சசிந்திரன் முத்துவேல்: எளிய தமிழர் நியூ கினியாவில் கவர்னரானது எப்படி? நெகிழ வைக்கும் கதை! Twitter
Wow News

சசிந்திரன் முத்துவேல்: எளிய தமிழர் நியூ கினியாவில் கவர்னரானது எப்படி? நெகிழ வைக்கும் கதை!

சிவகாசியில் சாதாரண குடும்பத்தில் பிறந்து பெரிய குளத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர் சசிந்திரன். தந்தை மரணத்துக்கு பிறகு குடும்ப பொறுப்பை ஏற்று வேலைக்காக இந்தியாவில் இருந்து வெளியேறினார். மலேசியா, சிங்கப்பூர் என சுற்றித் திரிந்தவர் நியூ கினியா மக்களுக்கு கவர்னரான அசாதரண பயணம் குறித்துப் பார்க்கலாம்.

Antony Ajay R

பப்புவா நியூ கினியா உலகில் உள்ள மிகவும் விசித்திரமான நாடாகும். இங்க 853 மொழிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது உலகின் ஒட்டுமித்த மொழிகளின் எண்ணிக்கையில் 12 விழுக்காடு. 12 மொழிகள் சமீபத்தில் அழிந்துவிட்டதால் 841 மொழிகளை இன்று அங்குள்ள மக்கள் பேசுகின்றனர்.

காடுகள், மலைகள், கடற்கரைகளில் இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடிகளாக அவர்களது வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்த மக்கள் தங்களது இன அடையாளத்தை எங்கேயும் விட்டுக்கொடுக்காதவர்கள். பழங்குடி கூட்டத்தை பாதுகாப்பதையும் இன நெறிமுறைகளை பின்பற்றுவதையும் முதன்மைக் கடனாக பின்பற்றுகின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தமிழகத்தின் சிவகாசியில் பிறந்த ஒருவர், ஒரு மாகாண கவர்னராக பணியாற்றிவருகிறார். வியப்பாக இருக்கிறது தானே? முத்துவேல் சசிந்திரனின் கதையைப் பார்க்கலாம்.

சசிந்திரனின் தந்தை சிவகாசியில் அச்சகம் வைத்திருந்தார். இவருக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை இருக்கின்றனர். குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டிய நிர்பந்தம் இவருக்கும் இருந்ததால், மலேசியா கே.எஃப்.சி-யில் ரீடெயில் மேனேஜராக கிடைத்த வேலைக்கு செல்கிறார்.

மலேசியாவில் ஒராண்டு காலம் வேலை செய்தார். உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இவரும் வேலை இழந்தார். பின்னர் சிங்கப்பூரில் வேலைத் தேடத் தொடங்கினார்.

ஒரு வாரம் முழுவதும் மலேசியாவில் கிடைக்கும் வேலையைச் செய்வார். தனக்கு தெரிந்த துணிக்கடைக்காரருக்கு துணி விற்றுக்கொடுப்பார். அதில் வரும் சிறிய தொகையைப் பயன்படுத்தி வார இறுதியில் சிங்கப்பூர் சென்று வேலை தேடுவார்.

இப்படி அவரது வாழ்க்கையின் போராட்டமான காலக்கட்டத்தில் தான் நியூ கினியா செல்லும் கதவு திறந்தது. மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் ஒரு சூப்பர் மார்கெட்டில் மேலாளராக பணியில் சேர்ந்தார்.

மலேசியா, சிங்கப்பூர் போலல்லாமல் நியூ கினியா இந்தியர்கள் அதிகம் வசிக்காத பகுதி. இங்குள்ள மக்களின் சுண்ணாம்பு பொட்டு வைப்பது, வெற்றிலைப் பாக்கு வைத்து முக்கிய விவகாரங்களைப் பேசுவது, தமிழர்களின் கூத்து போன்றதொரு கலை வடிவம் எல்லாம் நம் பண்பாட்டுடன் ஒத்துப்போனாலும் தமிழ்ர் என்றோ இந்தியர் என்றோ கூறிக்கொள்ள யாருமில்லை.

கினியாவில் பல மொழிகள் இருந்தாலும் ஆங்கிலமும் ஜெர்மனும் கலந்த அவர்களது மொழிதான் பொதுவானது. இந்த மொழியை விரைவாகவே கற்றுக்கொண்டுள்ளார். வேலையிலும் நியூகினியா வாழ்க்கையிலும் அவருக்கும் பிடிமானம் கிடைக்கும் நேரத்தில் இவரது முதலாளி கடையை விற்கப்போவதாக தெரிவிக்கிறார்.

சசிந்திரன் எங்கெங்கோ அலைந்து திரிந்தும் அவருக்கு வேறு வேலைக் கிடைக்கவில்லை. அந்த சூழலில் முதலாளி, சசிந்தரனே கடையை குத்தகைக்கு எடுத்து நடத்துமாறு கூற அதனை சவாலாக எடுத்துக்கொண்டு கடையை கையகப்படுத்தினார் சுசிந்திரன்.

தொடக்கத்தில் வியாபாரம் பெரிதாக இல்லை என்றாலும் சில மாதங்களில் அவரால் வருமானம் ஈட்ட முடிந்தது. தான் கல்லூரி காலத்தில் காதலித்த சுபா என்ற பெண்ணை 2001ம் ஆண்டு திருமணம் செய்திகொள்கிறார்.

2004 நவம்பர் மாதம் 20 பேர் கொண்ட கும்பலால் தனது வீட்டில் தாக்கப்பட்டார் சசிந்திரன். படுகயமடைந்தவருக்கு உதவ சரியான மருத்துவ சிகிச்சைக் கூட அந்த நாட்டில் அப்போது இல்லை. ஒரு இராணுவ மருத்துவர் சசிந்திரனுக்கு மருத்துவம் செய்கிறார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு நியூ கினியாவில் இருக்க விருப்பமில்லாமல் ஆஸ்திரேலியா செல்ல முடிவு செய்கிறார் சசிந்திரன். ஆனால் காலசூழலால் அவர் மீண்டும் நியூ கினியாவுக்கே வரவேண்டிய நிலை உருவானது.

இப்போது அவரது கடையும் நன்றாக வியாபாரமானதால் இங்கேயே தங்குகிறார். மேலும் உள்ளூர் மக்களிடமும் அவருக்கு நன்மதிப்பு இருந்தது.

வியாபாரத்தை பெருக்குவதற்காக வெவ்வேறு பகுதிகளில் புதிய கிளைகளைத் தொடங்கினர். நியூ கினியாவின் கிராமங்களுக்கு சென்று பொருட்களை நேரடியாக விற்பனை செய்தனர். சாலைவசதி கூட இல்லாத வறுமை நிறைந்த கிராமங்கள் இவரது மனதை உலுக்கின.

சிங்கப்பூர் சென்று தலைமைத்துவ வகுப்புகளில் பங்கேற்றவர் அவற்றை உள்ளூர் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.

ஒரு தொழிலதிபர் என்பதில் இருந்து அவர் மீதான பார்வை மாறத்தொடங்கியது. சசிந்திரன் குறித்து தனது புத்தகத்தில் எழுத்தாளர் லக்‌ஷ்மி சரவணக்குமார் இவ்வாறு குறிப்பிடுகிறார்,

"லாபத்தை மட்டுமே நோக்கமாகக்கொண்ட வியாபாரியிலிருந்து சசிந்திரன் மாதிரியானவர்கள் வேறுபட்டவர்கள்.

தனது லாபத்தில் ஒரு பங்கை மக்களுக்கே திருப்பித் தரும் நோக்கத்தோடு கிராமங்களில் கல்விக்கூடங்களைக் கட்டிக் கொடுக்கிறார்.

ஏராளமான கிராமங்களிலிருந்து மக்கள் தங்கள் ஊர்களுக்கும் உதவிகள் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்க, யாருக்கும் முகம் சுளிக்காமல் உதவிகளைச் செய்யத் தொடங்குகிறார். "

சசிந்திரன் செல்வாக்கு மக்களிடத்தில் உயர ஒரு பழங்குடி கிராம மக்கள் அவரை தங்கள் இனக்குழுவில் ஒருவராகத் தத்தெடுத்துக்கொள்கின்றனர். ஒரு பழங்குடி சமூகத்தில் இப்படியான ஒரு நிகழ்வு அரிதிலும் அரிதானது என்கிறார் லக்‌ஷ்மி சரவணக்குமார்.

2012ம் ஆண்டு உள்ளூர் மக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நியூ மேற்கு பிரிட்டன் மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடுகிறார். மக்கள் அவரை பெரும்பாண்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

மக்கள் எல்லாரும் பழங்குடி வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். வேற்றுமதத்தைச் சேர்ந்த ஒருவர், இந்திய வம்சாவளி ஒருவர் கவர்னராவது நியூ கினியா வரலாற்றில் அதுவே முதன்முறை.

அவரது சிறந்த நிர்வாகத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் தொடர்ந்து அவருக்கு வக்களித்துவர இன்றுவரை கவர்னர் பதவியில் நீடித்து வருகிறார் முத்துவேல் சசிந்திரன்.

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சீரான வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார் சசிந்திரன். மொத்த உலகை விடவும் 15 ஆண்டுகள் பின்தங்கியிருக்கும் பப்புவா நியூ கினியாவில் வளர்சிக்கான விதைகளை விதைத்து அவர் தமிழராக நமக்கு பெருமை தேடித்தந்திருக்கிறார்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?