Blue Footed Booby  Canva
Wow News

Blue Footed Booby : நீல கால்களுடன் நடனமாடும் பறவை - இதற்கு 'முட்டாள்' என பெயர் வந்தது ஏன்?

Keerthanaa R

இயற்கை அதிசயங்கள் நிறைந்தது என்பதை ஒவ்வொரு முறை புதிதாக ஒரு உயிரினத்தையோ, தாவரத்தையோ, பெரும் நிகழ்வையோ நாம் காண நேரும்போது நாம் திரும்பத் திரும்ப நினைவுகூறுகிறோம்.

அப்படி ஒரு இயற்கையின் அதிசயம் தான் இந்த Blue Footed Booby என்கிற பறவை. இவற்றின் கால்கள் நீல நிறத்தில் இருப்பதனால் இந்த பெயர். இதன் கால்கள் வாத்துகளின் கால்களை போல இருக்கும்.

வெளிறிய உடல், வெளிர் பழுப்பு நிற இறக்கைகள் மற்றும் வாத்தின் கால்களைப் போல வலைப்பாதங்கள் கொண்ட இந்த பறவையின் எடை வெறும் 1.5 கிலோ தான்.

இதன் இறக்கைகள் விரிந்தால் சுமார் 5 அடி வரை நீள்கிறது

அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த அரிதான பறவைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

வாழ்விடம்

பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் கலபகோஸ் தீவுகள் தான் இந்த ப்ளூ ஃபுட்டட் பூபி பறவையின் வசிப்பிடம். அதாவது அத்தீவில் இந்த பறவையினம் அதிக எண்ணிக்கையில் காணப்படும். தகவல்களில் அடிப்படையில், உலகிலுள்ள ப்ளூ ஃபுட்டட் பூபி பறவைகளில் பாதிக்கும் மேல் இந்த தீவில் தான் இருக்கின்றன.

கலபகோஸ் உட்பட பசிபிக் பெருங்கடலின் துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல தீவுகளில் நீல கால் பூபிகள் அடிக்கடி காணப்படுகின்றன.

கலபகோஸில் காணப்படும் பறவைகள் கிளையினமாகக் கருதப்படுகிறது, லத்தீன் மொழியில் இதன் பெயர் சுலா நெபோக்ஸி எக்சிசா.

போபோ

இந்த பறவையின் பெயர் ஸ்பானிஷ் மொழி வார்த்தையான Bobo என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இந்த வார்த்தை ஸ்பானிஷில் முட்டாள் என்று பொருள்படுகிறது.

ஆனால், இந்த பறவையை முட்டாள் என இது குறிக்கவில்லை. இப்பறவையின் நடை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப்பதால் இந்த பெயர் வந்ததாம்.

இனப்பெருக்கம்

ஆண் பெண் இருபாலின பறவைகளுக்குமே அதன் கால்கள் நீல நிறத்தில் தான் இருக்கின்றன. இதில் எந்த ஆண் பறவையின் கால்கள் அதிக நீல நிறத்தில், பளிச்சென்று இருக்கிறதோ, அந்த பறவையை பார்த்து தான் பெண் பறவைகள் ஈர்க்கப்படுமாம்.

இனப்பெருக்க காலத்தின்போது, தனது தலையை வான் நோக்கி உயர்த்தி, கால்களை தூக்கி நடனமாடுமாம் இந்த பறவை.

பெலிக்கனின் உறவினர்களாம்

இந்த நீல கால் பூபிக்கள் பெலிக்கன் பறவை இனத்தை சேர்ந்தவையாம். பெலிகன் பறவைகள் பெரிய நீர்ப்பறவையாகும்

பறவைக் கூடு

இந்த பறவை இனம் மற்ற பறவைகளை போல மரத்திலோ, சுவர்களிலோ, கிளைகளிலோ கூடு கட்டுவதில்லை. இவற்றை கூடுகள் அமைக்க பயன்படுத்துவதும் இல்லை.

மாறாக இதன் எச்சம் அதாவது மலம் வைத்தே கூடுகளை உருவாக்குகின்றன. இந்த பறவையின் குட்டிகள் இந்த கூட்டில் தான் பிறக்கின்றன.

இதன் நீல நிற பாதங்களை வைத்து தான் குட்டிகளை இதமாக வைத்திருக்கிறது தாய் பறவை.

இதற்கு காரணம் மற்ற பறவைகளை போல இதன் உடலுக்கு முட்டையை அடைக்காக்கும் பண்பு இல்லை. ஆண் பெண் என இரு பாலின பறவைகளும் கூட்டை காக்கின்றன.

நீல நிற கால்கள் ஏன்?

நீர்நிலைக்கு அருகில் வாழ்வதால் இந்த பறவைகளின் பிரதான உணவாக மீன்கள் தான் இருக்கின்றன. இந்த மீன்களில் இருந்து கிடைக்கும் கரோடினாய்ட்ஸ் என்ற சத்து தான் பறவையின் கால்கள் நீல நிரத்தில் இருக்க காரணம்.

எவ்வளவு நீலமாக இருக்கிறதோ, ஒரு பறவை அவ்வளவு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இரை வேட்டை

பெரும்பாலும் நிலத்தில் வாழும் இப்பறவை தனது இரைய தண்ணீருக்குள் சென்று தான் வேட்டையாடுகிறது.

அப்படி தண்ணீரில் குதிக்கும்போது இறக்கைகளை பின்பக்கமாக இவை மடித்துக்கொள்ளும்.

கண்கள்

ஒரு ப்ளூ ஃபுட்டட் பூபி பறவை ஆணா அல்லது பெண்ணா என அதன் கண்களை வைத்து அடையாளம் தெரிந்துகொள்ள முடியும். அதாவது ஆண் பறவையின் கண் மணிகள், பெண் பறவையின் கண்மணிகளிலிருந்து மாறுபடுவதால் இந்த வித்தியாசத்தை எளிதாக கண்டுகொள்ள முடிகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?