Representative Image Twitter
Wow News

1900 கி.மீ பயணம் - 8 ஆண்டுகளுக்கு பிறகு செல்ல நாயுடன் சேர்ந்த பெண் - ஒரு அடடே நிகழ்வு

நம்மை விட்டுச் சென்றதாக எண்ணிய உறவுகள் மீண்டும் வருவது மிக அரிது. அப்படி அரிதான நிகழ்வு தான் நடந்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த பெட்சி டிஹான் வாழ்வில். காணாமல் போன நாயுடன் மீண்டும் இணைவதற்காக 1900 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறார் பெட்ஸி.

Antony Ajay R

உங்கள் பள்ளிக் கால நெருங்கிய நண்பனை மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்த்திருக்கிறீர்களா? வார்த்தையால் விளக்க முடியாத ஆனந்தத்தை அளிக்கக் கூடிய அது மாதிரியான நிகழ்வுகள் எல்லார் வாழ்விலும் நடப்பது இல்லை. நம்மை விட்டுச் சென்றதாக எண்ணிய உறவுகள் மீண்டும் வருவது மிக அரிது. அப்படி அரிதான நிகழ்வு தான் நடந்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த பெட்சி டிஹான் வாழ்வில்.

காணாமல் போன நாயுடன் மீண்டும் இணைவதற்காக 1900 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறார் பெட்ஸி. இந்த கதை முடிந்ததும் ஆரம்பித்ததும் ஃப்ளோரிடாவில் தான்...

2013ம் ஆண்டு ஃப்ளோரிடாவில் வசித்து வந்த பெட்ஸி Lee County Domestic Animal Services என்ற தெரு நாய்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஏஜென்ஸி மூலமாக ஒரு பிட் புல் நாயைத் தத்தெடுத்தார். அதற்கு ஹார்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

ஒரு வருடம் அதனைச் செல்லமாக வளர்த்து வந்த பெட்ஸி 2014ம் ஆண்டு அதனைத் தவறவிட்டார்.

அவர் பாத்ரூம் சென்றிருந்த இடைவெளியில் அந்த நாய் காணாமல் போனதாக பெட்ஸி கூறியுள்ளார். அதன் பின் போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரம் கொடுப்பது வரை பல வகைகளில் அதனைத் தேடிப்பார்த்திருக்கிறார். ஆனால் ஹார்லி கிடைக்கவில்லை.

இனி ஹார்லி கிடைப்பான் என்கிற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த மிசூரி மாகாணத்துக்குக் குடி பெயர்ந்தார். அதன் பிறகு பெட்ஸி வேறு எந்த நாயும் வளர்க்கவில்லை.

கடந்த ஜூலை 2ம் தேதி பெட்ஸிக்கு Lee County Domestic Animal Services-ல் இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அப்போது பல நாட்கள் வெட்டப்படாத அதிக நீளமான நகங்களைக் கொண்ட பிட் புல் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர்.

அதன் தோலிலிருந்த மைக்ரோசிப் மூலம் அதன் உரிமையாளர்களைக் கண்டறிந்து பெட்ஸிக்கு அழைத்ததாக அவர்கள் கூறியதும், உற்சாகமடைந்த பெட்ஸி உடனடியாக மிசூரியில் இருந்து ஃப்ளோரிடாவுக்கு காரில் பயணம் செய்துள்ளார். 1900 கிலோ மீட்டர் சென்று ஜூலை 4ம் தேதி ஹார்லியுடன் மீண்டும் இணைந்தார் பெட்ஸி.

8 வருடங்கள் கழித்து மீண்டும் தனது செல்ல நாயுடன் இணைந்த பெட்ஸி அது மெலிந்திருப்பதைப் பார்த்து வருந்தியிருக்கிறார். "இனி இவனைப் பசித்திருக்க விட மாட்டேன்" என்று பெட்ஸி கூறியதாகச் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

பெட்ஸி - ஹார்லி மீண்டும் சேர உதவியாக இருந்த மைக்ரோ சிப் ஒரு அரிசி அளவு இருக்கும் கருவியாகும். இதனை நாயின் தோலில் பொருத்திவிட்டால் வாழ்நாள் முழுவதும் நாயின் உடலில் இருக்கும். இதில் உரிமையாளரின் விவரங்கள் இருக்கும். நாயைக் காண்பவர்கள் மீண்டும் உரிமையாளரிடம் கொண்டு சேர்க்க இதைப் பயன்படுத்தலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?