உலகின் பழமையான பல்கலைக்கழகங்கள் ட்விட்டர்
உலகம்

Oxford முதல் Cambridge வரை: உலகின் பழமையான பல்கலைக்கழகங்கள் - இப்போதைய தரம் என்ன?

உலகம் முழுக்க இருக்கும் பழமையான பல்கலைக்கழங்கள் என்னென்ன, அவை எங்கு இருக்கின்றன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Keerthanaa R

கல்வி என்பது உயிரினங்களின் வாழ்வில் அடிப்படையான ஒன்றாக இருந்து வருகிறது. இயற்கையாகவே நாம் அனைவரும் ஏதோ ஒன்றை கற்பிக்க, கற்க முற்படிகிறோம். கற்பிக்கும் முறைகள் தான் காலத்திற்கு ஏற்றவாறு மாறியுள்ளன.

மனித நாகரீக வளர்ச்சியின் பகுதியாக உலகெங்கிலும், கல்வி நிலையங்களும், பல்கலைக்கழகங்களும் வரத் தொடங்கின. இந்த பல்கலைக்கழகங்கள், ஒரு குறிப்பிட்ட துறையில் நம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவின.

அந்த வகையில், உலகம் முழுக்க இருக்கும் பழமையான பல்கலைக்கழங்கள் என்னென்ன, அவை எங்கு இருக்கின்றன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பொலோக்னா பல்கலைக்கழகம்:

1088ல் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது.

1150 வரை இது பல்கலைக்கழகம் என்ற வகைக்குள் வரவில்லை என்றும், universitas என்ற வார்த்தையே இந்த பல்கலைக்கழகத்திலிருந்து தான் வந்தது எனவும் சான்றுகள் கூறுகின்றன.

QS World University Rankings 2022 படி, ஆண்டுதோறும் சுமார் 85,000 மாணவர்கள் இந்த யுனிவெர்சிட்டியில் படிக்க விண்ணப்பிகின்றனர். அதில் 6000 பேருக்கு மேல் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்:

1096ல் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இது இங்கிலாந்தில் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.

உலகின் சிறந்த கல்வி நிலையங்களில் இதுவும் ஒன்று.

லண்டன் நகரத்தின் பல முக்கிய தலைவர்கள் இங்கு தான் படித்துள்ளனர்.

பிரதமர்கள் முதல் நோபல் பரிசு வென்றவர்கள் வரை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

இங்கு இந்தியாவின் சில முக்கிய புள்ளிகளும் படித்திருக்கின்றனர். இந்திரா காந்தி, மன்மோகன் சிங் போன்றவர்கள் ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவெர்சிட்டியின் அலுமினிகள் தான்.

QS World University Rankings 2022ன் சிறந்த யுனிவர்சிட்டிகள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது Oxford University

சலமான்கா பல்கலைக்கழகம்:

ஒன்பதாம் அல்ஃபோன்சோ மன்னரால் 1218 ஆம் ஆண்டு சலமான்கா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இது ஸ்பெயின் நாட்டின் மிக பழமையான யுனிவெர்சிட்டி, மற்றும் உலகளவில் மூன்றாவது பழமையானதும் கூட.

15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இத்தாலிய ஆய்வாளர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவுக்கு தனது பயணத்தை மேற்கொள்ள அரசின் ஆதரவை பெற முயற்சிகள் மேற்கொண்டது இந்த பல்கலைக்கழகத்திலிருந்து தான்.

சுமார் 30,000 மாணவர்கள் இங்கு இன்று படித்துவரும் நிலையில், மொத்தம் 81 படிப்புகளை வழங்குகிறது சலமான்கா யுனிவெர்சிட்டி.

QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2022 படி, சலாமன்கா பல்கலைக்கழகம் 651-700 வது இடத்தில் உள்ளது.

யுனிவெர்சிட்டி ஆஃப் பாரிஸ்:

1160 மற்றும் 1250 க்கு இடையில் நிறுவப்பட்ட பாரிஸ் பல்கலைக்கழகம் லா சோர்போன் என்றும் அழைக்கப்படுகிறது.

1970 ஆம் ஆண்டில் நடந்த தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்குப் பிறகு இந்த யுனிவெர்சிட்டி 13 அடானாமஸ் பல்கலைக்கழகங்களாக பிரிக்கப்பட்டது. இதுவும் உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் 60,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றனர்.

1793 மற்றும் 1896 க்கு இடையில் பிரெஞ்சு புரட்சி காரணமாக இந்த பல்கலைக்கழகம் செயல்படாமல் இருந்தது.

