Beast Vijay Twitter
Wow News

ரா : இந்தியாவின் உளவு அமைப்பான RAW-ல் சேர விருப்பமா? இந்த கட்டுரை உங்களுக்கானதுதான்

Govind

ஹாலிவுட் படங்களில் ஒரு வழக்கமான கிளிஷே காட்சியைப் பார்த்திருப்பீர்கள். இராணுவத்திலோ, சிஐஏ விலோ சாகசம் செய்து விட்டு பிறக உள் அரசியலால் கோபித்துக் கொண்டு குட்பை சொல்லிவிட்டு ஹீரே ஏதோ ஒரு காட்டுப் பங்களாவில் நாய்க் குட்டியோடு வாழ்வார்.

திடீரென்று ஒரு நாள் அவரது வீட்டு முற்றத்தில் ஒரு பெரிய கார் வந்து நிற்கும். கோட்டு சூட்டு போட்ட மனிதர்கள் ஹீரோவிடம் நாடு பெரும் ஆபத்தில் இருக்கிறது, அதிபர் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது, மீண்டும் பணிக்கு வா என்பார்கள். அலட்சியமாக வரமாட்டேன் என்று சொல்லும் ஹீரோவிடம் ஒரு விசிட்டிங் கார்டு கொடுத்து விட்டு மூடு வந்தால் தொடர்பு கொள் என்பார்கள்.

கரெக்டாக அடுத்தநாள் காலையில் பெட்டி படுக்கையுடன் ஹீரோ தேசத்தைக் காப்பாற்ற கமாண்டோ விமானத்தில் சிகரட்டை பிடித்தவாறு பறந்து கொண்டிருப்பார்.

கிட்டத்தட்ட பீஸ்ட் படத்திலும் விஜயின் பாத்திரம் அதுதான். ரா எனப்படும் இந்திய உளவுத்துறையில் பணியாற்றிக் கோபித்துக் கொண்டு காட்டுக்குப் பதில் நகரத்தில் வாழ்வார். பிளாஷ்பேக்கில் பாகிஸ்தானின் தனி விமானத்தில் பறப்பது, தீவிரவாதியைப் பிடிப்பது, வானத்தில் வீடியோ கேம் விமான சண்டைகள் போடுவது என்று பில்ட்அப் காட்சிகள் வரும்.

சென்னை ஷாப்பிங் மாலில் மாட்டிக் கொண்ட பணயக் கைதிகளை "டை ஹார்டு" புரூஸ் வில்ஸ் போல தானே சாகசம் செய்து மீட்பார். தேசிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சொன்ன ஆலோசனைகளை துச்சமாக மதித்து இயக்குநர் நெல்சன் சொல்லிக் கொடுத்தது போல அதிரடி சாகசங்கள் செய்வார்.

இதெல்லாம் பார்த்தால் ரா ஏஜெண்டுக்கு இவ்வளவு பவர் உண்டா? கெத்து உண்டா? நினைத்ததெல்லாம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழும். உண்மையில் ரா ஏஜென்சியைப் பற்றி பொதுவான விவரங்கள்தான் பொதுவெளிக்குத் தெரியுமே அன்றி அதன் முழு செயல்பாடும் பொதுவெளிக்கு வந்ததில்ல. விஜய் போல உண்மையில் ஒரு ரா ஏஜெண்ட் அப்படி சாகசம் நடத்துவதெல்லாம் இயக்குநர் நெல்சனின் லீலைகள்தானே தவிர மற்றபடி சாத்தியமே இல்லை.

ஏனெனில் ராவின் அமைப்பும், செயல்பாடும், அதன் ஊழியர் கொள்கை, பொறுப்பும் இரகசியமானவை. முதலில் யாரும் நினைத்தால் கூட ரா வில் சேர முடியாது. மாறாக இந்திய பாதுகாப்புப் படைகளில் பணியாற்றும் புத்திசாலிகளை ரா வே வந்து எடுத்துக் கொள்ளும்.

