Kashmir : "பிளாஸ்டிக் கொடுத்தால் தங்கம் கிடைக்கும்" - 15 நாட்களில் சாதனை படைத்த கிராமம்!
Kashmir : "பிளாஸ்டிக் கொடுத்தால் தங்கம் கிடைக்கும்" - 15 நாட்களில் சாதனை படைத்த கிராமம்! Twitter
Wow News

Kashmir : "பிளாஸ்டிக் கொடுத்தால் தங்கம் கிடைக்கும்" - 15 நாட்களில் சாதனை படைத்த கிராமம்!

Antony Ajay R

பிளாஸ்டிக் நம் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அறிவோம். இந்தியாவின் ஒரு ஓரத்தில் இருக்கும் கிராமம் பிளாஸ்டிக்கை நீக்க சரியான வழியை கண்டறிந்து சாதித்துள்ளது.

காஷ்மீரின் ஹில்லெர் ஷஹாபாத் பகுதிக்கு அருகில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ளது சதிவரா கிராமம்.

இந்த கிராமத்தின் சுற்றுசூழலைப் பாதுகாப்பதற்காக பிளாஸ்டிக்களுக்கு பதிலாக தங்கம் வழங்குகின்றனர்.

இந்த திட்டத்தின் படி, இந்த கிராமத்தைச் சேர்ந்த யாராவது 20 குவிண்டால் பிளாஸ்டிக் வழங்கினால் அவர்களுக்கு தங்க நாணயம் வழங்குகிறது பஞ்சாயத்து.

இந்த கிராமத்தின் தலைவரான பரூக் அகமது கணாய், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் தனது கிராமத்தை முன்னுதாரணமாக உருவாகியிருக்கிறார்.

ஏனெனில், இந்த திட்டம் தொடங்கப்பட்ட 15 நாட்களில் பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக உருவாகியிருக்கிறது சதிவரா.

இந்த திட்டம் பல தரப்புகளில் இருந்து பாராட்டைப் பெற்றதுடன் மேலும் சில கிராமங்கள் இதனை அமல்படுத்தியிருக்கின்றன.

தொழில்முறை வழக்கறிஞரான ஃபரூக் தனது கிராமத்தில் இருக்கும் ஓடைகள் மற்றும் ஆறுகளை தூய்மையாக வைத்திருக்க இந்த திட்டடத்தை அறிமுகப்படுத்தியதாக கூறியுள்ளார். இதனால் கிராம மக்கள் அனைவரின் உதவியையும் பெற முடிந்ததாக கூறியுள்ளார்.

இவரது திட்டத்தை அரசும் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த ஆலோசித்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?