பெண்கள் Twitter
Wow News

ஆழ்கடலில் ஆபத்தான பயணம், உலக சாதனை படைத்த 4 பெண்கள் - குவியும் பாராட்டுகள்

Antony Ajay R

எப்போதும் பெண் சுகந்திரம் என்ற விஷயத்தில் நம்மை விட மேற்கு நாடுகள் கொஞ்சம் உயர்ந்திருப்பதாகத் தோன்றும். இப்போது தான் படித்து உலகம் முழுக்க வேலைக்கு செல்லத் தொடங்கியிருக்கிறார்கள் நம் பெண்கள்.

இதே நேரத்தில் உலகைச் சுற்றி முடித்திருக்கின்றனர் லட்35 என்ற 4 பெண்கள் அடங்கிய குழு. அவர்களின் வரலாற்றுச் சாதனை உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

கலிஃபோர்னியா முதல் ஹவாய் வரை கிட்டத்தட்ட 4444 கிலோ மீட்டர் (2400 நாட்டிகல்) இவர்கள் பயணம் செய்துள்ளனர்.

லட்35 என்பது லிபி காஸ்டெல்லோ, சோபியா டெனிசன்-ஜான்ஸ்டன், ப்ரூக் டவுன்ஸ் மற்றும் அட்ரியன் ஸ்மித் ஆகிய நான்கு பெண்களின் குழுவாகும்.

இந்த மிக நீண்ட கடல் பயணத்தை இவர்கள் 34 நாட்கள் 14 மணிநேரம் 11 நிமிடங்களில் நிறைவு செய்துள்ளனர்.

ஆழமான கடலில் யார் உதவியும் இன்றி படகு ஓட்டிய இவர்களுக்கு இது தான் முதல் ஆழ்கடல் பயணமாம்.

பயணம் மேற்கொண்ட நாட்களில் இவர்கள் ஒரு நாளுக்கு 90 நிமிடங்கள் மட்டுமே தூங்கியிருக்கின்றனர். தங்களுக்குள் ஷிஃப்ட் முறைபடி மாறி மாறி படகு ஓட்டியிருக்கின்றனர்.

இந்த பயணம் சுலபமானதாக இருக்காது என்பதை அவர்களும் உணர்ந்திருந்தனர். கடல் சீற்றம், கடுமையான காற்று மற்றும் கரடுமுரடான கடல் ஆகியவற்றை எதிர்கோள்ள வேண்டியிருந்தது.

கடந்த ஆண்டு இதேப் போல 4 ஆண்கள் கடல் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் 30 நாட்கள் 7 மணி நேரம் 30 நிமிடத்தில் இந்த பயணத்தை மேற்கொண்டனர். இது தான் உலக சாதனையும் கூட.

பெண்கள் இப்படியான பயணத்தை மேற்கொள்வது இது தான் முதல்முறை. லட்35 குழு இதன் மூலம் அமெரிக்காவின் கவலை மற்றும் மனச்சோர்வு கூட்டமைப்புக்கு நிதி வழங்கியிருக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?