Wagner Head Twitter
உலகம்

Wagner: ரஷ்ய அதிபர் புதினை எதிர்த்த 'வாக்னர்' குழு தலைவர் ப்ரிகோஜின் விமான விபத்தில் பலி

Keerthanaa R

ரஷ்ய அதிபர் புதினை எதிர்த்து கிளர்ச்சி செய்த வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகொஜின் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விமான விபத்தில் யெவ்ஜெனி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த வாக்னர் படை ரஷ்யாவை எதிர்த்து போர் தொடுத்தது. ரஷ்யாவின் தனியார் ராணுவ குழுவான இவர்கள், சொந்த நாட்டையும் அதிபரையும் எதிர்த்து நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உக்ரைனுக்கு எதிரான போரில், இந்த வாக்னர் படை ரஷ்யா சார்பில் போர் புரிந்து வந்தது வாக்னர் படை என்பது குறிப்பிடத்தக்கது

Wagner: உலகையே அச்சுறுத்தும் தனியார் இராணுவம் - கொடூர குற்றங்களில் ஈடுபடும் இவர்கள் யார்?

இந்நிலையில், வாக்னர் குழு தலைவர் பயணித்த விமானம் நேற்று விபத்துக்குள்ளாகி அவர் மரணமடைந்துள்ளார்.

மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இடையே பயணித்த தனியார் விமானம் விபத்துக்குள்ளானதாக ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகளுக்கான அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

முதற்கட்ட தகவல்களின்படி, விமானத்தில் இருந்த 10 பேரும் உயிரிழந்துவிட்டனர். அதில் மூன்று பணியாளர்கள் உள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

putin

ப்ரிகோஜின் உட்பட வாக்னரின் நடவடிக்கைகளை நிர்வகித்த மற்றும் ரஷ்ய இராணுவ உளவுத்துறையில் பணியாற்றியதாகக் கூறப்படும் ஒரு நிழல் நபரான டிமிட்ரி உட்கினையும் இந்த விபத்தில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடுடித்து எரிந்துகொண்டிருக்கும் காட்சிகளே கிடைத்துள்ளதால், ரஷ்ய அமைச்சகம் கூறுவது போல ப்ரிகோஜின் அதில் இருந்தாரா, அவர் இறந்துவிட்டாரா என்பதை வாக்னருடன் தொடர்புடையவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

மறுபுறம், ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள்,

"இது எதிர்பார்த்த ஒன்று தான், புதினை எதிர்த்தவர்களின் நிலை இப்படி தானே ஆகும்?"

"ரஷ்யாவில் நடக்கும் எல்லாவற்றுக்கு பின்னாலும் புதின் இருக்கிறார்"

என்பது போன்ற கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?