கேன் டனாகா  Twitter
உலகம்

119 வயதில் இறந்த உலகின் மூத்த பெண்மணி - வருந்தும் ஜப்பான்

Antony Ajay R

உலகிலேயே வயது முதிர்ந்த நபராகக் கருதப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த கேன் டனாகா 119 வயதில் இறந்துள்ளார். அதிக வயது ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்த அவரது மறைவு ஜப்பானிய மக்களுக்கு மட்டுமின்றி மொத்த உலகுக்கும் வருந்தத்தக்க இழப்பாகக் கருதப்படுகிறது.

1903ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி பிறந்தவர் டனாகா. ஜப்பானைச் சேர்ந்த இவர் இரண்டு உலகப் போர்களையும் தன் வாழ்க்கையில் கடந்து வந்தவர். ஜப்பானின் தென்மேற்கு ஃபுகுவோகா பகுதியில் பிறந்த இவர், தனது இளமைப் பருவத்தில், நூடுல்ஸ் கடை மற்றும் அரிசி கேக் கடை உட்பட பல்வேறு வணிகங்களை நடத்தி வந்தார். 1922-ல் ஹிடியோவை மணந்தார். நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த இந்தத் தம்பதி, ஐந்தாவதாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்டனர்.

லூசில் ரண்டன்

கடந்த 2019ம் ஆண்டு 116 வயதாகியிருந்த இவருக்கு கின்னஸ் உலக சாதனையின் உலகின் வயதான பெண் என்ற அங்கிகாரம் கிடைத்தது. அப்போது ஊடகங்களிடம் பேட்டியளித்த அவர் தான் 120 வயது வரை மகிழ்ச்சியாக வாழ்வேன் எனக் கூறியிருந்தார். அந்த வயதிலும், தினசரி காலை 6:00 மணிக்கே எழுந்து, மதியம் கணிதம் மற்றும் கையெழுத்துப் பயிற்சி செய்வதை டனாகா வழக்கமாகக் கொண்டிருந்ததாக கின்னஸ் அமைப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் நினைத்த 120 வயதை அடைய சில மாதங்களே காத்திருக்க வேண்டிய நிலையில் தற்போது தன் உயிரை துறந்திருக்கிறார் டனாகா.

உலகப் போர்கள் மட்டுமின்றி கொரோனா தொற்றையும் கடந்து வாழ்ந்தவர் டனாகா நர்சிங் ஹோம் ஒன்றில் தங்கியிருந்த இவர் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மரணத்தை தளுவியிருக்கிறார். இந்த செய்தியை ஏப்ரம் 26ம் தேதி வெளியிட்டிருக்கிறது அரசு.

கேன் டனாகாவின் மரணத்தைத் தொடர்ந்து 118 வயதாகு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருட்சகோதரி லூசில் ரண்டன் உலகில் அதிக வயது மதிக்கத்தக்க பெண்மணியாகிறார். ஜப்பானில் 115 வயது ஃபுசா டட்சுமி அதிக வயதுடையவராக இருக்கிறார்.

ஜப்பானில் தான் அதிக வயதான மக்கள் வசிக்கின்றனர். அந்நாட்டில் 100 வயதைக் கடந்த மக்கள் மட்டுமே 86,510 பேர் வசிக்கின்றனர். அவர்களில் ௯௦ விழுக்காடு நபர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?