WFH Twitter
உலகம்

Work from Home வரலாறு இதுதான் - அட்டகாச தகவல்

Govind

எல்லாம் டிஜிட்டல் மயமாகி வரும் காலத்தில் நீங்கள் வேலை பார்க்கும் இடமும் பாரம்பரிய முறையிலிருந்து மாறி வருகிறது. வீட்டிலிருந்தே இன்னொரு நாட்டிலோ, கண்டத்திலோ நீங்கள் வேலை பார்க்கலாம். கோவிட் பொது முடக்கத்தின் போது இது தவிர்க்க முடியாத படி வந்தாலும் அதற்கு முன்னரே இந்த தொலை நிலை வேலை முறை (Remote Work) என்பது வளர்ந்து வருகிறது.


வீட்டிலிருந்து வேலை பார்ப்பது மனிதக்குலத்திற்குப் புதிதல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தொழிற்துறை புரட்சிக்கு முன்பு வரை மக்கள் தங்கள் வீடுகளில்தான் வர்த்தகம் செய்தனர். போர் செய்வது, போரில் காயமடைந்தோருக்குச் சிகிச்சை அளிப்பது போன்றவற்றிற்கு மட்டுமே மக்கள் ஒன்று கூடி வேலை செய்தார்களே அன்றி மற்ற வேலைகளுக்கு அல்ல.


தொழிற்துறை புரட்சி வந்த பின்னரே மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து தொழிற்சாலைக்கோ, அலுவலகத்திற்கோ பயணம் செய்து ஒன்று கூடி வேலை செய்தார்கள். இப்படித்தான் அலுவலக வேலை என்பது உருவானது.


1980களின் முற்பகுதியில் இணையம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டிஜிட்டல் யுகம் பிறந்தது. இப்படி இணையம் உலகை இணைத்த பிறகு புதிய உலகமே பிறந்தது என்று சொல்லலாம். அதில் வழமையாக அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்க்கும் முறைக்கு மாற்றான முறைகள் உருவாக ஆரம்பித்தன.


தொலை நிலை வேலையின் வரலாறு

ஸ்கைப் மற்றும் சூம் மூலம் இப்போது ஒரு மருத்துவர் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டு மருத்துவரோடு இணைந்து அறுவை சிகிச்சை செய்யலாம். இந்த முன்னேற்றங்களுக்கு முன்பே ஜாக் நில்லெஸ் என்ற நாசா பொறியாளர் நவீன தொலைநிலைப் பணிக்கு அடித்தளம் அமைத்தார்.

அவர் 1973 இல் "டெலிகம்யூட்டிங்" என்ற வார்த்தையை உருவாக்கினார். மில்லினியத்தின் தொடக்கத்தில் நவீன ரிமோட் வேலை நடைமுறைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஐபிஎம்மில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தொலைத்தொடர்புகளின் செயல்திறனைச் சோதிக்க வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தனர்.

ஜாக் நில்லெஸ்

ஐந்து தொலைதூர பணியாளர்கள் கொண்ட குழுவாக இருந்த ஐபிஎம் ஊழியர்கள் 1983 இல் 2,000 ம் ஆக உயர்ந்தார்கள். மேலும் கால் சென்டர் ஊழியர்கள்-எப்படியும் தொலைப்பேசி மூலம் தங்கள் எல்லா வேலைகளையும் செய்தவர்கள்-வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பை பெற்றார்கள்.

முதன்முதலில் ஒரு சோதனை முயற்சியாகவும், ஒரு ஃபேஷனாகவும் நடந்த தொலைநிலை வேலை முறை தற்போது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார்ட்னர் நிறுவனத்தின் சர்வேயின் படி, 74% பெரும் நிறுவனங்கள், கோவிட்-க்குப் பிந்தைய திட்டங்களின் ஒரு பகுதியாக தங்கள் ஊழியர்களைத் தொலைதூர இடங்களுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளன. கடந்த பத்தாண்டில் மட்டும் டெலிகம்யூட்டிங் 115% வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் தொற்றுநோய் பொது முடக்கத்திற்குப் பிந்தைய உலகில் இந்த தொலை நிலை வேலை உயரும். இதுதான் எதிர்காலம்.

தொழிற்சாலைகள், அலுவலகத்திலிருந்து Wi-Fi and Zoom க்கு நடந்த மாற்றம்

1999 இல் முதல் வலைத்தளத்தின் வளர்ச்சி மற்றும் கேரேஜ் ஸ்டார்ட்அப்களின் தோற்றத்துடன், வணிகத்தின் புதிய யுகம் பிறந்தது. ஸ்டார்ட் அப் கேரேஜ் என்பது ஒரு கூட்டுப் பணியிடமாகும். இது உலகெங்கிலும் உள்ள புதிய நிறுவனங்களுக்கு ஏற்ற சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக உயர் கல்வி முடித்துவிட்டு வந்த மாணவர்களுக்கு நிஜ உலக தொழில் முனைவு அனுபவத்தை வழங்குகிறது.

இந்த புதிய தொழில் முனைவர்கள் முதலீட்டாளர்கள் தங்களுக்கு நிதியளிக்கத் தயாராவதற்கு முன்பு வரை தங்களது தொழிலை ஏதோ சில அறைகள், கொட்டகைகள் போன்றவற்றில் நெகிழ்வுத் தன்மையோடு செய்தனர். தங்கள் ஊழியர்களையும் அப்படி எங்கிருந்து வேண்டுமானாலும் இருந்து கொண்டு வேலை செய்ய வைத்தனர்.

Zoom Meeting

தொலைதூர வேலை அல்லது வீட்டிலிருந்தபடி வேலை என்பது குறைவான பயணத்தைக் குறிக்கிறது. இது சாலையில் குறைவான வாகனங்கள், காற்றில் குறைவான மாசுபாடு மற்றும் பசுமை இயக்கத்தின் ஆதரவையும் கொண்டிருக்கிறது. இப்போது தொலை நிலை வேலை குறித்துப் பல நாடுகள் சட்டங்கள் ஏற்படுத்தி முறைப்படுத்தி வருகின்றன.

வேலைகளின் எதிர்காலம் தொலை தூர பணியாளர்களை அதிகப்படுத்தும்

கணினிகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், கையடக்க கணினிகளை (லேப்டாப்கள்) பயன்படுத்தும் திறனை மக்களுக்கு அளித்தன. பிறகு லேப்டாப்கள் டேப்லெட்டுகளாகவும் இறுதியில் ஸ்மார்ட்போனாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. ஊட்டிக்குச் சுற்றுலா செல்லும் ஒரு மேலாளர் தன்னுடைய செல்பேசியிலேயே மெயில் பார்க்கலாம், சாட் செய்யலாம், அழைத்து வழிகாட்டலாம், வீடியோ கான்பரன்ஸ் கூட்டங்களை நடத்தலாம். இதற்கெல்லாம் முன்பு ஒரு பெரும் அலுவலகம், பொருட்கள், மின்சாரம் என அனைத்தும் தேவைப்பட்டன. ஒரு காலத்தில் முழு அறைகளையும் எடுத்துக்கொண்ட இயந்திரங்கள் இப்போது உங்கள் பேக், பர்ஸ் அல்லது பாக்கெட்டில் பொருந்தக் கூடியவையாக மாறிவிட்டன.

வைஃபை வந்த பிறகு நீங்கள் உங்கள் கையடக்க டிஜிட்டல் எந்திரங்களை உலகில் எங்கு வேண்டுமானாலும் இணைக்க முடியும்.

பின்னர் கிளவுட்-அடிப்படையிலான கம்ப்யூட்டிங் மூலம் ஆவணங்கள், கோப்புகள் மற்றும் மென்பொருளை அணுகவும் பகிரவும் உங்களுக்கு வசதி ஏற்பட்டிருக்கிறது. இரகசியமான கோப்புகளைக் கூட நீங்கள் எங்காவது ஒரு இடத்திலிருந்து கொண்டு இந்த கிளவுட் கம்யூட்டர் நெட்வொர்க்கில் பாதுகாப்பாகச் சேமிக்க முடியும்.

ஸ்லாக் மற்றும் சோகோகோ போன்ற குழு ஒத்துழைப்புக் கருவிகள், ஆசனா போன்ற திட்ட மேலாண்மைக் கருவிகளுடன் மேலாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களுக்கு எளிதான அமைப்புகளை வழங்கியுள்ளன, அவர்கள் எங்கிருந்தாலும் தங்கள் குழுக்களைத் திறமையாக இயக்க அனுமதிக்கின்றன. மேலும் வீடியோ கான்பரன்சிங் முறையின் வருகையுடன், மக்கள் எங்கிருந்தும் வேலை செய்யத் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களும் நடைமுறையில் உள்ளன.

ஒரு சூப்பர் மார்கெட் நடத்தும் அண்ணாச்சி வீட்டிலிருந்த படியே செல்பேசியில் கடையின் சிசிடிவி காட்சிகள் மூலம் ஊழியர்கள், வாடிக்கையாளர்களைக் கண்காணிக்கலாம். ரசீது, விற்பனை பட்டியலையும் செல்போனில் பார்க்க முடியும். ஒரு செய்தியாளர் வீட்டிலிருந்த படியே கட்டுரை எழுதி தனது ஊடக நிறுவனத்திற்கு அனுப்ப முடியும்.

தொலைநிலை முதன்மை ( Remote-First) மற்றும் தொலைநிலை நட்பு (Remote-Friendly) வணிகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

மென்பொருளில் ஜாம்பவான் நிறுவனமான GetApp, 2010 முதல், தொலைதூர பணியாளர்களின் எண்ணிக்கை 400% அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் 78% பேர் குறைந்த பட்சம் சில மணி நேரங்களிலாவது தொலைதூரத்தில் வேலை செய்வதைக் குறிக்கிறது. ஜாப்பியர் மற்றும் கிட்லாப் போன்ற நிறுவனங்கள் இப்போது தொலைநிலை முதன்மை வணிகங்களாக உள்ளன. அதே நேரத்தில் கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பிற நிறுவனங்கள் தொலைநிலை நட்பு நிறுவனங்களாக இருக்கின்றன.

தொலைநிலை முதன்மை நிறுவனத்திற்கும் தொலைநிலை நட்பு நிறுவனத்திற்கும் வித்தியாசம் உள்ளது.

தொலைதூர முதன்மை நிறுவனத்தில் இருப்பவர்கள், ஊழியர்களின் ஆரோக்கியத்தை அதன் மையத்தில் வைத்திருக்கும் நிறுவன கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறார்கள். வேண்டுமென்றே முடிந்தவரை நெகிழ்வாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். குழுக்கள் எங்கிருந்தும் எல்லா இடங்களிலும் இருந்து வேலை செய்ய முடியும் என்பதை நிறைவேற்றுகிறார்கள். மற்றும் வாடிக்கையாளர்கள், மேலாளர்கள் மற்றும் சக ஊழியர்களுக்குத் தேவையான உயர் தர சேவைகளை வழங்க முடியும். ஒரு புராஜக்டின் முன்னோட்டத்திலிருந்து அதன் வெற்றி வரை இந்த தொலைதூர முதன்மை முறையில் நடக்கிறது.

wfh

மறுபுறம், தொலைதூர-நட்பு நிறுவனங்கள், நிலையான இடங்களில் அலுவலகங்கள் மற்றும் குழுக்களுடன் பயணிக்கும் மிகவும் பாரம்பரியமான வணிகங்களாகும். அதே நேரம் இவர்கள் தமது சில ஊழியர்களை முழுநேரமாகவோ அல்லது பகுதி நேர அடிப்படையிலோ, தொலைதூரத்தில் பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்கிறார்கள். இந்த வகையான நிறுவனங்கள் தமது அலுவலகங்கள் மற்றும் தொலைநிலை இரண்டிலும் தமது ஊழியர்களை வைத்து வேலை வாங்குகிறது.

பல நிறுவனங்கள் ரிமோட்-நட்பு கொள்கைகளுடன் தொடங்கி, குழுக்கள் நிரந்தர அடிப்படையில் தொலைதூரத்தில் வேலை செய்ய அனுமதிக்கும் முதன்மை கட்டமைப்புகளுக்கு (அல்லது இப்போது மாறுகின்றன) மாறிவிட்டன.

தொலைதூர வேலைதான் உலகின் எதிர்காலம் - ஏன்?

தொலைதூர வேலைகள் தவிர்க்க முடியாதபடி தேவையாக இருக்கிறது என்பதற்கு அதன் நீண்ட வரலாறு சான்றாகும். இது கோவிட் பொது முடக்கத்தால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான தொழில் துறைகள் எதிர்காலத்தில் தொலைதூர வேலைகளையே அதிகம் கொண்டிருக்கும்.பணியாளரைத் தக்க வைத்தல் என்பது நெகிழ்வான மணிநேரம் மற்றும் தொலைதூரத்தில் வேலை செய்யும் திறனை அனுமதிப்பதில் மேலும் மேலும் சார்ந்துள்ளது. தொலைதூரத் தொழிலாளர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் சிக்கியிருப்பவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். உண்மையில், வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குத் தொலைதூரத்தில் வேலை செய்வதில் 60-80% நேரத்தைச் செலவிடுபவர்கள் தங்கள் முழு நேரத்தையும் அலுவலகத்தில் செலவிடுபவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.


தொலைதூரத் தொழிலாளர்களின் அதிகரித்த உற்பத்தித்திறன் மற்றொரு முழு நாளின் மதிப்புள்ள வேலைக்குச் சமமாக இருப்பதாக ஒரு ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.பெரும்பாலான மக்கள் தொலைதூர வேலைக்கு மாறுவதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மேற்கண்ட ஆய்வின் படி உண்மையில், 90% தொலைதூரப் பணியாளர்கள், தங்கள் பணியின் எஞ்சிய காலத்திற்குத் தொலைதூரத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறார்கள். மற்றவர்களுக்கு இந்த முறையைப் பரிந்துரைப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். 94% தொலைதூரப் பணியாளர்கள் மற்றவர்களையும் இதைச் செய்ய ஊக்குவிக்கிறார்கள்.


நன்மைகள் தீமைகளை விட அதிகமாக இருப்பதால், வேலையின் எதிர்காலம் என்பது தொலைதூர வேலையாக மாறும். அதற்கு அனைவரும் தயாராக வேண்டிய நேரம் இது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?