Beast

ரா ஏஜென்சியின் வரலாறு

1968 வரை இந்தியாவின் வெளிநாட்டு உளவுத் தகவல் பணியை இன்டெலிஜென்ஸ் பீரோ எனப்படும் புலனாய்வுப் பணியகம் கையாண்டது. 1962 சீனப்போரில் இந்தியா தோல்வியடைந்த பிறகு இந்த உளவுத்துறையின் தோல்வி தெரிய வந்தது. அதன் பிறகே தனிச்சிறப்பாக வெளிநாட்டு உளவுப் பணிகளை மேற்கொள்ள ஒரு பிரிவு தேவை என இந்திய அரசு உணர்ந்தது.

இப்படித்தான் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவான ரா நிறுவப்பட்டது the Research and Analysis Wing (RAW) . ஆரம்பத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு பணி புரிந்த ரா தற்போது தனது பணி எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறது.

பல வெளியுறவுக் கொள்கை வெற்றிகளுக்கு பங்களித்ததாக ரா கூறிக் கொள்கிறது. 1971 இல் பங்களாதேஷ் உருவாக்கம், ஆப்கானிஸ்தானில் இந்திய செல்வாக்கு அதிகரித்தல், 1975 இல் சிக்கிம் இந்தியாவுடன் இணைதல், இந்தியாவின் அணுசக்தி திட்டப் பாதுகாப்பு, அமெரிக்க – சோவியத் யூனியன் கெடுபிடிப் போரின் போது ஆப்ரிக்க விடுதலை இயக்கங்களின் வெற்றி போன்றவற்றில் தனது பங்கிருப்பதாக ரா கூறுகிறது. இதில் பாகிஸ்தான் தீவிரவாதம் என்பது பான் இந்தியப் படங்களுக்குப் பொருத்தமாக இருக்குமென்பதால் இயக்குநர் நெல்சன் குழு அதைத் தேர்வு செய்திருக்கிறது.

ராவின் முதல் தலைவரான ராமேஷ்வர் நாத் காவ் 1977 இல் ஓய்வு பெறும் வரை ஏஜென்சிக்கு தலைமை தாங்கினார். ராவின் ஆரம்பக் கால வெற்றிகளுக்கு இவர் தலைமையிலான குழுவே காரணம். வெளிநாடுகளில் உள்ள ஒவ்வொரு இந்தியத் தூதரகங்களிலும் ரா ஏஜெண்டுகளை நியமித்து இந்தியாவின் முதன்மையான உளவுத்துறை நிறுவனமாக ரா வை ராமேஷ்வர் மாற்றினார். இருப்பினும் மற்ற ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமை, பலவீனமான புலனாய்வுத் திறன்கள், முழுமையான வெளிப்படைத் திறன் இல்லாமை காரணமாக ரா விமர்சிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் 250 பணியாளர்களுடன் சுமார் 4 இலட்சம் டாலர் நிதியுடன் ரா துவங்கப்பட்டது. தற்போது ரா வில் 10,000 ஏஜெண்டுகள் மற்றும் வல்லுநர்கள் பணியாற்றுவதாகவும், ரா வின் வரவு செலவு மதிப்பு 145 மில்லியன் டாலர் என்றும் அமெரிக்க நிறுவனம் ஒன்று மதிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் சிஐஏ, பிரிட்டனின் எம்ஐ6 போன்ற உளவுத்துறை அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கின்றன. ரா வின் தலைவரோ பிரதமர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அமைச்சரவை செயலகத்தில் ஒரு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப நாட்களிலிருந்து, ரா இஸ்ரேலின் வெளிப்புற உளவு நிறுவனமான மொசாத்துடன் ஒரு இரகசிய தொடர்பு உறவைக் கொண்டிருந்தது. மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவைப் பற்றிய இஸ்ரேலின் அறிவிலிருந்து பயனடைவதும், அதன் பயங்கரவாத எதிர்ப்பு நுட்பங்களிலிருந்து கற்றுக்கொள்வதும் முக்கிய நோக்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

