இந்தியாவில் பல தாஜ்மஹால் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஷாஜகான் கூட கருப்பு நிறத்தில் ஒரு தாஜ்மஹாலை எழுப்ப முயன்றதாக வரலாறு கூறுகிறது.
தவிர, பல தாஜ்மஹால் போன்ற கட்டடங்கள் இந்தியாவில் எழுந்துள்ளன. அவை ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால் போல பிரம்மாண்டமாக இருக்கவில்லை.
அப்படிப்பட்ட ஒரு தாஜ்மஹால் போபாலிலும் உள்ளது. ஆனால் இதனை பேய் தாஜ்மஹால் என்கின்றனர்.
இது முதலில் போபால் பேகம்களின் இல்லமாக இருந்தது. அதன் பிறகு இந்தியாவில் மிகப் பெரிய கோட்டைகளில் ஒன்றானது.
மிகப் பெரியதாகவும் சிறந்த கட்டடக்கலையுடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோட்டை மீது ஆங்கிலேயர்கள் கண்கள்பட்டது.
இந்த கோட்டைக்கு பெயரை மாற்ற முடிவு செய்த ஆங்கிலேயர்கள், தாஜ்மஹால் கோட்டை என அழைத்தனர்.
இப்போது பார்க்கவே பயங்கரமாக இருக்கும் இந்த கோட்டையில் பாலிவுட் படங்களை எடுத்துள்ளனர்.
'ஸ்த்ரீ’ என்ற படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் பயணியாளர்கள் அந்த கோட்டையில் 'நெகடிவ் எனர்ஜி'யை உணர்ந்ததாக கூறியுள்ளனர்.
இப்போது தாஜ்மஹால் கோட்டை பார்க்கவே பயங்கரமாக சிதைந்த நிலையில் காணப்படுறது. இந்த கோட்டையில் பேய் நடமாட்டம் இருப்பதாக உள்ளூர்வாசிகள் அஞ்சுகின்றனர்.
இந்த கோட்டைக்கு பார்வையாளர்கள் கூட யாருமில்லை. உள்ளூர்காரர்களின் பேய் கதைகளை நம்பாதவர்கள் மட்டும் அவ்வப்போது அங்கு செல்கின்றனர்.
அந்த கோட்டையை மத்தியபிரதேச அரசு பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது. சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டாலும், பெரிதாக எதுவும் மாறவில்லை. கோட்டையை பாரம்பரிய உணவகமாக மாற்றுவதற்கு பேச்சுகள் எழுந்திருக்கின்றன.
ஒரு காலத்தில் அழகு மிகுதியாக பிரிட்டிஷ் காரர்களின் கண்பட்ட இந்த கட்டடம் காண்பதற்கு ஆளில்லாமல் கிடக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust