டைனோசர் NewsSense
Wow News

டைனோசர் : இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

NewsSense Editorial Team

டைனோசர்கள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த ஒரு உயிரினம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அதற்கு மேல் டைனோசர்கள் பற்றி பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை. வாருங்கள் டைனோசர் குறித்த சில வேடிக்கையான சில உண்மைகளை இங்கே காணலாம்.

டைனோசர்களின் வாழ்க்கை :

மனிதர்கள் பூமியில் சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், டைனோசர்கள் சுமார் 160 மில்லியன் ஆண்டுகள் பூமியை ஆண்டன. இது மனிதர்கள் இருந்ததை விடக் கிட்டத்தட்ட 64 மடங்கு அதிகமாகும். டைனோசர்கள் உணவை வயிற்றில் அரைக்கப் பெரிய பாறைகளை அடிக்கடி விழுங்கியிருக்கின்றன. டைனோசர்கள் அண்டார்டிகா முதற்கொண்டு அனைத்து கண்டங்களிலும் வாழ்ந்தன. ஒரு சில டைனோசர்கள் 200 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்ததாக ஊகிக்கப்படுகிறது.

Dinosaur

டைனோசர்களின் மூளை :

டைனோசர்கள் உருவத்திற்கும் மூளைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்திருக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான டைனோசர்களில் ஒன்று ட்ரூடன் என்கிற வேட்டையாடும் பறவை போன்ற டைனோசர் ஆகும். ஏறக்குறைய 11 அடி உயரம், இன்றைய பறவைகளின் மூளை அளவு இருந்தது. ட்ரூடனுக்கு மனிதர்களைப் போன்ற ஸ்டீரியோஸ்கோபிக் பார்வை இருந்தது. அதேபோல, ஸ்டெகோசொரஸின் உடல் ஒரு வேனின் அளவு இருந்தது. ஆனால் மூளை ஒரு வால்நட் அளவிற்கு மட்டுமே இருந்திருக்கிறது.

Dinosaur

டைனோசர்களின் அளவு :

சில டைனோசர்கள் 100 அடிக்கு மேல் நீளம் கொண்டவையாக இருந்திருக்கின்றன. பேபி முஸ்ஸாரஸ் என்கிற டைனோசர் தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களின் மிகச்சிறியதாகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் முட்டைகள் (சுமார் 19 அங்குல நீளம்). அர்ஜென்டினோசொரஸ் என்பதே இதுவரையிலும் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் மற்றும் இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய நிலத்தில் வாழும் விலங்கு ஆகும். சில அர்ஜென்டினோசொரஸ்கள் தலை முதல் வால் வரை 100 அடிக்கு மேல் இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Dinosaur

டைனோசர்களின் அழிவு :

ஆறு மைல் விட்டம் கொண்ட ஒரு விண்கல் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தைத் தாக்கியதாகப் பல விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது மிகப்பெரிய சக்தியுடன் மோதியது, சுற்றிலும் அதிர்வு அலைகளை அனுப்பியது. இதில் ஏற்பட்ட பாதிப்பினால் டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மற்ற சில விஞ்ஞானிகள், காலநிலை மாற்றத்தால் டைனோசர் இனம் அழிவை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?