லியாம் கிங் twitter
Wow News

உயரமான மலையில் ஏறி சாதனைப் படைத்த கால்கள் இல்லாத ராணுவ வீரர்

Priyadharshini R

இன்றைய நவீனக் காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் திறமைகளை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தி சாதனையை நிகழ்த்தி வருகின்றனர். இதனை சிலர் செய்தியாக கடந்து செல்கிறார்கள், சிலர் இதனை ஒரு உத்வேகமாக எடுத்து நாமும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று முயற்சித்து வருவார்கள்.

அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அல்லது காலத்தின் கோரதாண்டவத்தால் உடல் உறுப்பை இழந்தவர்களின் சாதனை பற்றிய கதைகள் எப்போதுமே நமக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒரு முன்னாள் ராணுவ வீரரின் கதை பலருக்கும் ஒரு ஊக்கத்தை அளித்துள்ளது.

லியாம் கிங்

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பாராசூட் படைப்பிரிவின் 2வது பட்டாலியனில் பணியாற்றி வந்தவர் லியாம் கிங். ராணுவ வீரரான இவர் போர்க்களத்தில் கண்ணி வெடியை மிதித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்

33 வயதில் தனது 2 கால்களைப் பறிகொடுத்த லியாம் கிங், மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார். உடலில் ஏற்பட்ட காயங்களில் மட்டுமல்ல விபத்தால் மனதில் ஏற்பட்ட காயங்களிலிருந்தும் அவர் குணமடைய அதிக நாட்கள் எடுத்துக்கொண்டார்.

லியாம் கிங்

பல மாத மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு லியாம் கிங்க்கு ப்ரோஸ்த்தெடிக் கால்கள் பொருத்தப்பட்டன. இந்த கால்களின் உதவினால் அவரால் நடமாட, வாகனங்களை ஓட்ட முடிந்தது. இதனால் பழைய நிலைக்குத் திரும்ப ஆரம்பித்த அவர் எதையாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணினார்.

ஏர்போர்ன் ஃபிட் என்ற உடற்பயிற்சி நிலையத்தில் இணைந்த லியாம் தனது செயற்கை கால்களுடன் அதற்கான முயற்சியில் இறங்கினார். அதன்படி லியாம் மற்றும் ஏர்போர்ன் ஃபிட்டின் நிறுவனர் லூக் ரீட் ஆகிய இருவரும் இணைந்து ஒரு சாதனை பயணத்திற்குத் திட்டமிட்டனர்.

இதுதொடர்பாக தனது பேஸ்புக் பதிவில் "உச்சியில் கடும் மழை மற்றும் பனி, வேகமான மற்றும் சீற்றமான காற்று ஆகியவற்றை எதிர்கொண்டு தனது செயற்கை கால்களுடன் கடல் மட்டத்திலிருந்து 3,560 அடி உயரத்தில் உள்ள வேல்ஸின் மிக உயரமான மலையை 12 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்ததாகத் தெரிவித்துள்ளார். தன்னம்பிக்கையுடன் மலை ஏறியதற்காக லியாம் கிங்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?