விடுதலை புலிகள்

பங்களாதேஷ், மியான்மர் மற்றும் இலங்கையில் ரா வின் பங்கு

வங்காள தேசத்தின் விடுதலைக்காகப் போராடும் கிழக்கு பாகிஸ்தானியர்களின் குழுவான முக்தி பாஹினிக்கு ரா பயிற்சி அளித்து ஆயுதம் கொடுத்தது. 1975 இல் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் இந்தியாவுடன் இணைவதற்கு ரா வழிவகுத்தது, மேலும் மியான்மாரில் சீனா சார்பு ஆட்சிக்கு விரோதமான கச்சின் சுதந்திர இராணுவம் போன்ற குழுக்களுக்கு இராணுவ உதவியை வழங்கியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இலங்கையில் தமிழ் பிரிவினைவாதக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) கிடைத்த ஆதரவுதான் மனித உரிமை அமைப்புகளிடம் இருந்து ரா வுக்கு அதிக விமர்சனங்களைக் கொண்டு வந்தது. ரா 1970 களில் புலிகளுக்குப் பயிற்சி அளித்து ஆயுதம் வழங்க உதவியது. ஆனால் 1980 களில் குழுவின் பயங்கரவாத நடவடிக்கைகள் வளர்ந்த பிறகு ரா இந்த ஆதரவைத் திரும்பப் பெற்றது. ஈழ ஆதரவாளர்கள், விடுதலைப் புலிகள் உள்ளிட்டுப் போராளிக் குழுக்களில் ஊடுருவி விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்ததே ரா ஏஜென்சியின் பங்குதான் என்று விமர்சிக்கிறார்கள்.

KAHD

1 ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இரகசிய நடவடிக்கை

1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து ரா ஆப்கானிஸ்தான் புலனாய்வு அமைப்பான KHAD உடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.1980 களின் முற்பகுதியில் ரா, KHAD மற்றும் சோவியத் KGB ஆகியவை அடங்கிய முத்தரப்பு ஒத்துழைப்புக்கான அடித்தளம் அமைக்கப்பட்டபோது இந்த உறவு மேலும் பலப்படுத்தப்பட்டது.

1980 களின் நடுப்பகுதியில், RAW அதன் சொந்த இரண்டு இரகசிய குழுக்களை அமைத்தது. எதிர் புலனாய்வுக் குழு-எக்ஸ் (சிஐடி-எக்ஸ்) மற்றும் எதிர் புலனாய்வுக் குழு-ஜே (சிஐடி-ஜே). முதல் குழு பாகிஸ்தானைக் குறிவைத்தது. இரண்டாவது காலிஸ்தானி குழுக்களை நோக்கி இயக்கப்பட்டது. பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு குழுக்களும் பொறுப்பேற்றுள்ளன என்று பாகிஸ்தான் ராணுவ நிபுணர் ஆயிஷா சித்திக் எழுதுகிறார்.

கடந்த காலங்களில், தனி நாடு கோரும் சிந்தி தேசியவாதிகளை ரா ஆதரிப்பதாகவும், பாகிஸ்தானின் பஞ்சாபைப் பிரித்துத் தனி செராக்கி மாநிலத்தை உருவாக்க செராக்கிகள் அழைப்பு விடுத்ததாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுக்கிறது. எவ்வாறாயினும், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கும், ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான படைகளுக்கும் இந்தியா ஆதரவளித்து வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்க சிஐஏ

