வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னுக்கு பிறகு அவர் மகள் பொறுப்பேற்கிறாரா? Twitter
உலகம்

வட கொரியா அதிபர் கிம் ஜங் உன் : அந்நாட்டின் வருங்கால தலைவர் இவரா? - விரிவான தகவல்கள்

NewsSense Editorial Team

உலக அளவில் பல நாடுகளும் ஜனநாயகத்தின் அடிப்படையில் அரசாங்கங்கள் இயங்கி வருகின்றன. இருப்பினும் வட கொரியா போன்ற ஒரு சில நாடுகள் மிகக் கடுமையான ஒற்றை ஆட்சி முறை, சொல்லப்போனால் கிட்டத்தட்ட முடியாட்சிக்கு சமமான ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

அந்நாட்டை தற்போது கிம் ஜாங் உன் தலைவராக இருந்து வழி நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே அவருடைய உடல்நலம் சரியில்லை என்றும், அவர் விரைவில் உயிரிழக்க வாய்ப்பிருப்பதாகவும் பல்வேறு செய்திகளும் வதந்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவருக்கு கிட்டத்தட்ட 40 வயது தான் ஆகிறது. அத்தனை விரைவாக அவர் உயிரிழப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றும் மற்றொரு தரப்பினர் தங்கள் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இதெல்லாம் ஒருபுறமிருக்க, கிம் ஜாங் உன் தன் மகளை பொதுவெளியில் அழைத்து வரத் தொடங்கியுள்ளார் என்கிறது பிபிசி வலைதளம்.

பர்சனல் பக்கங்கள்:

கிம் ஜான் உன், ரி சொல் ஜு (Ri Sol-ju) என்கிற பெண்ணைக் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது ரி சொல் ஜுவை மதிப்பிற்குரிய முதல் பெண்மணி என்றே அனைவரும் வடகொரியாவில் அழைக்க வேண்டும். இந்த தம்பதிகளுக்கு சில பிள்ளைகள் இருந்தாலும், சுமார் 10 வயது மதிக்கத்தக்க கிம் ஜு அய் (Kim Ju-ae) என்கிற இளம்பெண் கடந்த சில மாதங்களாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கெடுக்கத் தொடங்கியுள்ளார்.

கிம் ஜு அய் (Kim Ju-ae), கிம் ஜான் உன்னின் இரண்டாவது மகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த 3 மாத காலத்துக்குள் இவர் 5 முறை பொதுவெளியில் தோன்றியுள்ளார், பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

பொதுவாக வடகொரியாவில் மதிப்பிற்குரிய என்கிற சொல்லை, அட்சி செய்து வரும் அதி உயர் தலைவர் போன்ற மிக மிகச் சிலருக்கு மட்டுமே பயன்படுத்துவர். முதலில் கிம் ஜு அய் (Kim Ju-ae) அறிமுகப்படுத்தப்பட்ட போது கிம் ஜான் உன்னின் அன்பிர்குரிய மகள் என்று அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் இந்த வார செவ்வாய்கிழமை ஒரு ராணுவ விருந்தில் கலந்து கொண்ட போது, கிம் ஜு அய் (Kim Ju-ae) மதிப்பிற்குரிய தலைவரின் மகள் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

Kim, daughter

முதல் பொதுநிகழ்ச்சி:

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடிய அணுவெடிகுண்டு தாங்கிய ஐ சி பி எம் ஏவுகனை ஏவப்பட்ட போது, முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார் கிம் ஜு அய் (Kim Ju-ae). அப்போதே, இந்த இளம்பெண் ஒருநாள் வடகொரியாவை ஆட்சி செய்வாரோ என்கிற எண்ணம் பலருக்குத் தோன்றியது.

காரணம், கிம் ஜாங் உன் சுமார் 8 வயதாக இருக்கும் போதே, அவர் தந்தை கிம் ஜாங் இல், அவரை அடுத்த வாரிசாக, சில முக்கிய ராணுவத் தலைவர்கள் மத்தியில் அறிவித்ததாகக் கூறப்படுவதாக, பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பொதுவெளியில், பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் , கிம் ஜாங் இல் உயிரிழப்பதற்கு ஓராண்டு காலத்துக்கு முன்பு தான் அதிகாரபூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டது.

Kim Family

முதல் பெண் ஆட்சியாளர் ஆவாரா?

அப்படி, தன் மகளுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கத் தான் கிம் ஜாங் உன் இப்படிச் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுவரை வட கொரியாவை ஒரு பெண் ஆட்சி செய்ததில்லை, ஆனால் அதிகாரம் வாய்ந்த முக்கிய பதவிகளில் இருந்திருக்கிறார்கள். உதாரணம் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்.

வடகொரியா ஒரு ஆணாதிக்க சமூகம் என்பது ஒருபக்கம் என்றால், அது கிம் ஜான் உன்னால் அதிகாரம் செலுத்தப்படும் சமூகம் என்பது மறுபக்கம். எனவே எல்லாவற்றையும் தாண்டி, கிம் ஜு அய் (Kim Ju-ae) வடகொரியாவின் தலைவர் கிம்மின் மகள் என்கிற ஒரே காரணத்தால், அவர் வடகொரியாவின் அதி உயர் தலைவராவதற்கான தகுதியைப் பெற்றவராக்கிவிடும். கிம் ஜாங் உன்னின் குடும்பத்தைச் சேராத ஒருவர் வடகொரியாவின் தலைவர் ஆனால்தான், அது ஆச்சர்யமான விஷயம் என வட கொரியா குறித்து தொடர்ந்து கண்காணித்து செய்தி வெளியிடும் என் கே நியூஸ் நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் ஜேம்ஸ் ஃப்ரெட்வெல் பிபிசி வலைதளத்திடம் கூறியுள்ளார்.

ஒரு பெண் வடகொரியாவை ஆட்சி செய்ய வேண்டும் என்றால், அவர் மக்களாலும், ராணுவத்தாலும், வடகொரிய உயர் சமூகத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு நிறைய வேலை செய்ய வேண்டும். அதன் பகுதியாகக் கூட இந்த பணிகள் இருக்கலாம் என்றும் சர்வதேச சமூகங்களால் கருதப்படுகிறது.

வட கொரியாவின் அடுத்த தலைவராக கிம் ஜு அய் (Kim Ju-ae) தான் வருவார் என அவருடைய இடம் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அவர் பொதுவெளியில், பொதுநிகழ்ச்சிகளில் தோன்றத் தோன்ற அதற்கான சாத்தியகூறுகள் அதிகரிக்கின்றன என்பதையும் மறுப்பதற்கு இல்லை. எப்படியோ, வடகொரிய மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான். நடக்கும் என நம்புவோமாக.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?