Queen Elizabeth II  Twitter
உலகம்

Woman : 2022ல் அதிகம் தேடப்பட்ட வார்த்தை இதுதான் - காரணம் என்ன?

Keerthanaa R

2022ஆம் ஆண்டில் Woman என்ற வார்த்தை அதிகம் தேடப்பட்டுள்ளதாக டிக்‌ஷனரி டாட் காம் தளம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து Woman என்ற வார்த்தையை 2022ன் Word of the Year என அந்த தளம் அறிவித்திருக்கிறது.

2022ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள், தேடப்பட்ட பிரபலங்கள், இந்த ஆண்டின் நகைச்சுவையான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைக் குறித்த ரீகேப்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் வுமன் என்ற வார்த்தை இந்த ஆண்டு அதிகமாக தேடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது டிக்‌ஷனரி டாட் காம் தளம்.

”பாலினம், அடையாளம் மற்றும் மொழியின் ஆதிக்கம் எந்த அளவுக்கு தற்காலத்தின் கலாச்சாரத்தோடு ஒன்றியுள்ளது என்பதன் அடிப்படையில் தான் வுமன் என்ற வார்த்தையை 2022ன் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக நாங்கள் தேர்ந்தெடுத்தோம்” என டிக்‌ஷனரி டாட் காம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த ஆண்டில் உலகளவில் அரங்கேறிய முக்கிய நிகழ்வுகளில் பெண்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு அதிகமாக இருந்திருக்கிறது என்பதே இதற்கு காரணம் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம், கருக்கலைப்புக்கு தடை, அமெரிக்காவின் முதல் கருப்பின பெண் நீதிபதி கேதான்ஜி பிரவுன் ஜாக்ஸன், ஹிஜாபுக்கு எதிராக ஈரனில் நடந்த போராட்டங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் மட்டும் Woman என்ற வார்த்தையின் தேடல் 1400% அதிகரித்துள்ளது எனவும் டிக்‌ஷனரி.காம் தெரிவிக்கிறது. முக்கியமாக கடந்த மார்ச் மாதம் கேதான்ஜி பிரவுன் ஜாக்ஸன் நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு இந்த அதிகரிப்பு இரட்டிப்பாக இருந்ததாகவும் அந்த தளம் கூறுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?