America : இந்திய பெண்ணின் மரணத்தை கேலி செய்த போலீஸ் - யார் இந்த ஜான்வி காண்டுலா? Twitter
உலகம்

America : இந்திய பெண்ணின் மரணத்தை கேலி செய்த போலீஸ் - யார் இந்த ஜான்வி காண்டுலா?

Antony Ajay R

அமெரிக்காவில் இந்திய மாணவி ஒருவர் சியாட்டல் போலீஸ் டிப்பார்ட்மெண்ட் அதிகாரிகளின் காரில் இடித்து மரணமடைந்தார். இறந்த மாணவியின் உடலைக் கண்டு ஒரு காவல்துறை அதிகாரி கேலியாக சிரிக்கும் வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியது.

கடந்த ஜனவரியில் ஜான்வி காண்டுலா என்ற மாணவி, கெவின் டேவ் என்ற அதிகாரியால் காரில் இடித்து கொல்லப்பட்டார். அவரது உடன் பணியாற்றும் மற்றொரு அதிகாரி இதனை கேலி செய்தார்.

அந்த அதிகாரியின் பெயர் ஆடெரெர். அந்த வீடியோவில் அவர் கார் ஓட்டியபடியே யாரிடமோ, "அவள் இறந்துவிட்டாள்" எனக் கூறி சிரிக்கிறார். "அது ஒரு சாதாரண ஆள் தான்" என்று கூறியவர், "ஒரு செக் எழுதுங்கள் - 11 ஆயிரம் டாலர்கள். அவள் 26 வயதுடையவள் அவ்வளவுதான் மதிப்பு" எனப் பேசுகிறார்.

இந்த வீடியோ சமுக வலைத்தாளங்களில் பார்த்த யாவரையும் கோபமடைய வைத்துள்ளது.

யார் அந்த ஜான்வி காண்டுலா?

ஜான்வி ஆந்திரபிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். பெங்களூருவில் இருந்து மேற்படிப்புக்காக தனது 23 வயதில் 2021ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார்.

தகவல் தொடர்பு அமைப்புகளில் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பை மேற்கொண்டுவந்தார். 2023ம் ஆண்டில் அவரது கல்லூரி படிப்பின் கடைசி ஆண்டில் இருந்தார்.

ஜனவரில் 23, 2023 அன்று அவர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அதி வேகமாக வந்த கார் மோதி மரணமடைந்தார். மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய அந்த சாலையில் 116 கி.மீ வேகத்தில் வந்து மோதியது கெவின் டேவ் என்ற போலீஸ்காரரின் கார்.

அமெரிக்காவில் படித்துவரும் இந்திய மாணவிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதும், அதை ஒரு காவலர் மனிதாபிமானமற்று நகைப்பதும் திகைக்கவைப்பதாக இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?