Woman marry a Maasai tribesman  Twitter
உலகம்

60 வயதில் மலர்ந்த காதல் : ஆப்ரிக்க பழங்குடி நபரை திருமணம் செய்த அமெரிக்க பெண் - அடடே கதை!

நான் அவருடைய பாட்டியா என்று எல்லாம் மக்கள் கேட்கிறார்கள், சில சமயங்களில் அவர்கள் கூறுவது வருத்தமளிக்கும், எங்கள் மகிழ்ச்சியின் மீதும் கவனம் செலுத்த விரும்புகிறோம் என்று அவர் கூறினார். வித்தியாசமான கலாச்சாரங்களைச் சேர்ந்த இருவரின் காதல் கதை இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

Priyadharshini R

தன்னை விட 30 வயது இளைய மசாய் பழங்குடியினரை திருமணம் செய்வதற்காக தனது வீட்டை விட்டு 14,400 கிமீ தூரம் வந்துள்ளார் டெபோரா என்ற பெண்.

60 வயதாகும் டெபோரா, அக்டோபர் 2017 இல் தன் மகளுடன் தான்சானியாவில் பயணம் செய்யும்போது சைட்டோட்டி பாபு என்பவரை சந்தித்துள்ளார்.

தாயும் மகளும் சான்சிபார் கடற்கரையில் நடந்து சென்றபோது சைட்டோட்டியை பார்த்துள்ளனர். சைட்டோட்டி மற்றும் அவரது சக பழங்குடியினர்கள் டெபோராவுக்கு சில நினைவு பரிசுகளை வழங்க முயன்றுள்ளனர்.

ஆனால் அதனை வாங்க மறுத்துள்ளார் டெபோரா. மீண்டும் அவர்கள் வந்து புகைப்படம் எடுக்க முடியுமா என்று கேட்டுள்ளனர். இதனால் டெபோராவுக்கு சைட்டோட்டி உடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

அவ்வாறே இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதியில் காதலாக மாறியது. டெபோரா சொந்த ஊரான அமெரிக்கா திரும்பியபோது சைட்டோடியிடமிருந்து திருமணம் பற்றிய கேள்வி எழுந்தது.

ஆனால் அங்கு இருந்து அமெரிக்கா சென்று விட்டார் டெபோரா. பின்னர் தனது குழந்தைகளின் சம்மத்துடன் மீண்டும் தான்சானியா சென்றார் டெபோரா.

சைட்டோடி மீண்டும் தன் காதலை வெளிப்படுத்த, இந்த ஜோடி ஜூன் 2018 இல் பாரம்பரிய மாசாய் பாணியில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களது திருமணம் இந்த ஆண்டுதான் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

இது குறித்து டெபோரா கூறுகையில்

"என்னை விட மிகவும் இளைய வயதுடைய ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை, என் கணவர் மிகவும் கனிவானவர், அக்கறையுள்ள மனிதர்" என்று டெபோரா கூறினார்.

"நான் அவருடைய பாட்டியா என்று எல்லாம் மக்கள் கேட்கிறார்கள், சில சமயங்களில் அவர்கள் கூறுவது வருத்தமளிக்கும், ஆனால், எங்கள் மகிழ்ச்சியின் மீதும் கவனம் செலுத்த விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.

வித்தியாசமான கலாச்சாரங்களைச் சேர்ந்த இருவரின் காதல் கதை இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?