Elsie Allcock Twitter
உலகம்

இரண்டாம் உலகப் போரின் போது கட்டப்பட்ட கழிவறை - 104 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசிக்கும் பெண்

Priyadharshini R

இங்கிலாந்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் 104 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 1918 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதியன்று எல்சி ஆல்காக் (Elsie Allcock)பிறந்துள்ளார்.

எல்சி ஆல்காக்கின் தந்தை 1902 ஆம் ஆண்டிலேயே அந்த வீட்டைப் பெரிய தொகைக்கு வாடகைக்கு எடுத்துள்ளார். எல்சி ஆல்காக் குடும்பம் இரண்டு உலகப் போர்களின் போதும் அங்கு வாழ்ந்து வந்துள்ளது. அவர்கள் அங்கு தங்கி இருந்த போது ராஜாக்கள், ராணிகள் நாட்டின் பிரதமர்கள் வந்து தங்கியுள்ளனர்.

house (Rep)

பின்னர் எல்சி 14 வயது இருக்கும் போது தாய் உடல் நல குறைவு காரணமாக இறந்துள்ளார். இப்படியாகக் காலங்கள் கடந்துசென்ற நிலையில் 1941 ஆண்டு எல்சி, பில் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட பிறகு இதே வீட்டில் இருந்து தனது அப்பாவைக் கவனித்து வந்துள்ளார்.

பின்னர் எல்சியின் தந்தையும் 1949 இல் இறந்துவிட்டார். ஆனாலும் எல்சி அந்த வீட்டை வாங்கியே ஆக வேண்டும் என்று கடன் வாங்கி 1960-யில் சொந்தமாக்கிக் கொண்டார்.

house (Rep)

இது குறித்து எல்சி ஆல்காக் கூறுகையில்,

"நான் வேறு எங்கும் வாழ விரும்பியதில்லை”, எனது வீடு தான் எனக்கு எல்லாம் என்று அந்த வீட்டின் முக்கியத்துவம் குறித்து எல்சி கூறினார்.

மேலும் இரண்டாம் போரின் போது அந்த வீட்டிற்கு வெளியே கட்டப்பட்ட கழிவறை, இன்றும் பயன்பாட்டில் உள்ளதாக அவர் கூறுகிறார். எல்சியின் 75 வயதான மகன் ரே, "நினைவுகள் நிறைந்த" வீட்டைத் தனது தாய் "நேசிப்பதாக" கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?