What chicken feet tell us about daily life in Egypt Twitter
உலகம்

" கோழிக் கால்களை" சாப்பிட சொல்லும் எகிப்து அரசு : கதறும் மக்கள் - என்ன காரணம்?

Priyadharshini R

இலங்கை, பாகிஸ்தானை தொடர்ந்து எகிப்து நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்குள்ள மக்கள் மூன்று வேளை உணவு சாப்பிடக்கூட கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மக்களுக்கு ஊட்டச்சத்து வேண்டும் என்பதற்காக அந்நாட்டு அரசு அறிவுரை வழங்கிய விஷயம் தான் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பொதுவாக நாய், பூனைகளுக்கு உணவாகத் தூக்கி எறியப்படும் கோழிக்கால்களை சமைத்து உண்ண வேண்டும் எனவும், அதில் புரதச் சத்து அதிகம் உள்ளது எனவும் அந்நாட்டு அரசு மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த ஆலோசனையை மக்கள் கடுமையாக விமர்சித்தனர், அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி

பல நாடுகள் பணவீக்க உயர்வால் தத்தளித்து வருகின்றன.

அப்படி பணவீக்க நெருக்கடியால் சிக்கி தவிக்கும் நாடுகளில் எகிப்தும் ஒன்று. அந்த நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களான சமையல் எண்ணெய், சீஸ் ஆகியவை விலையேற்றம் கண்டதால், ஆடம்பர பொருட்களாகிவிட்டன.

இந்த நெருக்கடியால் சில பொருட்களின் விலை இரண்டு மடங்காக, மூன்று மடங்காக அதிகரித்தையடுத்து மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இறக்குமதி பெரிதும் பாதிப்பு

எகிப்து நாடு உணவு தேவையில் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளதால் இந்த நெருக்கடியும், விலை அதிகரிப்பும் நிலவுகிறது.

மக்கள்தொகை அதிகமாக இருக்கும் நாடான எகிப்து, உள்நாட்டில் விளையும் உணவை விட அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. நாட்டில் வளரும் கோழிகளின் தீவனம் கூட பிற நாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது.

கடந்த 12 மாதங்களில் எகிப்திய பவுண்ட் அதன் மதிப்பில் பாதிக்கும் மேல் இழந்ததுள்ளது.

ஜனவரியில் நாணய மதிப்பு மீண்டும் சரிந்ததால் தானியங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களின் ​​இறக்குமதி செலவுகள் கடுமையாக உயர்ந்தன.

Egg

கோழி - முட்டை விலை உயர்வு

முட்டையின் விலை அதிகமாகி ஒரு முட்டை 0.16 டாலருக்கு (இந்திய மதிப்பில் 13 ரூபாய்) விற்பனையாகிறது

ஒரு கிலோ கோழிக் கறியின் விலை 160 எகிப்திய பவுண்டுகள் (சுமார் 420 ரூபாய்) விற்பனையாகிறது

கோழியின் லெக்பீஸ் 90 எகிப்திய பவுண்டுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிக்கன் கால்களின் விலை 20 எகிப்திய பவுண்டுகள் விற்பனையாகிறது.

நெருக்கடிக்கு என்ன காரணம்

எகிப்தில் அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக அந்நாடு தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் நடக்கும் போரும், கொரோனா தொற்றும், முக்கிய காரணங்களாக என்று அதிபர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய பிறகு எகிப்தின் பொருளாதார நிலை மோசமானது.

உலகிலேயே அதிக கோதுமை இறக்குமதி செய்யும் நாடுகளில் எகிப்து இரண்டாவது இடத்தில் உள்ளது. போரில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யாவும், உக்ரைனும் தான் எகிப்து நாட்டுக்கு கோதுமையை அதிகமாக ஏற்றுமதி செய்து வந்த நாடுகள்.

Russia - Ukrain war

நடந்து வரும் போரினால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு அத்தியாவசிய உணவு பொருளான கோதுமையின் விலை உயர்ந்தது.

அதுமிட்டுமில்லாமல் எகிப்துக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டவர்கள். போரினால் சுற்றுலாத் துறையும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத பங்களிப்பை அளிக்கும் சுற்றுலாத் துறை, ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து தற்போது போர் காரணமாக கடுமையாக வீழ்ச்சியை சுற்றுலாத்துறை சந்தித்துள்ளது.

கடந்த காலங்களில் எகிப்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல் முன்னாள் அதிபர்களான ஹோஸ்னி முபாரக், முகமது மோர்சியும் ஆகியோர் பதவி விலக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது.

தற்போது பொருளாதார சூழலால் மக்களை எந்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பது தெரியவில்லை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?