அதிவேகமாக நடக்க உதவும் மூன்வாக்கர்ஸ் என்ற காலணிகளை ரோபோடிக்ஸ் என்ற பொறியாளர்கள் குழு உருவாக்கியுள்ளது.
பென்சில்வேனியாவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் ஷிப்ட் ரோபோட்டிக்ஸ் மூலம் மூன் வாக்கர்ஸ் என்ற காலணிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது மற்ற காலணிகளை போன்று சாதாரண காலணிகள் அல்ல. இது நடையின் வேகத்தை 250% அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோலர் பிளேடு வீல்களுடன் கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்ட்ராப்-ஆன் ஷூக்கள் மணிக்கு 11 கிமீ வேகம் மற்றும் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் செல்லும்.
இந்த காலணிகள் என்பது ஒரு சக்கரங்கள் அமைப்பை கொண்டது. இதை எந்த வகை காலணியிலும் அணிய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சக்கரங்களை காலணிகளில் பொருத்திவிட்டு நடக்கும் போது நமது வேகத்திற்கு ஏற்ப செயல்படும்.
இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள், கால்களின் வேகத்தை கணித்து கொண்டு அதற்கேற்ற சீரான வேகத்தை அளிக்கும்.
அதிகபட்சமாக இந்த மூன்வாக்கர்ஸை பயன்படுத்தி நடக்கும் போது சராசரி வேகத்தை விட 250% அதிகமாக இருக்கும்.
300-வாட் மின்சார மோட்டார் ஷூவின் எட்டு ரோலர் பிளேடு சக்கரங்களுக்கு சக்தி அளிக்கிறது.
இந்த சக்கரங்களை பொருத்தி கொண்டு படிக்கட்டு ஏறும்போது லாக் முறையை (Lock Method) பயன்படுத்தி அனைத்து சக்கரங்களையும் லாக் செய்ய முடியும். இதனால் படிக்கட்டுகளில் நாம் எப்போதும் போல ஏற முடிகிறது.
இந்த காலணிகளுக்கான திட்டமிட்ட விலை $1,399 (கிட்டத்தட்ட ரூ. 1.15 லட்சம்).
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust