள் பெயர் நந்தி அரியா மோரேமி பிலிப்ஸ், அவளுடைய செல்லப்பெயர் "லிட்டில் நக்கட்ஸ் " வைக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?