The Kerala Story: கேரள பெண்கள் சொல்வதென்ன? ரசிகர்களின் மாறுபட்ட கருத்துகள் - வைரல் வீடியோ!

கேரளாவில் உள்ள மக்கள் 'இது எங்கள் மாநிலமே அல்ல' எனக் கூறியுள்ளனர். மறுபக்கம் வட இந்தியாவில் ரியாலிட்டியை எடுத்துள்ளனர் போன்றக் கருத்துகளை சிலர் கூறுவதைக் காண முடிகிறது.
The Kerla Story: கேரள பெண்கள் சொல்வதென்ன? ரசிகர்களின் மாறுபட்ட கருத்துகள் - வைரல் வீடியோ
The Kerla Story: கேரள பெண்கள் சொல்வதென்ன? ரசிகர்களின் மாறுபட்ட கருத்துகள் - வைரல் வீடியோTwitter
Published on

இந்தியில் உருவாகி இந்தியா முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் கேரளா ஸ்டோரி. கடந்த ஆண்டு வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தைப் போலவே மிகுந்த சர்ச்சையுடன் இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே அரசியல் ரீதியிலான எதிர்ப்புகளை சம்பாதித்தது. இது கேரளாவின் அமைதியைக் குலைக்க எடுக்கப்பட்ட படம் என அம்மாநில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலரில் பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் என்றும், 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணங்கள்.

கேரளா ஸ்டோரி
கேரளா ஸ்டோரி

கேரளாவில் ஆட்சியில் இருக்கும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் இந்த படத்தை எதிர்த்தனர். இது சங்பரிவார் கும்பலால் உருவாக்கப்பட்டது எனக் கூறிவருகின்றனர்.

தமிழகத்திலும் இந்த படத்துக்கு எதிர்ப்பு இருந்ததால் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார்.

இத்தனை சர்ச்சைக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மக்களிடையே எத்தகைய வரவேற்பைப் பெற்றிருக்கிறது எனத் தெரியுமா?

கேரளா ஸ்டோரிஸ் படத்துக்கு ரிவியூ கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The Kerla Story: கேரள பெண்கள் சொல்வதென்ன? ரசிகர்களின் மாறுபட்ட கருத்துகள் - வைரல் வீடியோ
The Kerala Story : மே 5ல் வெளியாக இருக்கும் படம்; தடை செய்ய வலுக்கும் எதிர்ப்புகள் - ஏன்?

இந்தியா முழுவதும் வெளியாகியுள்ள இந்த படத்துக்கு டெல்லியில் ஓரளவு வரவேற்பு இருப்பதாகத் தெரிகிறது. ஊடகங்கள் கேரளா ஸ்டோரி படத்தை தவறான படம் என வெளிப்படையாக எழுதியிருக்கின்றன.

கேரளாவில் உள்ள மக்கள் இது எங்கள் மாநிலமே அல்ல எனக் கூறியுள்ளனர். மறுபக்கம் வட இந்தியாவில் ரியாலிட்டியை எடுத்துள்ளனர் போன்றக் கருத்துகளை சிலர் கூறுவதைக் காண முடிகிறது.

The Kerla Story: கேரள பெண்கள் சொல்வதென்ன? ரசிகர்களின் மாறுபட்ட கருத்துகள் - வைரல் வீடியோ
ஆர் ஆர் ஆர், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களுக்கு ஆஸ்கார் இல்லையா? தேர்வான குஜராத்தி திரைப்படம்

"இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் இந்தியாவில் அனைவரும் பார்க்க வேண்டும். கேரள பெண்களுக்கு உதவ வேண்டும்" என ஒரு டெல்லி இளைஞர் கூறுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

நேர்மாறாக கேரள பெண்கள், "எந்த கடவுளையும் நம்பவும் மறுக்கவும் சுதந்திரம் உள்ள நாடு கேரளம். மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருக்கும் கேரளத்தின் மீது தவறான அபிப்பிராயத்தை உருவாக்குவதாக இந்த படம் இருப்பது சரியானதாக தோன்றவில்லை" எனக் கூறியுள்ளனர்.

The Kerla Story: கேரள பெண்கள் சொல்வதென்ன? ரசிகர்களின் மாறுபட்ட கருத்துகள் - வைரல் வீடியோ
கேரளா : இளைஞரை மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக இயக்குநர் கைது - என்ன நடந்தது?

முழு வீடியோவைப் பார்க்க,

The Kerla Story: கேரள பெண்கள் சொல்வதென்ன? ரசிகர்களின் மாறுபட்ட கருத்துகள் - வைரல் வீடியோ
IFFI : "இந்த திரைப்படம் நாகரீகமற்றது" - காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை விளாசிய நடுவர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com