சச்சின் டெண்டுல்கர் முதல் தோனி வரை : உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யார் யார்? Twitter
உலகம்

தோனி முதல் கோலி வரை : உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?

விளையாடுவதன் மூலம் மட்டும் அவர்கள் சம்பாதிக்கவில்லை மாறாக பல்வேறு விளம்பரங்களின் மூலமாகவும் பணம் சம்பாதிக்கின்றனர். பல கிரிக்கெட் வீரர்களின் நிகர மதிப்பு மில்லியன் டாலர்கள். உலக அளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

Priyadharshini R

கிரிக்கெட் உலக விளையாட்டாக மாறிவிட்டது. கிரிக்கெட் விளையாட்டுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி தற்போது உலகளவில் அதிக அங்கீகாரம் பெற்றுள்ளது.

அது மட்டுமில்லாமல் கிரிக்கெட் வணிக ரீதியாகவும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. போட்டிகளுக்கு அதிக ஸ்பான்சர்ஷிப்கள் வழங்கப்படுகின்றன. மக்கள் கிரிக்கெட் வீரர்களை பிரபலங்களாக கருதுகின்றனர்.

விளையாடுவதன் மூலம் மட்டும் அவர்கள் சம்பாதிக்கவில்லை மாறாக பல்வேறு விளம்பரங்களின் மூலமாகவும் பணம் சம்பாதிக்கின்றனர். பல கிரிக்கெட் வீரர்களின் நிகர மதிப்பு மில்லியன் டாலர்கள். உலக அளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் 170 மில்லியன் டாலர் (1090 கோடி) சொத்து மதிப்புடன் உலக அளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 1வது இடத்தில் உள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரராக பரவலாகக் கருதப்படுகிறார். கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர், கிரிக்கெட்டின் கடவுள் பட்டமும் அவருக்கு வழங்கப்படுகிறது.

சச்சின் கேனான், விசா, பெப்சி, பிஎம்டபிள்யூ, அடிடாஸ் போன்ற பல்வேறு பிராண்டுகளை விளம்பரப்படுத்துகிறார். மேலும் 2001 ஆம் ஆண்டு MRF (Tyre company) உடன் 100 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சச்சினுக்கு 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. சச்சின் புரோ கபடி அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர்.

மகேந்திர சிங் தோனி

உலக அளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் மகேந்திர சிங் தோனி 2வது இடத்தில் உள்ளார். MSD இன் நிகர மதிப்பு $111 மில்லியன் (767 கோடிகள்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக தோனி கருதப்படுகிறார். இதற்கு முக்கிய காரணம் தோனி விளையாடும் விதம், அவரின் கூலான Attitude! அவர் கேப்டன் கூல் என்றும் அழைக்கப்படுகிறார். தோனியின் தலைமையின் கீழ், இந்திய அணி 2011 உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2 ஆசிய கோப்பைகள் உட்பட அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளது.

தோனி, Reebok, Red Bus, Go Daddy, Orient, Indigo paints போன்ற பல்வேறு பிராண்டுகளுடன் பார்ட்னராக சேர்ந்துள்ளார். தோனி 'Se7en' என்ற பேஷன் பிராண்டையும் கொண்டுள்ளார்.

விராட் கோலி

உலகின் மூன்றாவது பணக்கார கிரிக்கெட் வீரர் விராட் கோலி. விராட்டின் நிகர மதிப்பு சுமார் $92 மில்லியன் (638 கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் கருதப்படுகிறார்.

விராட் பெப்சி, கூகுள், டிஸ்ஸாட், மான்யவர், வால்வோலின் போன்ற பல்வேறு சர்வதேச மற்றும் இந்திய பிராண்டுகளை விளம்பரப்படுத்தியுள்ளார்.

விராட் Wrogn என்ற ஃபேஷன் பிராண்டையும் வைத்திருக்கிறார்.

ரிக்கி பாண்டிங்

உலக அளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ரிக்கி பாண்டிங் 4வது இடத்தில் உள்ளார்.

ரிக்கியின் நிகர மதிப்பு $70 மில்லியன் (500 கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் ரன்களில் சுமார் 28,000 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி.

அவர் ஒரு பேட்ஸ்மேன், சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த பீல்டர். ரிக்கி வால்வோலின் அடிடாஸ் போன்ற பல்வேறு பிராண்டுகளுடன் பார்ட்னராக சேர்ந்துள்ளார்.

பிரையன் லாரா

உலக அளவில் முதல் பத்து பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் பிரையன் லாரா 5வது இடத்தில் உள்ளார். லாராவின் நிகர மதிப்பு $60 மில்லியன் (415 கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரையன் லாரா முன்னாள் கரீபியன் கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

2004 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் 400 ரன்களை எடுத்ததன் மூலம் அதிக தனிநபர் ரன்களை எடுத்த சாதனையாளராகவும் உள்ளார். லாரா இந்திய டயர் தயாரிப்பு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தார்.

ஷேன் வார்ன்

உலக அளவில் முதல் பத்து பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ஷேன் வார்ன் 6வது இடத்தில் உள்ளார்.

ஷேனின் நிகர மதிப்பு சுமார் $50 மில்லியன் (346 கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முக்கிய லெக் ஸ்பின்னரும் ஆவார்.

ஷேன் வார்ன் பெப்சி, மெக்டொனால்ட்ஸ் போன்ற பல்வேறு பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்திருந்தார். இவர் கடந்த 2022ல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஜாக் காலிஸ்

இந்த பட்டியலில் ஜாக் காலிஸ் 7வது இடத்தில் உள்ளார். இவரது சொத்தின் நிகர மதிப்பு $48 மில்லியன் (339 கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பிரபல முன்னாள் வீரர் ஆவார்.

காலிஸ் எல்லா காலத்திலும் மிகவும் வெற்றிகரமான ஆல்ரவுண்டராக இருந்தார்.

வீரேந்திரர் சேவாக்

உலக அளவில் 8வது பணக்கார கிரிக்கெட் வீரர் வீரேந்திரர். அவரது நிகர மதிப்பு தோராயமாக $40 மில்லியன் (277 கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

வீரேந்திர சேவாக் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆவார். ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டனாகவும் பணியாற்றினார்.

சேவாக் ஹீரோ ஹோண்டாவின் முன்னாள் பிராண்ட் அம்பாசிடர் ஆக இருந்தார். அவர் ரீபோக், சாம்சங், அடிடாஸ் மற்றும் பல பிராண்டுகளுடன் பார்ட்னர்ஷிப்பில் இருந்தார்.

யுவராஜ் சிங்

உலகின் முதல் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங் 9வது இடத்தில் உள்ளார். யுவராஜின் நிகர மதிப்பு $35 மில்லியன் (245 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. யுவராஜ் சிங் ஒரு ஆல்-ரவுண்டர் ஆவார். அவர் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார்.

அவர் தனது சொந்த ஆடை பிராண்டான YWC ஐத் தொடங்கினார்.

ஷேன் வாட்சன்

உலகின் முதல் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ஷேன் வாட்சன் 10வது இடத்தில் உள்ளார். ஷேனின் நிகர மதிப்பு $30 மில்லியன் (210 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஷேன் ஆல்-ரவுண்டராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய உறுப்பினராக இருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?