Elephant Istock
உலகம்

கம்போடியா : உலகின் தனிமையான யானை கான்வா நிலை இப்போது இதுதான்

பாகிஸ்தானில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் தனியாக இருந்த யானைக்கு, ஒரு புதிய மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைத்ததைக் கண்டு இணையவாசிகள் மகிழ்ந்தனர்.

NewsSense Editorial Team

"உலகின் தனிமையான யானை" என்று அறியப்பட்ட “காவன்” என்கிற யானைக்கு இப்போது 37 வயதாகிறது. காவன் தற்போது கம்போடியா வனவிலங்கு சரணாலயத்தில். மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வருகிறது.

காவனுக்கு சாப்பிடுவது தான் பிடித்தமான பொழுதுபோக்கு. ஒரு கோடை நாளில் யானை காவன் ஓய்வெடுக்கிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், யானை தனது தலையை நீருக்கடியில் மூழ்கி எடுத்து விளையாடுகிறது.

அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த “Save Elephant Foundation, “கம்போடிய வனவிலங்கு சரணாலயத்தில் மிகவும் வெப்பமான பிற்பகலில் காவன் இளைப்பாறுவதையும், உடல் சூட்டைத் தணிப்பதையும் பாருங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் தனியாக இருந்த யானைக்கு, இங்கே ஒரு புதிய மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைத்ததைக் கண்டு இணையவாசிகள் மகிழ்ந்தனர்.

1985-ல் இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட யானை காவன், கிட்டத்தட்ட 35 வருடங்கள் அங்கிருந்தது. காவனின் 22 வருட கூட்டாளியான சஹேலி 2012-ல் இறந்து விட , இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையில் காவன் தனிமையிலேயே இருக்க நேர்ந்தது. கடைசியாக மீதமுள்ள ஆசிய யானை என்ற பெருமையும் காவனுக்கு உண்டு.

அமெரிக்கப் பாடகர் செர் முன்னெடுத்த, காவனின் தனிமைக்கு எதிரான தொடர் பிரசாரத்தின் வாயிலாக இஸ்லாமாபாத் மிருக காட்சி சாலைக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.

வழக்கின் முடிவில், மே 2020-ம் ஆண்டு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் காவனையும் மற்றும் 38 மற்ற விலங்குகளையும் வேறு சரணாலயங்களுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டது. FOUR PAWS என்ற அமைப்பு காவனின் மீட்பு மற்றும் மறுவாழ்வு பணியை வழிநடத்தி, அதே ஆண்டு நவம்பர் 30 அன்று கம்போடியா வனவிலங்கு சரணாலயத்திற்கு மாற்றியது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?