வியட்நாம் : மனித காலடி தடமே பதியாத உலகின் மிகப் பெரிய குகை - உள்ளே இருக்கும் தனி ஒரு உலகம்! Hang Son Doong
உலகம்

வியட்நாம் : மனித காலடி தடமே பதியாத உலகின் மிக பெரிய குகை - உள்ளே இருக்கும் தனி ஒரு உலகம்!

Antony Ajay R

2009ம் ஆண்டு ஒரு ஏப்ரல் மாதத்தில் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மூன்று நீச்சல் வீரர்கள் வியட்நாமுக்கு அழைக்கப்பட்டனர்.

ஜேசன் மல்லின்சன், ரிக் ஸ்டன்டான், கிறிஸ் ஜ்வெல் ஆகிய மூவரும் அட்வெஞ்சர் பயணங்கள் மேற்கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

யாருமே கால்வைக்காத அல்லது பாதம் பதிக்காத இடத்துக்குள் துணிச்சலாக நுழையும் சாகசக்காரர்கள்.

இவர்களுக்கு வியட்நாமின் போங்க் நா கா பேங்க் தேசிய பூங்காவை அலசி ஆராயும் பணி வழங்கப்பட்டது. அப்போது சன் தூங் (Son Doong) குகையின் நீர்வழிப்பாதையை ஆராய்ந்துகொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக அதுவரை யாரும் பார்த்திராத மிகப் பெரிய குகையுடன் அந்த நீர்வழிப்பாதை இணைவதைக் கண்டறிந்தனர்.

ஹாங் சன் தூங் எவ்வளவு பெரியது?

குகை என்றால் மனிதர்கள் குனிந்து செல்லும் அளவு குட்டையான பிளவாக இருக்கும் என்று தானே நினைத்திருப்பீர்கள்? இதன் உயரம் மட்டும் 200 மீட்டர். சில இடங்களில் 503 மீட்டர் வரை உயரமானதாக இருக்கிறது.

175 மீட்டர் அகலமான இந்த குகை 9.4 மீட்டர் நீளமானது. உள்ளேயே தனி ஒரு நகரையே உருவாக்கும் அளவு இந்த குகையில் விசாலம் இருக்கிறது.

ஹாங் சன் துங் அருகில் உள்ள ஒரு குகையில் 5000 ஆண்டுகளுக்கும் முன்னும் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஹாங் சன் துங்கில் அப்படி யாரும் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லை.

குகைக்குள் என்னென்ன இருக்கிறது?

மனித காலடித்தடமே படாமல் இருந்த அந்த குகை ஒன்றும் தனியாக இல்லை. 200 மீட்டர் இறங்கி வரும் திறன்கொண்ட குரங்குகள் குகைக்குள் உள்ள காட்டுக்கு வந்து நத்தைகளை உண்கின்றன.

இங்குள்ள உயிரினங்கள் எவற்றுக்குமே கண்கள் இல்லை. மேலும் அவை எல்லாமும் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருந்தன.

அணில், எலி, வௌவால்கள் மற்றும் சில பறவைகளும் இங்கு வாழ்கின்றன.

சிறப்பாக உலகில் வேறெங்கும் வசிக்காத புதிய வகை மீன்கள், சிலந்திகள், தேள்கள், இறால்கள் மற்றும் சில வகைப் பூச்சிகளையும் குகைக்குள் கண்டறிந்தனர்.

இந்த உயிரினங்கள் எவற்றுக்குமே கண்கள் இல்லை. மேலும் அவை எல்லாமும் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருந்தன.

இந்த குகையில் இரண்டு இடங்களில் மட்டும் சூரிய வெளிச்சம் வரும் வகையிலான துளைகள் இருந்தது. இந்த வெளிச்சம் தான் மொத்த குகைக்குமான உற்பத்தி மூலமாக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த வெளிச்சத்தைக் கொண்டு 1.5 கிலோமீட்டர் வரை நாம் பார்க்க முடியும்.

குகையில் உள்ள காடுகளில் 50 மீட்டர் வரை உயரமான மரங்கள் வாழ்கின்றன. நம்புவதற்கு கடினமாக தான் இருக்கிறது.

இந்த குகையினுள் உள்ள சூழலியலைப் பொறுத்து உள்ளேயே மேகங்கள் கூட உருவாகலாம் என்கின்றனர்.

இந்த குகையின் சிறப்பு இது மிகப் பெரியது என்பது மட்டுமல்ல. இங்கு வசிக்கும் பல விதமான உயிரினங்கள், 4 மில்லியன் ஆண்டுக்கு முன்னான சூழல், அதற்கு உள்ளேயே இருக்கும் அழகிய இடங்கள், மரங்கள், நீச்சல் குளங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஹாங் சன் தூங் குகைக்கு நாமும் பயணிக்க முடியுமா?

Oxalis Adventure Tours என்ற நிறுவனத்தின் மூலமாகவே இந்த குகைக்கு நாம் பயணிக்க முடியும். இதன் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார் ஹோவர்ட் லிம்பெர்ட்.

ஒரு ஆண்டுக்கு 1000 பயணிகளை மட்டுமே குகையை சுற்றிப்பார்க்க அனுமதிக்கின்றனர். தேர்ந்த நீச்சல் வீரர்கள் கைடாக நம்முடன் வருவார்கள்.

பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இந்த குகையில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டவுடன் வியட்நாமின் ஏழ்மையான பகுதியாக இருந்த இந்த இடம் செல்வம் செழிக்கும் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது.

இந்த குகைக்கு சென்று வர இரண்டரை லட்சம் வரை செலவாகலாம் என சில தளங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?