அமெரிக்க சிஐஏ உடனான உறவுகள்

ரா வை உருவாக்க சிஐஏ உதவியதாக பரூக்கிங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தெற்காசிய நிபுணர் ஸ்டீபன் பி. கோஹன் கூறுகிறார். இருப்பினும், சிஐஏ உடனான இந்தியாவின் உளவுத்துறை உறவுகள் ரா இருப்பதற்கு முன்பே தொடங்கியது. 1962 இல் இந்தியா சீனாவுடனான போருக்குப் பிறகு, சிஐஏ பயிற்றுவிப்பார்கள் ஸ்தாபனம் 22 க்கு பயிற்சி அளித்தனர். இது இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகள் மத்தியிலிருந்து சீனாவில் ஆழமாக ஊடுருவி பயங்கரவாத நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்காக எழுப்பப்பட்ட ஒரு இரகசிய அமைப்பு என்று கூறப்படுகிறது.

ஒரு எதிரிக்கு எதிராகப் பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு சிஐஏ பயிற்சி அளித்தது, அதே நேரத்தில், ரா மற்றும் ஐபி அதிகாரிகளுக்கு அந்த பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சில நுட்பங்களில் பயிற்சி அளித்தது.

1997ல் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் தார்மீக அடிப்படையில் பாகிஸ்தானை இலக்காகக் கொண்ட இரண்டு ரா பிரிவுகளை மூடினார். குஜ்ராலுக்கு முன், பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், சீனா மற்றும் மியான்மாருடன் உறவைப் புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 1990 களின் முற்பகுதியில் ரா வின் கிழக்குப் பகுதி நடவடிக்கைகளை முடித்தார் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

RAW

ரா வில் உள்ள பலவீனங்கள்

1999 இல் இந்திய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் பாகிஸ்தான் ஆதரவு ஆயுதப் படைகளின் ஊடுருவல் ரா வின் செயல்திறன் பற்றிய கேள்விகளைத் தூண்டியது. சில ஆய்வாளர்கள் மோதலை உளவுத்துறை தோல்வியாகக் கண்டனர். இருப்பினும், ரா அதிகாரிகள் தாங்கள் உளவுத்துறை தகவல்களை வழங்கியதாக வாதிட்டனர்.

முன்னதாக, வெளிநாட்டில் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட ஒரே அமைப்பு ரா ஆகும். இப்போது, ஐபி மற்றும் டிஐஏ ஆகிய இரண்டும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் பெற்றுள்ளன. இது ரா வின் செல்வாக்கு குறைந்துள்ளதைக் காட்டுகின்றது.

மற்ற ஏஜென்சிகள், குறிப்பாக சிஐஏ மூலம் ரா வுக்குள் ஊடுருவியதாக அவ்வப்போது ஊடக அறிக்கைகள் வந்துள்ளன.

80களில் இருந்த ராவின் செல்வாக்கு இப்போது பெரிதும் குறைந்திருக்கிறது. 90 களில் பாகிஸ்தான் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவினர். விடுதலைப் புலிகள் ராவிற்கு எதிராக திரும்பினர். இந்தியா அணுகுண்டு வெடிப்பு சோதனை நடத்திய உடனே பாகிஸ்தானும் நடத்தியது.

மற்றபடி ரா ஒன்றும் சர்வ ரோக நிவாரணம் கொண்ட அமைப்பு அல்ல. அதன் செயல்பாட்டை யாரும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அறிய முடியாது. அதன் வரவு செலவு அறிக்கையைப் பாராளுமன்றத்தில் கூட வைக்க முடியாது. அது எப்படி ஆளெடுக்கிறது, எப்படி பயிற்சி கொடுக்கிறது என்பதெல்லாம் இரகசியம்.

இது போக ஒரு தனி ஏஜெண்ட் சாகசம் செய்வதெல்லாம் அமெரிக்காவின் சிஐஏ வில் கூட சாத்தியமில்லை எனும் போது இந்தியாவில் எப்படி சாத்தியம்? ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதி, தேசபக்தி, விமானச் சண்டை, ரா என்று சில பெயர்களைக் குலுக்கிப் போட்டு நெல்சன் ஒரு படத்தை எடுத்து விட்டார். அவ்வளவுதான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?