Travel Pexels
Wow News

உங்கள் ஸ்மார்ட்போனை விட மலிவான செலவில் இந்த உலக நாடுகளுக்கு செல்லலாம்

NewsSense Editorial Team

செல்போன் சந்தையில் புதிது புதிதாக அறிமுகமாகும் லேட்டஸ்ட் வெர்ஷன் ஸ்மார்ட்போனை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பலர், அதற்காக பல ஆயிரக்கணக்கான ரூபாயைச் செலவிடுகிறார்கள். சிலர், லட்சத்திலும் செலவிடுகிறார்கள்... இதுபோன்ற காஸ்ட்லியான போனை நீங்கள் வாங்கினாலும், அதில் விளையாடும் மகிழ்ச்சி, அதிகபட்சம் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் நீடிக்கலாம். பின்னர் அது போரடித்துவிடும். பின்னர் அது போரடித்துவிடும்.

ஆனால், இந்த போன் வாங்குவதற்கான பட்ஜெட்டிலோ அல்லது அதனைக்காட்டிலும் குறைவான செலவிலேயே, உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து மகிழக்கூடிய அற்புதமான தருணங்களை தரும் ஒரு வெளிநாட்டு டூர் சென்று வந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள்... நினைக்கவே ஆனந்தமாக இருக்கிறதல்லவா..?

அத்தகைய ஆனந்தத்தை சுமார் 40,000 ரூபாய்க்கும் குறைவான செலவிலேயே சென்று அனுபவித்துவிட்டு வரக்கூடிய, இந்தியாவைச் சுற்றி உள்ள சில அற்புதமான இடங்கள் இங்கே...

தாய்லாந்து

தாய்லாந்து

விடுமுறையை மிகக் குதூகலமாக கொண்டாடி அனுபவிக்கக்கூடிய உலகின் மிகச் சிறந்த இடங்களில் ஒன்று தாய்லாந்து. அழகான கடற்கரைகள், பிரம்மாண்டமான மலைகள் மற்றும் கலைநயமிக்க அற்புதமான கோயில்கள்... என பார்ப்பவரின் மனதை கொள்ளைக் கொண்டுவிடக் கூடியது தாய்லாந்து. இந்தியாவிலிருந்து தாய்லாந்து செல்வதற்கான விமான கட்டணம் ரூ. 15,000 முதல் 20,000 வரைதான் ஆகும். தாய்லாந்துக்கான 5 நாள் முழுமையான டூர் பேக்கேஜ், வெறும் 30,000 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என்பதால், பட்ஜெட் போட்டு வெளிநாடு டூர் செல்ல விரும்பும் இந்தியர்களின் முதல் தேர்வாக இருப்பது தாய்லாந்துதான்.

இலங்கை

இலங்கை

இந்தியாவில் இருந்து மிகக் குறைந்த செலவில் சென்று வரக்கூடிய வெளிநாடுகளில் ஒன்றாக இருப்பது இலங்கை. தாய்லாந்தைப் போன்றே பட்ஜெட் போட்டு வெளிநாடு டூர் செல்ல விரும்பும் இந்தியர்களின் இன்னொரு சாய்ஸ் இலங்கை.

டெல்லியில் இருந்து இலங்கை சென்று திரும்பி வருவதற்கான விமான கட்டணம் சுமார் 20,000 ரூபாய் மட்டுமே. அதிலும் சென்னை, திருச்சி போன்ற இடங்களிலிருந்தும் இலங்கைக்கு விமானம் இயக்கப்படுவதால், தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்களுக்கு இன்னும் குறைவான செலவே ஆகும். இலங்கையின் தேயிலை தோட்டங்களின் நறுமணமும் அந்த நாட்டுக்கே உண்டான உள்ளூர் உணவு வகைகளும், இலங்கைக்குச் சென்று வந்த பின்னரும் கூட உங்கள் நாசித்துவாரத்தை நீண்ட நாட்களுக்கு கிறங்கடிக்கச் செய்து கொண்டிருக்கும்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் டூருக்கு மிக அதிக செலவாகும் என நீங்கள் நினைத்தால், அது தவறில்லைதான். ஆனால், சில சின்னச் சின்ன தந்திரங்கள் மற்றும் " எதையும் பிளான் பண்ணி செய்யணும்..." னு நம்ம வடிவேலு சொல்கிற மாதிரி, நல்ல திட்டமிடல் மூலம், குறைந்த பட்ஜெட்டிலேயே கலர்ஃபுல்லாக இருக்கும் சிங்கப்பூர் சென்று வரலாம்.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று வருவதற்கான விமான கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 22,000 முதல் 25,000 வரை ஆகும். கண்கவரும் கட்டடங்கள், அழகிய கடற்கரைகள், ஷாப்பிங் மால்கள் எனச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற பல பிக்னிக் ஸ்பாட்டுகளைக் கொண்டுள்ளது அழகான மற்றும் மிகச் சிறிய தேசமான சிங்கப்பூர். பார்த்தவுடன் ஈர்க்கக்கூடிய வசீகரம், வண்ணமயமான சாலைகளின் கலவை என நவீன நகரான சிங்கப்பூர் உங்கள் உள்ளத்தை நிச்சயம் கொள்ளைக் கொள்ளும்!

சீஷெல்ஸ்

சீஷெல்ஸ்

இந்தியாவில் இருந்து செல்லக்கூடிய மற்றொரு பிரபலமான குறைந்த பட்ஜெட்டிலான

வெளிநாட்டு டூரிங் ஸ்பாட் என்றால் அது சீஷெல்ஸ்தான். இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டம்தான் சீஷெல்ஸ் குடியரசு நாடு. மொத்தம் 115 தீவுகள். இந்தியப் பெருங்கடலின் நீல வண்ண தோற்றமும் அழகிய கடற்கரைகளுமாக காட்சியளிக்கும் சீஷெல்ஸை, ஆப்பிரிக்காவின் பூலோக சொர்க்கம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அது அழகாக காட்சியளிக்கும். இந்தியாவிலிருந்து செல்வதற்கான விமான செலவு ரூ. 36,000 அல்லது அதற்கு கொஞ்சம் கூடுதலாக ஆகும்.

பூட்டான்

பூட்டான்

உலகின் இயற்கை எழில் கொஞ்சும் நாடுகளில் ஒன்றான பூட்டான், இயற்கை அன்னையின் அனைத்து அழகையும் தன்னகத்தே கொண்ட நாடு என்றால் மிகையல்ல. குறிப்பாக இந்த தேசம், இயற்கை அதிசயங்களால் நிரம்பிய தேசம் என்றே குறிப்பிடலாம். இந்தியாவில் இருந்து மலிவான செலவில் சென்று வரக்கூடிய மற்றுமொரு சிறந்த சர்வதேச டூரிஸ்ட் ஸ்பாட்டாக பூட்டான் கருதப்படுகிறது. இந்தியாவிலிருந்து பூட்டானுக்கு நேரடி விமானம் அவ்வளவாக இல்லை என்றாலும்,பூடான் எல்லைக்கு மிக அருகில் உள்ள இந்திய விமான நிலையமான பாக்டோக்ரா என்ற இடத்திற்கு சென்று, அங்கிருந்து சுமார் 5 மணி நேரம் எடுக்கும் பேருந்து பயணம் மூலம் நீங்கள் பூட்டான் சென்று வரலாம்..!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?