Vivek Ramasamy: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி இளைஞர்- இவரது பூர்வீகம் எங்கே? Twitter
உலகம்

Vivek Ramasamy: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி இளைஞர்- இவரது பூர்வீகம் எங்கே?

Antony Ajay R

இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி குடியரசு கட்சி சார்பாக அமெரிக்க குடியரசு தேர்தலில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே நிக்கி ஹேலி குடியரசு கட்சியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இரண்டாவது இந்திய - அமெரிக்கராக விவேக் ராமசாமி ட்ரம்பை எதிர்த்து களத்தில் இறங்கியுள்ளார்.

2024ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பங்கேற்கப்போவது யார் என்ற கேள்வி தான் இப்போது ஒவ்வொரு அமெரிக்கர் மனதிலும் இருக்கிறது.

விவேக் ராமசாமி குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியன் 5 முக்கிய விஷயங்களைப் பார்க்கலாம்.

கேரளாக்காரர்

விவேக் ராமசாமி 1985 ஆகஸ்ட் 9ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் கேரளத்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள்.

ஒஹியோ மாகாணத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் வேலை செய்து வந்தனர்.

விவேக் ராமசாமியின் நிறுவனங்கள்

ராமசாமி ஸ்ட்ரிவ் அஸ்ஸெட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இதற்கு முன்னதாக ராய்வன்ட் சயின்ஸ் என்ற மருந்து நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்.

வெற்றிகரமான தொழிலதிபர்

2015,16 ஆண்டுகளில் மிகப் பெரிய பயோ டெக் ஐபிஓக்களுக்கு தலைமைத் தாங்கினார்.

இதன் மூலம் வெற்றிகரமாக பல மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ( FDA ) அங்கீகாரம் பெற்ற மருந்துகளைத் தயாரித்தார்.

விவேக் ராமசாமி கல்வி

2007ம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தில் தனது சட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார்.

விவேக் ராமசாமி சொத்து மதிப்பு

இவரது சொத்துமதிப்பு 2016ம் ஆண்டு தகவல்களின் படி, 600 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் ஏறத்தாழ 49 ஆயிரம் கோடி ரூபாய்.

அமெரிக்காவில் 40 வயதுக்கு உட்பட்ட தொழிலதிபர்களில் மிகப் பெரிய பணக்காரர் இவர் தான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?