உள்ளாடைக்கு ஒரு தினமா? உலகில் கொண்டாடப்படும் விசித்திரமான நாட்கள் குறித்து தெரியுமா? ட்விட்டர்
உலகம்

உள்ளாடைக்கு ஒரு தினமா? உலகில் கொண்டாடப்படும் விசித்திரமான நாட்கள் குறித்து தெரியுமா?

Priyadharshini R

உலகெங்கிலும் உள்ள மக்கள் சில வித்தியாசமான நாட்களைக் கொண்டாடுகிறார்கள் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இந்த நாட்கள் எல்லாமா? கொண்டாடுகிறார்கள் என்று திகைப்பீர்கள்.

அப்படி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகவும் வேடிக்கையான மற்றும் அசாதாரணமான சில நாட்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

Work Naked Day (February 4)

​Work Naked Day என்பது நீங்கள் ஆடை இல்லாமல் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அர்த்தமில்லை

இதன் பொருள் நீங்கள் அலுவலகத்திற்கு உங்களுக்கு மிகவும் வசதியான உடைகளில் வரலாம். அந்த நாளில் மட்டும் வீட்டில் இருப்பதை போன்ற சாதாரண உடையை உடுத்தி கொண்டு வேலை செய்யலாம்.

Plan a Solo Vacation Day (March 1)

பொதுவாக சுற்று பயணங்கள் நண்பர்களுடன் , குடும்பத்தினருடன் செல்வார்கள். ஆனால் உலகம் சுற்றுவதற்கு துணை தேவையில்லை. அதை நீங்களே செய்லாம் என Solo trip என்ற ஒன்று இருக்கிறது.

அதற்காக மார்ச் 1 அன்று Plan a Solo Vacation Day என்று கொண்டாடுகின்றனர். இந்த தினத்தில் அனைத்து இடங்களுக்கும் தனியாக செல்ல திட்டம் போடலாம்

National Underwear Day (August 5)

இந்த நாள் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. இது வேடிக்கையாக இருந்தாலும், இந்த நாளில் உங்களுக்குப் பிடித்த உள்ளாடைகளை நீங்கள் அணிந்து கொள்ளலாம்.

National Cleavage Day (March or April)

இந்த நேஷனல் கிளீவேஜ் டே, தென்னாப்பிரிக்காவில் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் மே 19 அன்று கொண்டாடப்படுகிறது. இதனால் கிடைக்கும் நிதி தென்னாப்பிரிக்கர்களுக்கு உதவும் ஒரு அறக்கட்டளைக்கு செல்கிறது.

World Bromance Day (August 14)

இந்த நாள் எப்படி உருவானது என்று யாருக்கும் தெரியாது! ஆகஸ்டு 14, காதலர் தினத்திற்குப் பிறகு சரியாக ஆறு மாதங்கள் கழித்து பிரமோன்ஸ் தினம் என்று கொண்டாடப்படுகிறது.

friendship day போன்று தங்கள் நண்பர்களை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைக் காட்டும் நாட்களில் இதுவும் ஒன்றாகும்.

World Mosquito Day (August 20)

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 20-ம் தேதி கொசு நாள் கொண்டாடப்படுகிறது. அனாபிலிஸ் கொசுக்கள் மலேரியாவை மனிதர்களுக்கு பரப்பும் என்று பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸ் கண்டுபிடித்ததை நினைவுகூரும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. இது 1897 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

International Nose Picking Day (April 23)

இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?