cough syrups (Rep) Twitter
உலகம்

காம்பியாவில் 66 குழந்தைகள் பலி: இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்து காரணமா? - WHO விசாரணை

மெய்டென் நிறுவனத்தால் (Maiden Pharmaceuticals Limited) தயாரிக்கப்பட்ட இந்த இருமல் மருந்தில் மனிதர்கள் ஏற்க முடியாத அளவுக்கு வேதிபொருட்கள் கலந்திருப்பதாக கூறப்படுகிறது.

Priyadharshini R

காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் பலியானதற்கு இந்தியாவின் இருமல் டானிக்குகள்தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் தயாரிக்கப்படும் இருமல் மருத்துகளால் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெய்டென் நிறுவனத்தால் (Maiden Pharmaceuticals Limited) தயாரிக்கப்பட்ட இந்த இருமல் மருந்தில் மனிதர்கள் ஏற்க முடியாத அளவுக்கு வேதிபொருட்கள் கலந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த டானிக்குகளை குடித்ததால்தான் காம்பியால் சிறுநீரக பாதிப்பு மற்றும் குழந்தைகள் மரணம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை 66 குழந்தைகள் பலியாகியுள்ளனர். அறிக்கையின் படி உலகளாவிய சுகாதார அமைப்பு இந்தியாவில் உள்ள அந்த மருந்து நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் விசாரணை நடத்தி வருவதாகக் கூறியது

மேலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய இந்த மருந்து தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

காம்பியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் இம்மருந்துகள் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் விரிவான தகவல்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?