Google: நீங்கள் மனிதரா, ரோபோவா? கூகுள் உங்களிடம் இந்த கேள்வி கேட்க காரணம் என்ன? twitter
உலகம்

Google: நீங்கள் மனிதரா, ரோபோவா? கூகுள் உங்களிடம் இந்த கேள்வி கேட்க காரணம் என்ன?

பல முறை ஏன் இந்த கேள்வியை கூகுள் நம்மிடம் கேட்கிறது என்று நாம் எரிச்சலடைந்திருப்போம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் காரணத்தை பற்றி நாம் ஆராய்ந்திருக்க மாட்டோம்.

Keerthanaa R

நாம் கூகுள் மூலம் ஒரு தேடல் மேற்கொள்ளும் போதோ அல்லது ஏதாவது ஒரு செயலியை பயன்படுத்த முற்படும்போதோ, ”நீங்கள் ரோபோ இல்லை என்பதை உறுதிபடுத்துங்கள்” என்று ஒரு திரை தோன்றும். அதில் பல புகைப்படங்களை காண்பித்து ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொருளை கண்டுபிடிக்க சொல்லும்.

நாமும் அந்த பொருளை கண்டுபிடிப்போம். சில சமயங்களில் ஒரு சிறிய பெட்டகம் இருக்கும் அதனை க்ளிக் செய்தால் கூட போதும்.

நாம் ரோபோ இல்லை என்று உறுதி செய்த பின்னரே அந்த இணையதளத்திற்குள் நாம் அனுமதிக்கப்படுகிறோம்.

பல முறை ஏன் இந்த கேள்வியை கூகுள் நம்மிடம் கேட்கிறது என்று நாம் எரிச்சலடைந்திருப்போம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் காரணத்தை பற்றி நாம் ஆராய்ந்திருக்க மாட்டோம்.

கூகுள் நம்மை மனிதனா அல்லது ரோபோவா என்று ஏன் கேட்கிறது?

சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கூறுவதன்படி, அந்த திரையில் தோன்றும் Captcha மூலம் நம் மவுசின் கர்சர் இயக்கம் கண்காணிக்கப்படும். ரோபோக்கள் சரியாக, நேரடியாக இந்த பணியை செய்துவிடும்.

ஆனால் மனிதர்கள் மவுசை இயக்கினால், அதில் ஒரு சீரற்ற தன்மையை உணரமுடிகிறது. இதனை வைத்து நாம் மனிதரா அல்லது ரோபோவா என்பதை கூகுள் அறிந்துகொள்ளும்

நாம் இவ்வாறு க்ளிக் செய்கையில், நமது முந்தைய தேடல்களை இணையதளம் ஆராயும். அதனை வைத்து மனிதர் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும். .

Google Doodle

இணையதளங்கள் ஒரு குறிப்பிட்ட அல்காரிதம் மூலம் இயங்குகின்றன. அப்படி சில சமயங்களில் இந்த captchaவை பாதிக்கப்பட்ட கணினிகள் இயக்கலாம், சில சமயங்களில் இந்த தேடல்கள் ஸ்பாம் ஆக கூட இருக்கலாம். இதனால் பாதுகாப்பு குறித்த பிரச்னைகள் ஏற்படும் என்பதை உறுதி செய்து கொள்வதற்கான காரணமாக இது இருக்கிறது.

மேலும், நமது முந்தைய தற்போதைய தேடல்களை படிக்கும் கூகுள், பயனர்களுக்கு எளிதான, துல்லியமான தகவல்களை வழங்க தன்னை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ளவே இந்த முறையை கையாளுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?