பிரெஞ்சு எழுத்தாளர், வரலாற்றாசிரியர் மற்றும் தத்துவவாதி, வால்டேர் போன்ற பல பிரபலங்கள் இங்கு படித்தனர்.

பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் நாடக ஆசிரியர், ஹோனர் பால்சாக், பிரெஞ்சு தத்துவவாதி, நாவலாசிரியர் மற்றும் நாடக ஆசிரியர், ஜீன்-பால் சார்த்ரே, ரேடியம் மற்றும் பொலோனியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி ஆகியோரும் இங்கு தான் படித்தனர்.

QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2022 படி, பாரிஸ் பல்கலைக்கழகம் 72 வது இடத்தில் உள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்:

கருத்துவேறுபாடுகள் காரணமாக ஆக்ஸ்ஃபர்டு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களால் 1209 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

விரைவில் பிரபலமடைந்த இந்த பல்கலைக்கழகம், தற்போது 23,000 மாணவர்களைக் கொண்டுள்ளது. இதில் 5000த்துக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு மாணவர்கள்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜான் ஹார்வர்ட் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர் தான்.

படுவா பல்கலைக்கழகம்:

பொலோக்னா பல்கலைக்கழக ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து இந்த யுனிவெர்சிட்டியை நிறுவினர்.

முதலில் சட்டம் மற்றும் மருத்துவ பள்ளியாக செயல்பட்ட இந்த பல்கலைக்கழகம் ஆரம்பகால நவீன ஐரோப்பாவின் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருந்தது.

இருப்பினும், பல வரலாற்றாசிரியர்கள் இந்த நிறுவனம் இன்னும் பழமையானது என்று நம்புகிறார்கள்.

நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்ற வானியலாளர் இந்த யுனிவெர்சிட்டியில் படித்தவர் தான். இன்று 30 க்கும் மேற்பட்ட துறைகளில் படிப்புகளை வழங்கும் ஒரு செல்வாக்குமிக்க மற்றும் மதிப்புமிக்க கல்வி நிலையமாக உள்ளது.

நேபிள்ஸ் ஃபெட்ரிகோ பல்கலைக்கழகம்:

ரோம சாம்ராஜ்யத்தின் பேரரசர் இரண்டாம் பிரடெரிக் 1224 ஆம் ஆண்டில் இத்தாலியின் நேபிள்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

2022 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் QS உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 424 வது இடத்தில் இருந்தது.

பல்கலைக்கழகத்தில் 80,000 க்கும் மேற்பட்ட மாணவர்களும் சுமார் 2,500 கல்வி ஊழியர்களும் உள்ளனர்.

தற்போது இங்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு, உயிர் விஞ்ஞானப் பிரிவு மற்றும் சமூக அலுவல்கள் மற்றும் மானுடவியல் பிரிவு ஆகிய மூன்றும் செமி இண்டிபெண்டன்ட் பிரிவுகளாக செயல்படுகிறது

சியெனா பல்கலைக்கழகம்:

டஸ்கனி பிராந்தியத்தில் அமைந்துள்ள சியானா பல்கலைக்கழகம் சட்டம் மற்றும் மருத்துவ பள்ளிகளுக்காக நன்கு அறியப்பட்டது. இத்தாலியில் 1240 இல் நிறுவப்பட்டது.

1321 ஆம் ஆண்டில் அருகிலுள்ள மதிப்புமிக்க போலோக்னா பல்கலைக்கழகத்திலிருந்து பெருமளவில் வெளியேறிய மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர்.

சியானா பல்கலைக்கழகம் இளங்கலையில் 33 முதல்-சுழற்சி பட்டத் திட்டங்களையும், முதுகலையில் 36 இரண்டாம் சுற்று பட்டங்களையும், சட்டத்தில் ஒரு சுழற்சி பட்டப்படிப்பு திட்டத்தையும், ஐரோப்பிய ஒன்றிய வழிகாட்டுதல்களால் ஒழுங்குபடுத்தப்படும் மருத்துவம் மற்றும் மருந்தியல் துறையில் நான்கு ஒற்றை-சுழற்சி பட்டப்படிப்பு திட்டங்களையும் நடத்துகிறது.

1,380 வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் 687 ஊழியர்கள் மற்றும் 12,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

2022 ஆம் ஆண்டில், சியானா பல்கலைக்கழகம் QS உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 601-650 வது இடத்தில் இருந்தது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?