Arabs  NewsSense
உலகம்

அரேபிய இளைஞர்கள் ஆண்மைக்குறைவு மருந்துகளை நாடுவது ஏன்? என்ன நடக்கிறது அங்கே?

Govind

பாலியல் பிரச்சினைகள் உலகம் முழுவதும் செல்வாக்கோடு இருக்கின்றன. குறிப்பாகப் பாலுறவில் ஆண்கள் தமது செயலை மேம்படுத்திக் கொள்வதில் கீழை நாடுகளைப் பொறுத்த வரை விழிப்புணர்வு குறைவாக உள்ளது. தமிழகத்தின் தெரு முனைகளில் இதற்கென ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டியில் நாட்டு வைத்தியர்கள் இளைஞர்களின் பயத்தை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.

அரபுலகைப் பொறுத்த வரை நிலைமை முற்றிலும் மாறவில்லை என்றாலும் கொஞ்சம் மாறி வருகிறது. திரு ஹபாஷி எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய இயற்கையான மூலிகை மருந்துகளை விற்பனை செய்வதில் பெயர் பெற்றவர். கடந்த சில ஆண்டுகளாக, அவர் தனது வாடிக்கையாளர்கள் விருப்பத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் கண்டார்.

"பெரும்பாலான ஆண்கள் இப்போது மேற்கத்திய நிறுவனங்களிடமிருந்து நீல மாத்திரைகளை (வயாக்ரா) வாங்கிச் செல்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

பல ஆய்வுகளின்படி, இளம் அரபு ஆண்கள் சில்டெனாபில் (வயாக்ரா என வணிகரீதியாக அறியப்படுகிறது), வர்தனாபில் (லெவிட்ரா, ஸ்டாக்சின்) மற்றும் தடாலாஃபில் (சியாலிஸ்) போன்ற மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

ஆதாரங்கள் இருந்தபோதிலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் பெரும்பாலான இளைஞர்கள் பிபிசியிடம் எகிப்து மற்றும் பஹ்ரைன் தெருக்களில் இப்படி மாத்திரைகளை வாங்குவது பற்றி மறுத்துப் பேசினர். விறைப்புப் பிரச்சினைகளுக்கு மருந்தைப் பயன்படுத்துவதை மறுத்தும் பேசினார்கள் அல்லது அவற்றைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றார்கள். சிலர் இந்த பிரச்சினையை முதலில் பேச மறுத்துவிட்டனர். ஏனெனில் இது "சமூகத்தின் ஒழுக்கத்திற்கு முரணானது" என்று அவர்கள் கருதினர். இப்படி இரகசியமாக மாத்திரைகளை வாங்கிக் கொண்டு அது குறித்து வெட்கப்படுவது கீழை நாடுகளுக்கே உரிய பின் தங்கிய சமூக நிலை.

இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்ட சவுதி செய்தித்தாள் அல்-ரியாத், அந்த நேரத்தில் சவூதியர்கள் பாலியல் மேம்பாட்டு மாத்திரைகளுக்காக ஆண்டுதோறும் 1.5 பில்லியன் டாலர் செலவிடுவதாக மதிப்பிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் நுகர்வு ரஷ்யாவை விட 10 மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் சவுதியின் மக்கள் தொகை ரஷ்யாவை விட 5 மடங்கு குறைவு.

உண்மையில், 2012 ஆய்வின்படி, அரபு உலகில் தனிநபர் ஆண்மைக் குறைவு எதிர்ப்பு மருந்துகளின் இரண்டாவது அதிக நுகர்வோர் உள்ள நாடு எகிப்து ஆகும். இதில் சவுதி அரேபியா முதலிடம் பிடித்துள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்ட சவுதி செய்தித்தாள் அல்-ரியாத், அந்த நேரத்தில் சவூதியர்கள் பாலியல் மேம்பாட்டு மாத்திரைகளுக்காக ஆண்டுதோறும் 1.5 பில்லியன் டாலர் செலவிடுவதாக மதிப்பிட்டுள்ளது.

