நீச்சல் குளத்திற்குள் தலை கீழாக ஒரு பெண் நடக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்டினா மாகுஷென்கோ என்ற பெண், ஸ்விம்மிங் பூலில் தலை கீழாக நடந்து செல்கிறார். கிறிஸ்டினா நீச்சல் போட்டிகளில் இதுவரை நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
ஹை ஹீல்ஸ் மாட்டிக்கொண்டு, கிறிஸ்டினா நீச்சல் குளத்தில் தலை கீழாக நடக்கிறார். நடந்து சென்றுகொண்டிருக்கும்போதே 360 டிகிரி திரும்பி நீச்சல் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஹேண்ட் பேக்கை எடுக்கிறார் கிறிஸ்டினா.
அதை தன் தோளில் மாட்டிக்கொண்டு மீண்டும் மாடல் போல தண்ணீருக்குள் நடக்கிறார் அவர். கிறிஸ்டினா இந்த வீடியோவில் பயன்படுத்திய பேக், பிரபல Prada நிறுவனத்தை சேர்ந்தது.
இந்த வீடியோவை கிறிஸ்டினா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகிர்ந்திருந்தார். அதன் தலைப்பில், "The Devil Wears Prada...You can also ROTATE your phone for better angle " என குறிப்பிட்டிருந்தார்.
பதிவிடப்பட்டதிலிருந்து இந்த வீடியோவிற்கு 54 மில்லியன் வியூக்கள் மற்றும் 1.7 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன. மேலும் கிறிஸ்டினாவின் இந்த திறனுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
சிறு வயதிலிருந்தே swimming பயிற்சியில் ஈடுபட்டு வரும் கிறிஸ்டினா நான்கு முறை உலக சாம்பியன் பட்டமும், இரு முறை ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust