மரங்கள் வனங்களின் குழந்தைகள். மனிதனின் வாழ்வோடு நேரடித் தொடர்புடையவை. மனிதனைத் தாண்டியும் வாழக்கூடிய மரங்கள் பல சுவாரஸ்யங்களைத் தங்களுக்குள் வைத்திருக்கின்றன. அப்படியிருக்கையில், உலகின் மிகப் பழமையான மரத்தின் தாயகமாக சிலி இருக்கலாம் எனத் தற்போது ஒரு யூகம் கிளம்பியிருக்கிறது. சிலியில், 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 'தாத்தா' என்று அழைக்கப்படும் ஒரு பழங்கால மரம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இந்த மரத்தில் பெரிய தண்டு இருப்பதால், விஞ்ஞானிகளால் மரத்தின் வயதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. மர வளையங்களை எண்ணுவதற்கு 1 மீட்டர் (1.09 கெஜம்) மர உருளை பிரித்தெடுக்கப்படும்போது, இந்த பழைய மரத்தின் தண்டு 4 மீட்டர் விட்டம் கொண்டிருக்கிறது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, பாரிஸில் உள்ள காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வகத்தின் சிலி விஞ்ஞானி ஜொனாதன் பேரிச்சிவிச் இந்த மரத்திற்கான ஆய்வுக்குத் தலைமை தாங்கினார். அவர்கள் பிரித்தெடுத்த மாதிரி மற்றும் பிற டேட்டிங் முறைகளைக் கொண்டு மரம் 5,484 ஆண்டுகள் பழைமையானது என்று அவர் கூறியிருக்கிறார்கள்.
"இந்த உயிருள்ள மரத்தின் வயது 5,000 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதற்கு 80% சாத்தியக் கூறுகள் உள்ளன." என்று பரிச்சிவிச் கூறினார். மரம் இளமையாக இருக்க 20% மட்டுமே வாய்ப்பு உள்ளது என ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர். கலிபோர்னியாவில் உள்ள 4,853 ஆண்டுகள் பழைமையான ப்ரிஸ்டில்கோன் பைன் மரம் அரை மில்லினியத்திற்கும் அதிகமாக இளமையாக உள்ளது என்கின்றனர்.
மேலும், "அனைத்து வளையங்களையும் நாம் ஏற்கனவே தேதியிட்ட மரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது கிரகத்தில் வாழும் மிகப் பழமையான மரங்களில் ஒன்றாக மாறும்" என்று பேரிச்சிவிச் கூறினார். அமெரிக்காவில் இதுபோன்ற பல மரங்கள் உள்ளன, ஆனால் அவற்றின் இருப்பிடங்கள் சேதத்தைத் தவிர்க்க மறைக்கப்பட்டுள்ளன.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust