Internship செய்பவர்களுக்கு மாதம் 7 லட்சம் வழங்கும் நிறுவனங்கள் - வாவ் தக்வல்! Representative
Wow News

Internship செய்பவர்களுக்கு மாதம் 7 லட்சம் வழங்கும் நிறுவனங்கள் - வாவ் தகவல்!

Antony Ajay R

ஒரு நல்ல வேலையில் சேருவதற்கு ஒரு கல்லூரி மாணவருக்கு படிப்பைப் போலவே படிக்கும் காலத்தில் செய்யும் இன்டர்ன்ஷிப்பில் இருந்து கிடைக்கும் 'letter of recommendation', ‘certificate’, or ‘experience’-உம் முக்கியமானதாக இருக்கிறது.

நல்ல நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால் மாணவர்கள் இன்டர்ன்ஷிப் காலத்தில் பொருளாதார சிக்கலை கையாளுவது கடினமான ஒன்றாக உள்ளது.

பல நிறுவனங்கள் இன்டர்ன்ஷிப் செய்யும் இளைஞர்களுக்கு மிகமிகக் குறைந்த தொகையையே வழங்குகின்றன. சில நிறுவனங்கள் அதுக்கூட கொடுப்பதில்லை.

எனினும் சில மாணவர்களால் முறையாக பணம் கொடுக்கும் இன்டர்ன்ஷிபையும் கண்டுபிடிக்க முடியும். இந்தியாவில் இப்படிக்கிடைக்கும் பணம் மாணவர்களின் அன்றாட செலவுகளுக்கு போதுமானதாக இருக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் உள்ள சில நிறுவனங்களில் நிலைமை வேறானது. இன்டர்ன்ஷிப் செய்பவர்களுக்கு மாதம் 7 லட்சம் வரை பணம் கொடுக்கப்படுகிறது.

இவை ஏதோ முன்பின் தெரியாத நிறுவனங்கள் அல்ல, அமேசான், மைக்ரோசாஃப்ட், மெட்டா போன்ற நிறுவனங்களும் இதனை பின்பற்றுகின்றன.

நிறுவனங்கள் அதிக சம்பளத்துக்கு பணியாளர்களை சேர்பதற்கு பதிலாக நல்ல தொகைக்கு இண்டர்களை சேர்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் நிறுவனங்களுக்கு பல வகைகளில் செலவுகள் குறையும்.

கிளாஸ்டோர் என்ற நிறுவனம் எங்கெல்லாம் இன்டர்ன்ஷிப்புக்கு அதிக தொகை கிடைக்கும் என பட்டியலிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் சராசரியாக மாதம் இந்திய மதிப்பில் 7 லட்சம் ரூபாய் வழங்குகின்றன.

இந்த பட்டியலில் முதலிடத்தில் முதலிடத்தில் இருக்கும் Stripe நிறுவனம் 7.40 லட்சம் வழங்குகிறது.

டாப் 25 நிறுவனங்கள்

Stripe: $9,064 (around Rs 7.40 lakhs)

Roblox: $9,017 (around Rs 7.37 lakhs)

NVIDIA: $8,280 (around Rs 6.77 lakhs)

Coinbase: $8,206 (around Rs 6.70 lakhs)

Meta: $8,160 (around Rs 6.67 lakhs)

Capital One: $8,050 (around Rs 6,58 lakhs)

Credit Suisse: $7,947 (around 6.49 lakhs)

Bain & Company: $7,873 (around Rs 6.43 lakhs)

Amazon: $7,809 (around Rs 6.38 lakhs)

EY: $7,651 (around Rs 6.25 lakhs)

TikTok: $7,619 (around Rs 6.22 lakhs)

Adobe: $7,568 (around Rs 6.18 lakhs)

Snapchat: $7,520 (around Rs 6.14 lakhs)

HubSpot: $7,477 (around Rs 6.11 lakhs)

Splunk: $7,375 (around Rs 6 lakhs)

LinkedIn: $7,360 (around Rs 6.01 lakhs)

Twitter: $7,290 (around Rs 5.96 lakhs)

BlackRock: $7,270 (around Rs 5.94 lakhs)

JPMorgan: $7,188 (around Rs 5.87 lakhs)

McKinsey & Company: $7,170 (around Rs 5.86 lakhs)

Uber: $7,090 (around Rs 5.79 lakhs)

Citi: $7,025 (around Rs 5.74 lakhs)

ServiceNow: $6,989 (around Rs 5.71 lakhs)

Rivian: $6,988 (around Rs 5.71 lakhs)

Microsoft: $6,934 (around Rs 5.66 lakhs)

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?