இலங்கை பொருளாதார நெருக்கடி NewsSense
உலகம்

இலங்கை : கைவிரித்த உலக வங்கி - அடுத்து என்ன?

NewsSense Editorial Team

ஒரு நாடு போரினால் பொருளாதார நெருக்கடி எதிர்கொள்வதைப் பார்த்திருக்கலாம், அந்நாட்டின் தவறான கொள்கைகளினால் சிதைவடைவதை இலங்கையில் பார்க்க முடிகிறது.

ஆர்கானிக் விவசாயம், சகட்டுமேனிக்கு வாங்கிய கடன்கள், நிதி சார் விஷயங்களில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காதது, ஒரு இனத்துக்கு எதிரான பிரிவினை அரசியலை கையில் எடுத்தது, பல தசாப்தங்களாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர், ஊழல்... போன்ற பல விஷயங்களால் இன்று அழகிய தீவு தேசமான இலங்கையில் உணவு, மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2022 மார்ச் முதல் மக்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.

மக்களின் எழுச்சிமிகு போராட்டத்தின் எதிரொலியாக, கடந்த மே 9ஆம் தேதி இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். தற்போது இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்று இருக்கிறார்.

இந்த நேரத்தில், இலங்கை நாட்டுக்கு எந்தவித புதிய நிதி உதவிகளையும் செய்ய உலக வங்கியிடம் திட்டமேதும் இல்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் போதுமான, மிக நுட்பமான, ஆழமான பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் வர வேண்டும் என கூறியுள்ளது உலக வங்கி.

இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் இலங்கை மக்கள் படும் அவதியைக் குறித்து உலக வங்கி பெருங்கவலைக் கொண்டிருப்பதாக செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

பொருளாதார கொள்கை மாற்றங்கள் சிதைவடைந்து கிடக்கும் இலங்கைப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய அடிப்படை விஷயங்களைக் களைந்து, எதிர்காலத்தில் இலங்கை பொருளாதாரம் மீண்டு வருவதை உறுதி செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

இலங்கையில் ஏற்படவிருக்கும் எதிர்கால வளர்ச்சி எப்படிப்பட்ட சூழலையும் தாக்குபிடிக்கக் கூடியதாகவும், பரவலான மக்களை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் அன்றாடத் தேவைகளான மருந்து, சமையல் எரிவாயு, உரம், உணவு, ஏழை மக்களுக்கான பணப் பரிவர்த்தனைக்கு, ஏற்கனவே வழங்கி இருக்கும் கடன்களை மறுசீரமைத்து உலக வங்கி நிதியுதவி செய்து வருகிறது. இதுவரை 160 மில்லியன் அமெரிக்க டாலர் இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கி வழங்கும் பணம், ஏழை எளிய மக்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்ய, உலக வங்கி, திட்டங்களை அமல்படுத்தும் பல முகமைகளோடு இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது.

ஏற்கனவே இலங்கை அரசு பல சர்வதேச கடன்களைச் செலுத்த முடியாது என கைவிரித்துவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையோ, இலங்கை தீவு தேசத்தில் வாழும் சுமார் 57 லட்சம் மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் தேவை என எச்சரித்துள்ளது.

இலங்கையில் விலைவாசி, சரியும் இலங்கை ரூபாய், சர்வதேச நிதி உதவி, பொருட்கள் பற்றாக்குறை, கோபத்தில் கொந்தளிக்கும் மக்கள்... என எதிர்கொண்டு சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளும் வேலைகளும் நிறையவே இருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?