சென்னைக்கு அருகில் பிக்னிக் செல்ல சூப்பர் ஸ்பாட் - Nagalapuram Aare Waterfalls தெரியுமா? Twitter
Wow News

சென்னைக்கு அருகில் பிக்னிக் செல்ல சூப்பர் ஸ்பாட் - Nagalapuram Aare Waterfalls தெரியுமா?

தொடக்கத்தில் முற்கள் நிறைந்திருக்கும் பொட்டல் காட்டில் பயணிப்பதைப் போல இருந்தாலும், செல்ல செல்ல நிறைய சின்னச்சின்ன அருவிகளைப் பார்க்க முடியும். அவற்றின் சத்தம் காதுகளைக் குழுமையாக்கி மனதை ரிலாக்ஸ் செய்யும்.

Antony Ajay R

சென்னையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் ஒரு நாளைக் கழிக்க சிறந்த இடம் நாகலாபுரம். குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ செல்லவதற்கு ஏற்ற இடம் இது.

பைக் அல்லது காரில் 1 முதல் ஒன்றரை மணி நேர ரைடில் நாம் நாகலாபுரத்தை அடையளாம். ஊருக்கு அருகில் நெருங்கிய உடன் அக்கம் பக்கத்தில் விசாரித்து அருவிக்கு செல்ல வேண்டும். கூகுளை நம்பினோர் கைவிடப்படுவர்.

செல்லும் வழி பச்சை பசேலென ரம்மியமானதாக இருக்கும். மழைக்காலத்தில் இன்னும் அழகான ரைடை அனுபவிக்கலாம்.

அருவிக்கு சிறிது தூரம் மலையேற வேண்டும். அதற்கு 5 ரூபாய் மட்டுமே கட்டணம். தொடக்கத்தில் முற்கள் நிறைந்திருக்கும் பொட்டல் காட்டில் பயணிப்பதைப் போல இருந்தாலும், செல்ல செல்ல நிறைய சின்னச்சின்ன அருவிகளைப் பார்க்க முடியும்.

உள்ளே ஒரு கோவில் குளமும் இருக்கும். அங்கு அடிக்கடி ஆட்கள் வந்து செல்ல இருப்பார்கள்.

மேலே சென்றால் இறுதியாக சிறிய அருவியையும் குளத்தையும் பார்க்க முடியும். வார இறுதியில் சென்றால் இங்கு கூட்டம் அள்ளும். பிரைவசி எதிர்பார்ப்பவர்கள் நிச்சயமாக வார நாட்களில் தான் செல்ல வேண்டும்.

நண்பர்களுடன் சென்று அங்கு நன்றாக விளையாடி களைப்புடன் திரும்பும் போது கிடைக்கும் சுகத்தை வார்த்தைகளில் சொல்லிவிடவா முடியும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?