1,375 அடி ஆழம்; உலகின் முதல் பூம்மிக்கு அடியில் ஓட்டல் - ஒரு இரவுக்கு கட்டணம் என்ன? ட்விட்டர்
உலகம்

1,375 அடி ஆழம்; உலகின் முதல் பாதாள ஓட்டல் - ஒரு இரவுக்கு கட்டணம் என்ன?

Keerthanaa R

பல முறை நம்மைச் சுற்றி நடப்பதை பார்த்தால், இந்த மனிதர்கள் அல்லாத உலகத்திற்கு சென்று விடலாம் என்று தோன்றும். அப்படி உங்களுக்கு தோன்றும் என்றால், இந்த பதிவு உங்களுக்காக. (எழுதும் எங்களுக்காகவும் தான்!)

இங்கிலாந்தில் உலகின் முதல் பூம்மிக்கடியில் ஓட்டல் ஒன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிக ஆழமான விடுதியாகும். இந்த விடுதியறை பூமிக்கு கீழே சுமார் 1,375 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது 419 மீட்டர்.

இந்த விடுதியின் பெயர் தி டீப் ஸ்லீப் ஓட்டல். வேல்ஸ் நகரில் ஸ்னோடோனியா மலைகளில் இது அமைக்கப்பட்டுள்ளது. கோ பிலோ என்கிற நிறுவனம் ஓட்டலின் செயல்பாடுகளை கவனித்துகொள்கிறது. மேலும், கடந்த ஏப்ரல் முதல் முன் பதிவுகள் தொடங்கிவிட்டன.

இங்கு அமைக்கப்பட்டுள்ள அறைக்கு செல்லவேண்டும் என்றால் கைவிடப்பட்ட விக்டோரியா சுரங்கத்தின் வழியாக தான் செல்லவேண்டும். அதுதான் ஒரே வழி.

மெட்ரோ பத்திரிகையின் அறிக்கையின்படி, இருவர் ஒரு இரவு இங்கு தங்குவதற்கு 350 பௌண்ட், அதாவது கிட்ட தட்ட 37,000 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். இரு இரவுகளுக்கு 56,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

இந்த ஓட்டலில் மொத்தம் 5 அறைகள் உள்ளன. அதில் ஒன்று தம்பதிகளுக்கான டபுள் பெட் கொண்ட அறை. மற்றவை நான்கும், இரட்டை மெத்தைகள் கொண்ட அறை. ஒரு வழக்கமான ஓட்டல் அறையில் இருக்கும் டிவி, புத்தகங்கள் போன்ற வசதிகள் அனைத்தும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

இங்கு செல்ல விருந்தாளிகள், டானிக்ரிசியாவு அடிதளத்தை முதலில் அடையவேண்டும். அங்கிருந்து அவர்களை அழைத்துச் செல்ல லீடர் ஒருவர் நியமிக்கப்படுகிறார்.

இந்த அடிதளத்திலிருந்து சுமார் 45 நிமிடம் மலைகளின் மீது டிரெக்கிங் செல்லவேண்டும். அந்த புள்ளியிலிருந்து விருந்தாளிகளின் பாதுகாப்புக்கு தேவையான ஹெல்மெட்கள், விளக்கு போன்ற சாதனங்கள் வழங்கப்படுகிறது.

அங்கிருந்து சுரங்கத்திற்குள் இறங்கத் தொடங்க வேண்டும். பாழடைந்த சுரங்கமான இங்கு நிறைய பழுதடைந்த பாலங்களும், படிக்கிணறுகளும் உள்ளன. சுரங்கம் வழியாக பயணித்து ஓட்டலின் வாயிலை அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது.

அட்வென்சர் அனுபவத்துக்கு தயாரா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?