17 வருடங்களாக ஆண்களை போல முகத்தில் தாடியுடன் வாழும் இளம் பெண் ட்விட்டர்
உலகம்

17 வருடங்களாக முகத்தில் தாடியுடன் வாழும் இளம் பெண் - என்ன சொல்கிறார்?

சிறுமியான டகோடாவின் மனதில் இந்த விஷயம் ஆழமாக பதிந்தது. இதுவே அவரை மனவுளைச்சலுக்கும் ஆளாக்கியுள்ளது. பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு சென்றபோதும், டகோடாவின் இந்த பிரச்னைக்கு யாராலும் காரணத்தை கண்டறிய முடியவில்லை.

Keerthanaa R

ஆண்களை போல முகத்தில் தாடியுடன் வாழ்கிறார் டகோடா கோக் என்ற 30 வயது பெண்.

மரபணு மாற்றத்தால் உடலில் ஏற்படும் விளைவுகள் பல சமயம் நாம் எதிர்பாராத விதமாக இருக்கும். அப்படி தன் பதின் பருவத்தில் டகோடா என்ற பெண்ணிற்கு முகத்தில் தாடி வளரத் தொடங்கியுள்ளது.

தனது 13 வயது முதல், முகத்தில் அசாதாரணமாக முடி வளருவதை கவனித்துள்ளார் டகோடா. இதனால் மனதளவில் மிகவும் சோர்வடைந்த அந்த பெண், கிட்ட தட்ட பத்து வருடங்களாக மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டார்.

முதலில் ஓரிரு இடங்களில் மட்டுமே வளர்ந்த முடி, நாளடைவில், நீளமாகவும், அதிக அடர்த்தியுடனும் வளரத்தொடங்கியது. இதனால், தன் முகத்தில் இப்படி வளரும் முடியை அகற்ற, பார்லர்களுக்கு சென்று, Waxing செய்துகொண்டார். ஒரு நாளைக்கு இருமுறை சவரம் செய்து கொண்டார் டகோடா.

”நான் வளர்ந்த காலத்தில், பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது. நான் சலூன்களுக்கு சவரம் செய்ய சென்றால், பெண்கள் அங்கு வரக்கூடாது என்றும், பெண்கள் முகத்தில் முடி வளர்த்துக்கொள்ள கூடாது என்றும் என்னிடம் அறிவுரை கூறுவார்கள்” என்கிறார் டகோடா

சிறுமியான டகோடாவின் மனதில் இந்த விஷயம் ஆழமாக பதிந்தது. இதுவே அவரை மனவுளைச்சலுக்கும் ஆளாக்கியுள்ளது. பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு சென்றபோதும், டகோடாவின் இந்த பிரச்னைக்கு யாராலும் காரணத்தை கண்டறிய முடியவில்லை. அவரது உடலில் அட்ரீனல் சுரப்பிகள் அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்வதால், இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டகோடா ஒரு நாளைக்கு இரு முறை ஷேவ் செய்துகொள்ள தொடங்கினார். இதனால், முகத்தில் ஏற்படும் காயங்களை மேக் அப் போட்டுக்கொண்டு மறைத்து கொள்வார். பின்னர் 2015ல் ஒரு முறை அவரது நண்பர்கள் டகோடாவை சர்கஸில் நிகழ்ச்சியில் பங்குபெற கூறியுள்ளனர்.

அப்போது, தாடியுடன் இருக்கும் பெண்ணாக நிகழ்ச்சியில் தோன்றினார் டகோடா. அப்போது முதல், ஷேவ் செய்து கொள்வதையும், வேக்சிங் செய்து கொள்வதையும் படிப்படியாக கைவிடார் அந்த பெண். ஒரு கட்டத்தில் தனது இந்த நிலையை மனதார ஏற்றுக்கொள்ளவும் தொடங்கிய அவருக்கு அவரது ”குடும்பத்தினரும், நண்பர்களும் ஆறுதலாக நின்றனர்.” என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?