Why do some cultures believe the number 4 is unlucky? Twitter
உலகம்

சீனா, கொரியா, ஜப்பான் : லிஃப்ட்களில் எண் 4ஐ தவிர்க்கும் நாடுகள்; ஏன்? திகிலூட்டும் உண்மை

சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் உட்பட பல கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், எண் 4 அன் லக்கியாக கருதப்படுகிறது. தென் கொரியாவில் உள்ள சில லிஃப்ட்களில் எண் 4 இல்லை என்று கூறப்படுகிறது. என்ன காரணம் என்று இங்கே தெரிந்துக்கொள்வோம்.

Priyadharshini R

நம்மில் பலருக்கு லக்கி நம்பர் இருக்கும், அந்த எண்ணில் சில காரியங்களை செய்ய முற்படுவோம். சில எண்களை அன் லக்கியாக சிலர் எண்ணுவார்கள். அதில் எந்த விஷயத்தையும் தொடங்க மாட்டார்கள்.

அப்படி பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்கள் எண் 4ஐ துரதிர்ஷ்டவசமானது என்று நம்புகின்றன.

சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் உட்பட பல கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், எண் 4 அன் லக்கியாக கருதப்படுகிறது.

பெய்ஜிங்கில், 4 எண் கொண்ட வாகன உரிமத் தகட்டை கூட தவிர்க்கிறார்களாம்.

சிங்கப்பூரில், ஒரு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் Alfa Romeo மாடல் 144 என்ற பெயரை மாற்ற வேண்டியிருந்தது, ஏனெனில் குடிமக்கள் அதை வாங்க பயப்படுகிறார்கள். இவ்வளவு ஏன் Nokia ஃபோன் மாடல்கள் 4 என்ற எண்ணில் தொடங்காததற்கும் இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.

3, 6 மற்றும் 8 எண்கள் பொதுவாக அதிர்ஷ்டம் என்று கருதப்படுகிறது, அதே நேரத்தில் 4 துரதிர்ஷ்டவசமாக கருதப்படுகிறது. சீன கலாச்சாரத்தில், எண் 4 ஐ சுற்றியுள்ள மூடநம்பிக்கையின் பின்னணியில் அது மரண ஒலி என்று நம்பப்படுகிறது.

சீனா

சீனாவில், நான்காம் எண்ணுக்கான வார்த்தையின் உச்சரிப்பு, மரணத்திற்கான சீன வார்த்தையின் உச்சரிப்பைப் போன்றது. யு.எஸ். பில்டர்கள் சில சமயங்களில் 13வது மாடியைத் தவிர்ப்பது போல, சீனாவில் உள்ள பல கட்டிடங்கள் நான்காவது தளத்தைத் தவிர்க்கின்றன.

சில நாடுகளில் எண் 13 அன் லக்கியாக கருதினார்கள். காரணம் 1910 வாக்கில், 13 ஆம் எண் “பயம்” என்று பொருள்படும் டிரிஸ்கைடேகாபோபியா என்ற சொல்லில் ஒலித்தது. இது ஒரு உளவியலாளரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இதனை அன் லக்கியாக நினைத்தார்கள்.

தென் கொரியா

தென் கொரியாவில், டெட்ராபோபியா எனப்படும் நான்காம் எண்ணின் பயத்தின் பின்னணியில் அது ஒலிக்கிறது. "நான்கு" என்பதற்கான கொரிய வார்த்தை "இறப்பு" என்ற வார்த்தையைப் போலவே ஒலிக்கிறது. தென் கொரியாவில் உள்ள சில லிஃப்ட்களில் எண் 4 இல்லை என்று கூறப்படுகிறது.

ஜப்பானில் பாரம்பரியமாக, 4 துரதிர்ஷ்ட எண். ஏனெனில் இது சில நேரங்களில் ஷி என்று உச்சரிக்கப்படுகிறது, இது மரணத்திற்கான வார்த்தையாக நம்பப்படுகிறது.

ராசியில் எண் 4 அதிர்ஷ்டமா?

சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு இந்த எண் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

டாரட் கார்டுகளில் பேரரசருடன் தொடர்புடைய எண் 4 உலக அதிகாரம், அரசாட்சி, ஆட்சி, ஸ்திரத்தன்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவை நிலைத்தன்மையையும் ஒழுக்கத்தையும் குறிக்கின்றன.

வணிகம் பாதிக்கப்படுகிறது

இந்த நாடுகளில் வணிகம் செய்யப்படும் விதத்தை இது பாதிக்கிறது. கார்ப்பரேட் ஃபோன் எண்கள், தயாரிப்பு வரிசை எண்கள் மற்றும் அலுவலக முகவரிகள் ஆகியவை வணிகம் வெற்றிபெறும் என நம்பினால், எண் 4-ல் இருக்க கூடாது என்று நம்பப்படுகிறது.

ஆனால் இந்த எண்ணால் வீழ்ச்சி ஏற்படுகிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?