World's 'Oldest' Jeans Twitter
உலகம்

மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட ஜீன்ஸ் - எத்தனை லட்சத்துக்கு ஏலம் போனது தெரியுமா?

இந்த ஜீன்ஸை எந்த நிறுவனம் தயாரித்தது என்று தெரியவில்லை. இருப்பினும், சிலர் இந்த ஜீன்ஸ் Levi Strauss & Co. நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Priyadharshini R

பல தசாப்தங்ககளுக்கு முன்பு வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை சித்தரிக்கும் வகையில் அநேக கலைப்பொருட்கள் சான்றாக இருக்கின்றன. அவை நம்மை திகைக்க வைக்கத் தவறியதில்லை.

காலப்போக்கில் அவற்றின் மதிப்புகள் அதிகரிக்கின்றன. பழங்கால பொருட்களை வைத்திருப்பதில் ஆர்வமுள்ளவர்கள் அவற்றை ஏலம் விடுகிறார்கள்.

அப்படி உலகின் பழமையான ஜீன்ஸ் ஒன்று ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) கடற்கரையில் 1857ஆம் ஆண்டு மூழ்கிய கப்பலின் சேதங்களிலிருந்து மீட்கப்பட்ட உலகின் பழமையான ஜீன்ஸ் 114,000 அமெரிக்க டாலர்களுக்கு (ரூ. 94 லட்சம்) விற்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ரெனோவில் மொத்தம் $1 மில்லியனுக்கு விற்கப்பட்ட 270 சகாப்த கலைப்பொருட்களில் இந்த பேன்ட் ( pant) இருந்தது.

இந்த ஜீன்ஸை எந்த நிறுவனம் தயாரித்தது என்று தெரியவில்லை இருப்பினும், சிலர் இந்த ஜீன்ஸ் Levi Strauss & Co. நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1873 ஆம் ஆண்டில் தான் தனது முதல் ஜீன்ஸ்களை உருவாக்கியது. எனில், இது எந்த நிறுவனத்தின் ஜீன்ஸ்?

உலகின் பிரபலமான ஜீன்ஸ் உற்பத்தியாளர்களில் ஒருவரான லெவி ஸ்ட்ராஸ் என்பவரால் முதல் வெள்ளை ஜீன்ஸ் தயாரிக்கப்பட்டது என்ற கருத்தில் தற்போது வேறுபாடு நிலவி வருகிறது. கண்டுபிடிக்கப்பட்ட ஜீன்ஸ் லெவிக்கு 16 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது.

சில வல்லுநர்கள் இதற்கு லெவி ஸ்ட்ராஸுடன் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளனர்.

லெவி ஸ்ட்ராஸ் மொத்த விற்பனையாளராக இருந்தார், வெள்ளை பேன்ட் அவர்களின் ஜீன்ஸ் வரிசையின் ஆரம்ப தயாரிப்பாக இருந்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த வெள்ளை ஜீன்ஸ் 1857 இல் மூழ்கிய கப்பலின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. இதை யார் உருவாக்கினார்கள் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.

ஆனால் இது செப்டம்பர் 12, 1857 க்கு முன்னர் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதி. காரணம், ஜீன்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலின் விபத்து.

1857 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக அது மூழ்கியது.

இந்த கப்பல் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பனாமா வழியாக நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துள்ளானது.

சில மாதங்களுக்கு முன், கைவிடப்பட்ட சுரங்கத்தில் 1880 களில் பயன்பாட்டிலிருந்த லெவியின் ஜீன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டு ரூ. 71 லட்சத்திற்கும் ($87,400) ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?