மிகச் சமீபத்தில், அரபு ஜர்னல் ஆஃப் யூரோலஜி எனும் ஆய்விதழ் நடத்திய ஆய்வின் முடிவுகள், 40% இளம் சவுதி ஆண் பங்கேற்பாளர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் வயாகரா போன்ற மருந்தைப் பயன்படுத்தியதைப் பதிவு செய்திருக்கிறது.

எகிப்து இன்னும் உயர்ந்த இடத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டின் அரசு புள்ளிவிவரங்களின்படி, ஆண்மைக் குறைவு எதிர்ப்பு மருந்துகளின் விற்பனை ஆண்டுக்கு சுமார் 127 மில்லியன் டாலர் ஆகும். இது முழு எகிப்திய மருந்து சந்தையில் 2.8% பங்கைக் கொண்டிருக்கிறது.

ஆண்களுக்குள்ள பாலியல் அழுத்தங்கள்

தவிர்க்க முடியாமல், சிலர் பாலுறவு வாழ்வில் உடனடி செயல்களை விரும்புகிறார்கள்.

2014 ஆம் ஆண்டில், அல்-ஃபான்கௌஷ் என்ற ஆண்மைக் குறைவு எதிர்ப்பு மருந்து எகிப்திய மளிகைக் கடைகளில் சாக்லேட் பார் வடிவில் தோன்றியது. இதன்விலை 0.05 டாலராகும். சந்தைக்குக் கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்திலேயே, இந்த மருந்து சாக்லேட்டின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இம்மருந்து குழந்தைகளுக்கு விற்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்ததை அடுத்து, அதன் தயாரிப்பாளர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

ஆண்மைக் குறைவு எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடு இளைஞர்களை விட வயதானவர்களிடையே அதிகமாக இருப்பதாக அறியப்படுகிறது. இருப்பினும், ஏமனில், சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் பெரும்பாலும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களால் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

2015 இல் வடக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இயக்கத்திற்கும் சவூதி ஆதரவு அரசாங்கத்திற்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து வயக்ரா மற்றும் சியாலிஸ் போதைப் பொருளைப் பயன்படுத்துவது இளைஞர்களிடையே ஒரு போக்காக மாறியுள்ளது என்று உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க அறுவை சிகிச்சை அளிக்கும் துனிசியப் பேராசிரியரான மொஹமட் ஸ்ஃபாக்ஸி, பிபிசிக்கு அளித்த பேட்டியில், இதுபோன்ற மருந்துகள் "தூண்டுதல்கள் அல்ல" என்றும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் "முதியவர்களைப் பாதிக்கும்" நிலைமைகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிப்பதாகவும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் பாலியல் வல்லுநர் ஒருவர், நடைமுறையில் உள்ள கலாச்சாரம் காரணமாக இளம் அரபு ஆண்கள் ஆண்மைக்குறைவு எதிர்ப்பு மாத்திரைகளுக்குத் திரும்புவதாகக் கூறுகிறார்.

"அரபு இளைஞர்கள் எதிர் கொள்ளும் பாலியல் ரீதியான பெரிய பிரச்னைகளுக்குக் காரணம் இருக்கலாம்" என்று எகிப்திய-பிரிட்டிஷ் பத்திரிகையாளரும், செக்ஸ் அண்ட் தி சிட்டாடல்: இன்டிமேட் லைஃப் இன் ஏ சேஞ்சிங் அரப் வோர்ல்டு - Sex and the Citadel: Intimate Life in a Changing Arab World ஆசிரியருமான ஷெரீன் எல் ஃபெக்கி எனும் பெண்மணி விளக்குகிறார்.

மத்திய கிழக்கில் பாலின சமத்துவம் குறித்த 2017 ஆம் ஆண்டு ஐ.நா-ஆதரவு பெற்ற ஒரு முக்கிய ஆய்வின் முடிவுகளுக்குப் பதிலளித்து, ஷெரீன் எல் ஃபெக்கி விளக்குகிறார்: "பெரும்பாலாக அனைத்து ஆண் பங்கேற்பாளர்களும் எதிர்காலத்தைப் பற்றிப் பயப்படுவதோடு தங்கள் குடும்பங்களுக்கு எப்படி வழங்குவார்கள் என்பதைப் பற்றியும் பயப்படுகிறார்கள். "ஆண்கள் எப்படி ஆண்களாக இல்லை" என்று பெண்கள் விவரிக்கும் போது பல ஆண்கள் கடும் அழுத்தத்திற்கு ஆளாவதாகப் பேசினார்கள்.

"ஒரு ஆணாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பது அழுத்தத்தில் உள்ளது. மற்றும் பாலியல் ஆற்றல் ஆண்மையின் கலாச்சாரத்தில் பிணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பாலியல் செயல்திறனில் அதிக அழுத்தம் உள்ளது," என்று அவர் கூறுகிறார்.

திருமதி எல் ஃபெக்கி, ஆபாசத்தால் உருவாக்கப்பட்ட தவறான எண்ணங்கள் மற்றும் அதிகரித்த எதிர்பார்ப்புகள் செயல்திறன் மீதான அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார் "இது ஆண்மை என்று அழுத்த உணர்வு உருவாகும்போது இந்நிலை 'சாதாரணமானது' என்று இளைஞர்களின் எண்ணங்களை மாற்றுகிறது".

Hijab

அரபு சமூக வரலாற்றில் பாலியல் குறித்த கண்ணோட்டங்கள்

அரேபியச் சமூகங்களில் பாலியல் தேவைகளுக்காக மருந்துகளைப் பயன்படுத்துவது ஒரு நவீன நிகழ்வாகக் கருதப்பட்டாலும், பாலுணர்வை எழுப்பும் உணவு மற்றும் மருந்துகளை உட்கொள்வது அரபு வரலாறு முழுவதும் பிரபலமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

14 ஆம் நூற்றாண்டின் முக்கியமான இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளருமான இப்னு கய்யிம் அல்-ஜவ்ஸியா, பாலியல் ஆசையை மேம்படுத்தும் நோக்கத்துடன் கூடிய மூலிகை சமையல் குறிப்புகளின் தொகுப்பை மறுமைக்கான விதிகள் என்ற புத்தகத் தொடரில் சேர்த்துள்ளார்.

ஷெரீன் எல் ஃபெக்கி, அரேபியப் பாரம்பரியம் மற்றும் இஸ்லாமியப் பாரம்பரியத்தில், "பெண்கள் ஆண்களை விட அதிக ஆற்றல் மிக்கவர்களாகவும், அதிக பாலியல் உந்துதல் கொண்டவர்களாகவும் வரலாற்று ரீதியாகப் பார்க்கப்படுகிறார்கள்", அதே சமயம் ஆண்கள் "தங்கள் பாலியல் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று நினைக்கிறார்கள். ஆனால் ஹிஜாப் மற்றும் புர்காவைப் பொறுத்த வரை இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு நேரெதிரான விளக்கத்தை அளிக்கிறார்கள். மறைக்கப்படாத உடை அணிந்த பெண்களைப் பார்க்கும் ஆண்களுக்குக் காம உணர்வு பீறிட்டு எழும். அதனால் புர்கா அணிய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆண்களை விடப் பெண்கள் அதிக பாலியல் உந்துதல் கொண்டவர்கள் என்ற இந்த கருத்து ஓட்டோமான் பேரரசு காலத்தில் பிரதிபலித்திருக்கிறது. 1512 முதல் 1520 வரை ஆட்சி செய்த சுல்தான் செலிம் I இன் வேண்டுகோளின் பேரில் எழுத்தாளர் அஹ்மத் பின் சுலைமான் இதே கருத்தை எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் பாலியல் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் மூலிகை சமையல் குறிப்புகளின் கலைக்களஞ்சியமாக இருந்தது. மேலும் பாலியல் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் ஆண் மற்றும் பெண் பாலியல் ஆசைகளைத் தூண்டுவது எப்படி என்பதையும் விவரிக்கிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் பல அரேபிய இளைஞர்கள் இன்னும் பாலியல் பிரச்சினைகளுக்கான பரிகாரங்களுக்குத் திரும்புகின்றனர். மேலும் அவர்களுக்கான பாலுறவு மருத்துவ சந்தை அதி வேகமாக வளர்ந்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?